பாஜக கூட்டணிக்கு வரவேற்பு முதல் முதல்வருக்கு கண்டனம் வரை.. AIADMK செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

BJP Alliance Approved By AIADMK Executive Committee Meeting | சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், பாஜக கூட்டணிக்கு அங்கீகாரம் வழங்குதல் உள்ளிட்ட மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பாஜக கூட்டணிக்கு வரவேற்பு முதல் முதல்வருக்கு கண்டனம் வரை.. AIADMK செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

கோப்பு புகைப்படம்

Updated On: 

02 May 2025 20:53 PM

சென்னை, மே 2 : பாரதிய ஜனதா கட்சி (BJP – Bharatiya Janata Party) உடன் கூட்டணி அமைத்ததை அங்கீகரிப்பதாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக (AIADMK – All India Anna aDravida Munnetra Kazhagam) செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மேலும், நீட் (NEET – National Entrance Eligibility Test) விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (Tamil Nadu Chief Minister CM MK Stalin) மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது உள்ளிட்ட மொத்தம் 16 தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த நிலையில், 16 தீர்மானங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சென்னையில் நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டம்

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அந்த கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயற்குழு கூட்டம் இன்று (மே 2, 2025) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள் என மொத்தம் 370-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த நிலையில், இந்த கூட்டத்தில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில், அதிமுக – பாஜக கூட்டணிக்கு அங்கீகாரம், முதலமைச்சர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் இடம் பெற்றுள்ளன.

அதிமுக செயற்குழு கூட்டத்தி நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்கள்

அதிமுக செயற்குழு தீர்மானங்களில், திமுக என்கிற பொது எதிரியை விரட்டுவதற்காக ஒத்த கருத்துடைய அரசியல் கட்சிகளை கூட்டணியில் இடம் பெற செய்து மெகா கூட்டணி அமைப்பதற்கு யூகம் வகுத்து வரும் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு. 2021 சட்டமன்ற தேர்தலில் 525 வாக்குறுதிகளை அளித்து அவற்றை நிறைவேற்ற முடியாமல் தவறான தகவல்களை தந்து அனைத்து தரப்பு மக்களையும் ஏமாற்றி, வஞ்சிக்கும் திமுக அரசுக்கு கண்டனம். நீட் விவகாரத்தில் மாணவர் சமுதாயத்திடமும் அவர்கள் பெற்றோர்களிடமும் தமிழக மக்களிடமும் திமுக தலைவர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் உள்ளிட்ட 16 தீர்மானங்கள் அதிமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.