Train Accident : சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து.. அரக்கோணத்தில் பரபரப்பு!

Arakkonam Goods Train Accident | அரக்கோணத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து அரக்கோணம் நோக்கி சென்றுக்கொண்டு இருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து வந்த அதிகாரிகள் ரயிலை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Train Accident : சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து.. அரக்கோணத்தில் பரபரப்பு!

ரயில் விபத்து

Updated On: 

22 May 2025 20:46 PM

சென்னை, மே 22 : சென்னையில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு அரக்கோணம் வழியாக சென்றுக்கொண்டிருந்த சரக்கு ரயில் (Goods Train), அரக்கோணத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. சரக்கு ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்ட நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தடம் புரண்ட சரக்கு ரயிலை சரி செய்யும் பணியில் ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கி சென்ற ரயில் – தடம் புரண்டு விபத்து

இன்று (மே 22, 2205) சென்னையில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு அரக்கோணம் வழியாக சரக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் ரயில் அரக்கோணம் அருகே சென்றபோது தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக, சென்னையில் இருந்து அரக்கோணம் வழியாக திருவனந்தபுரம் செல்லும் விரைவில் கடம்பதூரில் சுமார் 40 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. இதே போல சென்னையில் இருந்து பெங்களூரு சென்ற லால்பாக் விரைவு ரயில் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டது. மேலும் சென்னையில் இருந்து திருத்தணி சென்ற மின்சார ரயிலும் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

அரக்கோணத்தில் தடம் புரண்ட ரயில் – மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் அதிகாரிகள்

சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான நிலையில், பயணிகள் ரயில் நடுவழியில் நிறுத்தி வைக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், அரக்கோணத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த ரயில்வே துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் தடம் புரண்டதை அறிந்தது உடனடியாக ரயில் நிறுத்தப்பட்ட நிலையில், இந்த விபத்தில் யாருக்கும் எந்த சேதமும் ஏற்படவில்லை. அரக்கோணத்தில் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.