Vaibhav Suryavanshi : இந்த முறை டக் அவுட்.. சூர்யவன்ஷியை துரத்தும் அழுத்தம்? பாலிவுட் நடிகர் சொன்ன குட் பாய்ண்ட்!
Suryavanshi's Duck Out : ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டக் அவுட் ஆனார். அவரது சமீபத்திய சிறப்பான ஆட்டத்திற்குப் பிறகு, அவரிடம் அதிக எதிர்பார்ப்புகள் இருந்தன. இளம் வீரர் மீதான அழுத்தத்தைக் குறைக்கும் அவசியத்தை கிரிக்கெட் விமர்சகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Suryavanshi) களத்தில் இறங்கியவுடன், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான தனது முந்தைய ஆட்டத்தை அவர் மீண்டும் செய்வார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். அவர் மும்பை பந்து வீச்சாளர்களை திணறடிப்பார் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், அது நடக்கவில்லை. சூர்யவன்ஷி ஒரு ரன் கூட எடுக்காமல் வெளியேற்றப்பட்டார். ராஜஸ்தான் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. அதற்கும் முந்தைய போட்டியில், வைபவ் சூர்யவன்ஷி, போட்டியில் வேகமாக சதம் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்
இந்த வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுடன் 166 ரன்கள் கூட்டணியைப் பகிர்ந்து கொண்டார். 210 ரன்கள் என்ற இலக்கை ராஜஸ்தான் அணி 15.5 ஓவர்களில் எட்டியது. போட்டி வரலாற்றில் 200 ரன்களுக்கு மேல் என்ற இலக்கை இவ்வளவு விரைவாக எட்டுவது இதுவே முதல் முறை. ஆனால், மும்பை இந்தியன்ஸ் பந்து வீச்சாளர்கள் இளம் பேட்ஸ்மேனை வெளியேற்ற வேறு ஒரு திட்டத்தை வகுத்தனர். அத்தகைய சூழ்நிலையில், தீபக் சாஹர் சூர்யவன்ஷியை டக் அவுட் செய்து வெளியேற்றினார்.
தீபக் பந்தை சிக்ஸருக்கு அடிக்க சூர்யவன்ஷி முயன்றார். ஆனால், ஷாட் தவறி பந்து வில் ஜாக்ஸின் கைகளுக்குச் சென்றது. ரன் எதுவும் எடுக்காமல் அவர் ஆட்டமிழந்தபோது அனைத்து ராஜஸ்தான் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்தனர். இந்நிலையில் இளம் வீரர் மீது எதிர்பார்ப்புகளையும் அழுத்தத்தையும் திணிக்கக் கூடாது என கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சோனு சூட் வேண்டுகோள்
பாலிவுட் நட்சத்திரம் சோனு சூட் வைபவைப் பாராட்டியது மட்டுமல்லாமல், எதிர்பார்ப்புகளின் அழுத்தம் குறித்தும் பேசியுள்ளார்.
ஒரு நிகழ்வின் போது, இந்த 14 வயது இளம் பேட்ஸ்மேன் பற்றி சோனு சூட்டிடம் கேட்டபோது, அவர் வைபவை பாராட்டி சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் “அவர் புதியவர் மற்றும் திறமையானவர் என்பதால் அவர் மீது அதிக அழுத்தம் கொடுக்காமல் இருப்பது நம் அனைவருக்கும் முக்கியம், மேலும் ஒரு இளம் வீரர் சிறப்பாக செயல்பட்டு திடீரென்று வெளிச்சத்திற்கு வரும்போது, பலர் அதிக எதிர்பார்ப்புகளை அவரிடம் திணிப்பார்கள்.
சோனு சூட் அறிவுரை
VIDEO | Here’s what actor Sonu Sood (@SonuSood) said on Vaibhav Suryavanshi’s century in IPL 2025 on the sidelines of inauguration of Dream Cricket League in New Delhi.
“It’s important for all of us not to put too much pressure on him (Vaibhav Suryavanshi) because when a young… pic.twitter.com/xLA0peeRwY
— Press Trust of India (@PTI_News) May 1, 2025
இது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது, இதுபோன்ற சூழ்நிலையில், அவர் தொடர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டிய அழுத்தத்தில் இருப்பார். அதனால்தான் அவரை அவரது சொந்த பாணியில் விளையாட அனுமதிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.. வைபவ் இவ்வளவு சிறந்த திறமை கொண்டவர், அவர் சிறப்பாக செயல்படுகிறார் என்பதற்காக அனைவரும் பெருமைப்பட வேண்டும். வருங்காலங்களில் வைபவ் நாட்டிற்கு நல்லது செய்வார் என்றார்