Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கோடையிலும் தர்பூசணி யாருக்கு தீங்கு? தவிர்க்க வேண்டியவர்கள் யார் யார்?

Can Everyone Eat Watermelon : சர்க்கரை, சிறுநீரக, மற்றும் இதய நோயாளிகள், மிகுந்த நீர்ச்சத்து மற்றும் சர்க்கரையால் பாதிப்பு ஏற்படலாம். வயிற்றுப்போக்கு, மூட்டு வலி உள்ளவர்கள் – குளிர்ச்சியால் வலி அல்லது உபாதைகள் அதிகரிக்கலாம். அதிகமாக சாப்பிட வேண்டாம் – உப்புசம், வாயுத் தொல்லை ஏற்படலாம்; எல்லாம் அளவோடு தான் நல்லது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடையிலும் தர்பூசணி யாருக்கு தீங்கு? தவிர்க்க வேண்டியவர்கள் யார் யார்?
கோடையிலும் தர்பூசணியை தவிர்க்க வேண்டியவர்கள் யார்Image Source: pinrest
sivasankari-bose
Sivasankari Bose | Published: 10 Apr 2025 14:05 PM

Eat Watermelon: கோடைக்காலத்தில் உடலுக்கு குளிர்ச்சியையும், நீர்ச்சத்தையும் அள்ளித்தரும் தர்பூசணி (watermelon பலருக்கும் விருப்பமான பழம். இளநீர் போன்று இத்தனிப்பு தரும் இந்த பழம், வெயிலின் கடுமையில் சத்துணவு மட்டுமல்லாமல், உடலை குளிர்விக்கவும் உதவுகிறது. இதன் சாறு அதிகமாக இருப்பது, அதை சிறந்த தாகம் தீர்க்கும் பழமாக மாற்றுகிறது. ஆனால், சில குறிப்பிட்ட உடல்நலப் பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்த சுவையான பழத்தை உட்கொள்வதில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில், அது அவர்களுக்கு தீங்கு விளைவிக்கலாம் (It can be harmful) என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். யார் இந்த தர்பூசணியை தவிர்க்க வேண்டும் என்று பார்க்கலாம்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள்: இனிப்பை கவனியுங்கள்!

தர்பூசணியில் இயற்கையான சர்க்கரையின் அளவு கணிசமாக உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதனை உட்கொள்ளும்போது, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு உடனடியாக அதிகரிக்கக்கூடும். எனவே, அவர்கள் தர்பூசணியை முழுமையாக தவிர்ப்பது அல்லது மருத்துவரின் ஆலோசனைப்படி மிகக் குறைந்த அளவில் எடுத்துக்கொள்வது நல்லது.

சிறுநீரக நோயாளிகள்: பொட்டாசியம் ஜாக்கிரதை!

சிறுநீரகப் பிரச்சனை உள்ளவர்கள் தர்பூசணியை உட்கொள்வதில் மிகுந்த எச்சரிக்கை தேவை. ஏனெனில், இதில் பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது. ஆரோக்கியமான சிறுநீரகங்கள் உடலில் உள்ள அதிகப்படியான பொட்டாசியத்தை வெளியேற்றிவிடும். ஆனால், சிறுநீரகங்கள் சரியாக செயல்படாதபோது, பொட்டாசியம் உடலில் தங்கி இதயப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம்.

வயிற்று உபாதைகள் உள்ளவர்கள்: நார்ச்சத்து வேண்டாம்!

வயிற்றுப்போக்கு அல்லது பிற செரிமான பிரச்சனைகள் உள்ளவர்கள் தர்பூசணியை தவிர்ப்பது நல்லது. இதில் நார்ச்சத்து அதிக அளவில் இருப்பதால், அது வயிற்று உபாதைகளை மேலும் அதிகரிக்கக்கூடும்.

மூட்டு வலி இருப்பவர்கள்: குளிர்ச்சியைத் தவிருங்கள் !

தர்பூசணி குளிர்ச்சித் தன்மை கொண்டது. ஏற்கனவே மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் இதனை உட்கொள்ளும்போது, வலி மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, அவர்கள் தர்பூசணியை தவிர்ப்பது அல்லது மிகக் குறைந்த அளவில் எடுத்துக்கொள்வது நல்லது.

இதய நோயாளிகள்: நீர்ச்சத்தை கவனியுங்கள்!

இதய நோய் உள்ளவர்கள் தர்பூசணியை உட்கொள்ளும்போது கவனமாக இருக்க வேண்டும். இதில் அதிக அளவு நீர்ச்சத்து இருப்பதால், உடலில் திரவத்தின் அளவு அதிகரித்து இதயத்திற்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தலாம். எனவே, அவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி தர்பூசணியை உட்கொள்வது பாதுகாப்பானது.

அதிகமாக சாப்பிட்டால் ஆபத்து!

மேற்கூறிய பிரச்சனைகள் இல்லாதவர்கள் கூட தர்பூசணியை அதிக அளவில் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், இது வயிறு உப்புசம், வாயுத் தொல்லை மற்றும் வயிற்று வலி போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனவே, எந்த உணவாக இருந்தாலும் அளவோடு உண்பதே ஆரோக்கியத்திற்கு நல்லது.

அதிமுக - பாஜக கூட்டணி மகிழ்ச்சியான கூட்டணி.. தமிழிசை பெருமிதம்!
அதிமுக - பாஜக கூட்டணி மகிழ்ச்சியான கூட்டணி.. தமிழிசை பெருமிதம்!...
ஒரு முறை முதலீடு செய்தால் மாதம் மாதம் வருமானம் - அசத்தல் திட்டம்!
ஒரு முறை முதலீடு செய்தால் மாதம் மாதம் வருமானம் - அசத்தல் திட்டம்!...
திரையில் ஓடாத டைமர்.. தவறான முடிவால் அவுட்டான பிரெவிஸ்..!
திரையில் ஓடாத டைமர்.. தவறான முடிவால் அவுட்டான பிரெவிஸ்..!...
ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இருக்கவே இருக்கு கவா கவா மூலிகை...
ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இருக்கவே இருக்கு கவா கவா மூலிகை......
ஷூட்டிங் தொடங்கும் முன்பே ஓடிடியில் நல்ல விலை போன சூர்யா படம்
ஷூட்டிங் தொடங்கும் முன்பே ஓடிடியில் நல்ல விலை போன சூர்யா படம்...
வீட்டில் பாதுகாப்பாக வாழ முடியாத திராவிட மாடலா இது? சீமான் கேள்வி
வீட்டில் பாதுகாப்பாக வாழ முடியாத திராவிட மாடலா இது? சீமான் கேள்வி...
நன்மைகள் விளையும்.. குரு பெயர்ச்சிக்கான கடக ராசி பலன்கள்!
நன்மைகள் விளையும்.. குரு பெயர்ச்சிக்கான கடக ராசி பலன்கள்!...
திரையரங்குகளில் போட்டிப்போடும் காமெடி நடிகர்களின் படங்கள்
திரையரங்குகளில் போட்டிப்போடும் காமெடி நடிகர்களின் படங்கள்...
சாலையில் தோண்டப்பட்ட குழிக்குள் விழுந்த தம்பதி.. பறிபோன உயிர்!
சாலையில் தோண்டப்பட்ட குழிக்குள் விழுந்த தம்பதி.. பறிபோன உயிர்!...
அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளால் வரும் ஆபத்துகள் என்னென்ன?
அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளால் வரும் ஆபத்துகள் என்னென்ன?...
விஜயுடன் கைகோர்க்கும் தேமுதிக? முடிவு எடுக்கும் பிரேமலதா!
விஜயுடன் கைகோர்க்கும் தேமுதிக? முடிவு எடுக்கும் பிரேமலதா!...