Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இனி மார்க் குறைந்தால் பெயில்.. அமலுக்கு வந்த புதிய நடைமுறை.. சிபிஎஸ்இ அதிரடி!

CBSE School Students : தேசிய கல்விக்கொள்கை-2020ன் படி, 30 சதவீதத்திற்கு குறைவாக மதிப்பெண் எடுத்தால், 3,5,8ஆம் வகுப்பு மாணவர்கள் பெயில் என அறிவிக்கப்படும். இந்த புதிய நடைமுறை சிபிஎஸ்சி பள்ளிகளில் அறிமுகப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான ஒப்புதல் கடிதத்தை பெற்றோரிடம் பெற்று வருவதாக தெரிகிறது.

இனி மார்க் குறைந்தால் பெயில்.. அமலுக்கு வந்த புதிய நடைமுறை.. சிபிஎஸ்இ அதிரடி!
மாணவர்கள்Image Source: PTI
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 02 May 2025 11:40 AM

டெல்லி, மே 02: சிபிஎஸ்இ பள்ளிகளில் 3,5,8ஆம் வகுப்புகளில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தால் ஃபெயில் என்ற நடைமுறை அமலுக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கட்டாய தேர்ச்சி முறை மாற்றப்பட்டு, தேசிய கல்விக் கொள்கையின்படி விதிகள் திருத்தப்பட்டதாக தெரிகிறது. அதன்படி, சிபிஎஸ்இ மாணவர்கள் 3,5,8ஆம் வகுப்பில் இனி 30 சதவீதத்திற்கு குறைவான மதிப்பெண் பெற்றால் பெயில் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பாண்டுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்டதால், வரும் 2026 கல்வியாண்டு முதல் அமல் எனவும் விளக்கம் அளிக்கப்பட்டதாக தெரிகிறது. இதற்கான ஒப்புதல் கடிதத்தை பெற்றோரிடம் பெற்று வருவதாக தெரிகிறது.

இனி மார்க் குறைந்தால் பெயில்

சிபிஎஸ்இ எனும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் நாடு முழுவதும் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளில் இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளை கொண்டு பாடங்கள் கற்பிக்கப்படுகிறது. சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி 8ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி என்ற விதி இருந்து வருகிறது.

இந்த நிலையில், இந்த நிலையில், தற்போது சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மதிப்பெண் பல்வேறு அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. அதன்படி, தேசிய கல்விக்கொள்கை-2020ன் படி 30 சதவீதத்திற்கும் குறைவான மதிப்பெண் எடுத்தால் 3,5, 8ம் வகுப்பில் பெயில் என்ற நடைமுறை அமலுக்கு வந்துள்ளதாக தெரிகிறது.

தேசிய கல்விக்கொள்கை-2020ன் படி 8ம் வகுப்பு வரை இருந்த கட்டாய தேர்ச்சி முறை மாற்றப்பட்டு, 3,5 மற்றும் 8ம் வகுப்புகளில், குறைவான மதிப்பெண் பெறும் மாணவர்களை பெயிலாக்கும் முறை சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அனைவருக்கும் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி 8ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி இருந்த நிலையில் இந்த ஆண்டு 2025 மே 1ம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

சிபிஎஸ்சி பள்ளிகளில் அமலுக்கு வந்த புதிய நடைமுறை

இந்த புதிய உத்தரவு 2026ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரும் என ஆசிரியர்கள் கூறியுள்ளனர். இதற்கான நடைமுறையை சிபிஎஸ்இ பள்ளிகளில் தொடக்கப்பட்டதாக தெரிகிறது. இதற்கான ஒப்புதல் கடிதத்தை பெற்றோரிடம் பெற்று வருவதாக தெரிகிறது. இந்த  பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கல்வி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த அறிவிப்பு மத்திய அரசால் நடத்தப்படும் 3,000க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்குப் பொருந்தும். இதில் கேந்திரிய வித்யாலயாக்கள், நவோதயால வித்யாலயாக்கள் மற்றும் சைனிக் பள்ளிகள் அடங்கும் என்று கூறப்படுகிறது.

இதற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “சிபிஎஸ்இ பள்ளிகளில் நோ ஆல் பாஸ் தொடர்பாக கையெழுத்து கேட்டால் பெற்றோர் கேள்வி கேளுங்கள். தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மாநில பாடத்திட்டத்திலும் இதே நிலை தான். சிபிஎஸ்இ பள்ளியில் உள்ள புதிய நடைமுறை இடைநிற்றலுக்கு வழிவகுக்கும். அரசின் நடவடிக்கையால் மாநிலப் பாடத்திட்ட மாணவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்” என்று கூறினார்.

வெப்பம் தாங்காமல் விழுந்த குதிரை.. உரிமையாளரின் செயல் வைரல்
வெப்பம் தாங்காமல் விழுந்த குதிரை.. உரிமையாளரின் செயல் வைரல்...
இண்டர்னெட் இல்லாமல் UPI பேமெண்ட் செய்வது எப்படி?
இண்டர்னெட் இல்லாமல் UPI பேமெண்ட் செய்வது எப்படி?...
நடிகையின் போட்டோவுக்கு லைக் செய்ததாக சர்ச்சை - கோலி விளக்கம்!
நடிகையின் போட்டோவுக்கு லைக் செய்ததாக சர்ச்சை - கோலி விளக்கம்!...
சிலி மற்றும் அர்ஜென்டினாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
சிலி மற்றும் அர்ஜென்டினாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்!...
60% தள்ளுபடியுடன் கிடைக்கும் முன்னணி பிராண்டுகளின் ஏர் கூலர்கள்!
60% தள்ளுபடியுடன் கிடைக்கும் முன்னணி பிராண்டுகளின் ஏர் கூலர்கள்!...
நானியின் ஹிட் 3 வசூலை முறியடித்த சூர்யாவின் ரெட்ரோ!
நானியின் ஹிட் 3 வசூலை முறியடித்த சூர்யாவின் ரெட்ரோ!...
பச்சிளங்குழந்தைகள் பால் குடிக்கும்போதே தூங்குவது ஏன்?
பச்சிளங்குழந்தைகள் பால் குடிக்கும்போதே தூங்குவது ஏன்?...
பெரும் சிக்கல்... சோனியா, ராகுல் காந்திக்கு பறந்த நோட்டீஸ்!
பெரும் சிக்கல்... சோனியா, ராகுல் காந்திக்கு பறந்த நோட்டீஸ்!...
ஒரே ஸ்மார்ட்போனில் 2 வாட்ஸ்அப் செயலிகளை பயன்படுத்துவது எப்படி?
ஒரே ஸ்மார்ட்போனில் 2 வாட்ஸ்அப் செயலிகளை பயன்படுத்துவது எப்படி?...
தனுஷிற்கு பிடித்த நடிகர் யார் தெரியுமா? அவரே சொன்ன விஷயம்!
தனுஷிற்கு பிடித்த நடிகர் யார் தெரியுமா? அவரே சொன்ன விஷயம்!...
உங்களின் காதலர் யார் ? ரசிகர் கேள்விக்கு நடிகை ஸ்ருதி ஹாசன் பதில்
உங்களின் காதலர் யார் ? ரசிகர் கேள்விக்கு நடிகை ஸ்ருதி ஹாசன் பதில்...