Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பாகிஸ்தான் உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய தயாராக உள்ள இந்தியா?.. வெளியான முக்கிய தகவல்!

India Ready to Scrap Ceasefire with Pakistan | பாகிஸ்தான் கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியா உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், பாகிஸ்தான் உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய இந்தியா தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய தயாராக உள்ள இந்தியா?.. வெளியான முக்கிய தகவல்!
கோப்பு புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Published: 24 Apr 2025 23:17 PM

டெல்லி, ஏப்ரல் 24 : பாகிஸ்தான் (Pakistan) உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை (Ceasefire) ரத்து செய்ய இந்தியா தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து விரைவில் அரசு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தியா உடனான ஒப்பந்தங்களை பாதுகாக்க பாகிஸ்தான் தவறிவிட்டதாக இந்தியா கருதும் நிலையில், விரைவில் இது குறித்து அறிவிப்பு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் உடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்ய உள்ளதாக வெளியாகும் தகவல் குறித்து விரிவாக பார்க்கலாம்.

பாகிஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட அப்பாவி சுற்றுலா பயணிகள்

ஜம்மு & காஷ்மீரில் (Jammu and Kashmir) பஹல்காம் (Pahalgam) பகுதியில் ஏப்ரல் 22, 2025 அன்று சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இந்த பயங்கரவாத தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரிழந்த சுற்றுலா பயணிகளில் 2 பேர் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். பஹல்காமில் நடத்தப்பட்ட இந்த பயங்கர தாக்குதல் உலகையே உலுக்கிய நிலையில், தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரட்ண்ட் (The Resistance Front) என்ற பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றது. இதனால் ஆத்திரமடைந்த இந்தியா, பாகிஸ்தான் மீது அடுத்து அடுத்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய தயாராகும் இந்தியா?

இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்த போதிலும் 2021 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தனை சேர்ந்த லக்‌ஷர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது, தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் உள்ளிட்ட அமைப்புகள் ஜம்மு & காஷ்மீரில் ஊடுருவி வருகிறது. பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு மற்றும் ஷெல் தாக்குதல்கள் மூலம் போர் நிறுத்தத்தை மீறியுள்ளது. இத்தகைய சம்பவங்கள் 2023 மற்றும் 2024 காலக்கட்டத்தில் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இந்திய அரசு பாகிஸ்தான் உடனான போர் நிறுத்தத்தை ரத்து செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

கடுமையான நடவடிக்கை எடுக்க விரும்பும் இந்திய அரசு – கிரண் ரிஜிஜூ

இந்த நிலையில் இன்று (ஏப்ரல் 24, 2025) டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ, பஹல்காம் தாக்குதல் குறித்து நாட்டில் உள்ள அனைவரும் வருத்தமடைந்துள்ளனர். இதனை மனதில் கொண்டு இந்திய அரசு இன்றும் கடுமையான நடவடிக்கை எடுக்க தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளார்.

கிரண் ரிஜிஜூ செய்தியாளர் சந்திப்பு

இவற்றின் அடிப்படையில் இந்திய அரசு போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

DMK-க்கு எதிராக அனைவரும் ஒன்றுசேர வேண்டும் - நயினார் நாகேந்திரன்
DMK-க்கு எதிராக அனைவரும் ஒன்றுசேர வேண்டும் - நயினார் நாகேந்திரன்...
சென்னை மக்களே அலர்ட்.. மாநகர பேருந்து வழித்தட எண்கள் மாற்றம்!
சென்னை மக்களே அலர்ட்.. மாநகர பேருந்து வழித்தட எண்கள் மாற்றம்!...
‘தன்னைத் தானே செதுக்கியவன்!’ - அஜித்குமார் பிறந்தநாள் ஸ்பெஷல்!
‘தன்னைத் தானே செதுக்கியவன்!’ - அஜித்குமார் பிறந்தநாள் ஸ்பெஷல்!...
பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சிக்கிய நாகை இளைஞர்
பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சிக்கிய நாகை இளைஞர்...
பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவில் பறக்க தடை.. மத்திய அரசு அதிரடி
பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவில் பறக்க தடை.. மத்திய அரசு அதிரடி...
ORS பவுடர் பயன்பாடு குறித்து பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு
ORS பவுடர் பயன்பாடு குறித்து பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு...
சுட்டெரிக்கும் வெயில்.. இன்னும் 3 டிகிரி வரை அதிகரிக்கும்!
சுட்டெரிக்கும் வெயில்.. இன்னும் 3 டிகிரி வரை அதிகரிக்கும்!...
தொடர் தோல்வி! ஐபிஎல் 2025 டாட்டா காட்டிய CSK.. கலக்கிய PBKS..!
தொடர் தோல்வி! ஐபிஎல் 2025 டாட்டா காட்டிய CSK.. கலக்கிய PBKS..!...
உலகத்தில் உயர்ந்தது தாய்மை.. குரங்கின் தாகம் தீர்த்த பெண்!
உலகத்தில் உயர்ந்தது தாய்மை.. குரங்கின் தாகம் தீர்த்த பெண்!...
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!...
தந்தையின் கடையில் திருடி ஐபோன் வாங்கிய சிறுவன்: அதிர்ச்சி சம்பவம்
தந்தையின் கடையில் திருடி ஐபோன் வாங்கிய சிறுவன்: அதிர்ச்சி சம்பவம்...