Summer Health Tips: கோடை மழையில் நனைந்தால் உங்களை நோய்வாய்ப்படுத்துமா? உண்மை இதுதான்..!
Summer Rain and Illness: கோடை கால மழையில் நனையும் போது உடல் வெப்பநிலை திடீர் மாற்றத்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். மாசு கலந்த மழைநீர் தோல் அலர்ஜியையும், ஈர ஆடைகள் சளி, காய்ச்சலை உண்டாக்கும். மழை நீரில் கொசுக்கள் பெருகி டெங்கு, மலேரியா அபாயம் அதிகரிக்கும். ஆனால், மழைநீர் தானே காய்ச்சலை உண்டாக்காது. ஈரத்துணியில் இருப்பதுதான் பிரச்சினை. வெதுவெதுப்பான நீர் அருந்தி உடலை உலர வைப்பது முக்கியம்.

கோடை மழையும், உடல்நலமும்..
கோடை காலத்தில் (Summer) கடும் வெயில் தினமும் நம்மை போட்டு பாடாய்படுத்தும். இதுபோன்ற சூழ்நிலைகளில் கோடை மழை நம்மை குஷி படுத்தும். கோடை காலத்தில் மழை பெய்யும்போது பலரும் மழையில் நனைந்து தங்களை குளிர்விக்க நினைக்கிறார்கள். ஆனால், நம் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் பெரும்பாலும் கோடை மழையில் நனைய விடமாட்டார்கள். காரணம், கோடை மழையில் நனைந்தால் உடல் நிலை சரியில்லாமல் போகும் (Fever) என்று சொல்வார்கள். இந்தநிலையில், கோடை காலத்தில் பெய்யும் மழையில் (Rain) நனைந்தால் உடல்நிலை சரியில்லாமல் போகுமா இல்லையா என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
கோடை மழையில் நனைந்தால் ஏன் உடம்பு சரியில்லாமல் போகும்..?
திடீர் மாற்றம்:
கோடை காலத்தில் பெரும்பாலும் உடல் வெப்பநிலையானது அதிகமாக இருக்கும். இந்தநிலையில், கோடை மழையில் நனையும்போது நம் உடலானது திடீரென குளிர்ச்சியடைய தொடங்கும். உடலில் ஏற்படும்போது திடீர் மாற்றம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி பலவீனப்படுத்தும். இதனால் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
மாசுப்பட்ட மழை நீர்:
கோடை காலத்தில் பெய்யும் முதல் மழையானது வளிமண்டத்தில் தேங்கும் மாசுபாடு, தூசி மற்றும் ரசாயனங்கள் போன்றவை பூமிக்கு கொண்டு வரும். இந்த மழையின் மூலம் பூமிக்கு வரும் நீர் தோல் மற்றும் தலையில் ஏற்படும்போது ஒவ்வாமை, கண் எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும்.
ஈரமான ஆடைகள்:
மழையில் நனைந்த பிறகு ஈரமான ஆடைகளில் இருப்பதால் உடல் குளிர்ச்சி அடையும். இதனால் சளி, காய்ச்சல் போன்றவை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
மழைக்குப் பிறகு தண்ணீர் தேங்கும் இடங்களில் கொசுக்கள் உற்பத்தியாகின்றன, இது டெங்கு, மலேரியா போன்ற நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும்.
மழை:
மழையில் தெரியாமல் நனைவதாலோ அல்லது மழையில் குளிப்பதாலோ அது உங்களை நோய்வாய்ப்படுத்தாது. ஏனெனில் மழை மூலம் வைரஸ்கள் பரவாது. மழையில் நனைந்தால் உங்களுக்கு சளி பிடிக்காது. ஆனால், மழையில் நனைந்தபிறகு ஈரமான உடைகளை அணிந்திருக்கும்போது நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தும்.
உடல் திடீரென குளிர்ச்சியடையும்போது உங்கள் மூக்கின் இரத்த நாளங்கள் சுருங்குவதற்கு வழிவகுக்கும். இது வெள்ளை இரத்த அணுக்களை குறைத்து, கிருமிகளை உங்கள் உடலில் பரப்பி காய்ச்சல் போன்றவற்றை உண்டாக்கும்.
மழையில் நனைந்தாலும் காய்ச்சல் வராமல் இருக்க என்ன செய்யலாம்..?
- மழையில் நனைந்தபிறகு உடல் வெப்பநிலை சமநிலையில் இருக்க வெதுவெதுப்பான நீர் குடிக்கவும் அல்லது சூடான சூப் குடிக்கலாம்.
- மழையில் நனைந்தபிறகு, உங்களை உலர்த்தாமல் உடனடியாக ஏர் கண்டிஷனர் அல்லது பேன் முன் நிற்பதை தவிர்க்கவும்.
- மழையில் நனைந்தவுடன், உடனடியாக உலர்ந்த ஆடைகளை கழட்டி உலர்த்த துணிகளை மாட்டியபின், தலைமுடியை உலர வைக்கவும்.