மருதாணி: வெடிப்புற்ற குதிகாலை சரியாக்குமா? மருத்துவரின் ஆலோசனை இதோ!
Healed Cracked Heels: வெடிப்புற்ற குதிகால் ஒரு பொதுவான பிரச்சனை. இதற்கு வீட்டில் எளிதில் கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி சிகிச்சை செய்யலாம். தேங்காய் எண்ணெய், தேன், வாழைப்பழம், அவகேடோ போன்றவற்றைப் பயன்படுத்தி வீட்டு வைத்தியம் செய்யலாம். சரும வறட்சியைத் தவிர்க்க ஈரப்பதம் அவசியம். மருத்துவர் வேணி, உடல் பருமன், தைராய்டு பிரச்சனை, மரபணு காரணங்களால் இது ஏற்படலாம் என்கிறார்.

பித்த வெடிப்பை வீட்டு வைத்தியம் மூலம் எப்படி சரி செய்வது
வெடிப்புற்ற குதிகால் ஒரு பொதுவான பிரச்சனையாகும், இது வலி மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். இதற்கு வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே எளிய வைத்தியம் செய்யலாம். மருத்துவர் வேணி பித்த வெடிப்பு ஏற்படுவதற்கான காரணங்களை விளக்கி, அதனை வீட்டில் பயன்படுத்தக்கூடிய வைத்திய முறைகளால் எவ்வாறு சரி செய்யலாம் என்பதையும் கூறியுள்ளார். மருத்துவர் வேணி கூறுகையில், உடல் பருமன், தைராய்டு பிரச்சனை மற்றும் சரும வறட்சி உள்ளவர்களுக்கு பித்த வெடிப்பு ஏற்படக்கூடும். இதற்கு கூடுதலாக, மரபணுக் காரணமாகவும் பாதங்களில் பித்த வெடிப்பு உருவாகலாம்.
பித்த வெடிப்பைத் தடுப்பதற்காக சருமம் வறண்டுபோகவை தவிர்க்க வேண்டும். இதற்காக ஈரப்பதத்தை பாதுகாக்க எண்ணெய் தடவலாம். மேலும், சாக்ஸும் அணிவது அவசியம் என்று மருத்துவர் வேணி அறிவுறுத்துகிறார். இரவு உறங்கச் செல்லும் முன் சுடுநீரில் பாதங்களை நன்றாக கழுவி, சிறிதளவு தேங்காய் எண்ணெய் தேய்த்து, சாக்ஸ் அணிந்து படுக்கலாம் என்றும் அவர் கூறுகிறார். மேலும் இதனை வீட்டு வைத்தியம் மூலம் எப்படி சரி செய்வது என்பதையும் தெரிவித்துள்ளார்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெய் ஒரு சிறந்த ஈரப்பதமூட்டி, வெடிப்புற்ற குதிகால்களில் தேங்காய் எண்ணெயை தடவி, சாக்ஸ் அணிந்து இரவு முழுவதும் விடவும். தொடர்ந்து செய்து வர குதிகால் மென்மையாகும்.
தேன்
தேன் ஒரு இயற்கையான கிருமி நாசினி மற்றும் ஈரப்பதமூட்டி. வெதுவெதுப்பான நீரில் சிறிது தேன் கலந்து, அதில் கால்களை 15-20 நிமிடங்கள் ஊற வைக்கவும். பிறகு மெதுவாக தேய்த்து கழுவவும்.
வாழைப்பழம் மற்றும் அவகேடோ மாஸ்க்
ஒரு பழுத்த வாழைப்பழம் மற்றும் அரை அவகேடோவை மசித்து, குதிகால்களில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவவும். இது குதிகாலில் உள்ள வறட்சியை போக்கி ஈரப்பதத்தை அளிக்கும்.
எலுமிச்சை சாறு
வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து, அதில் கால்களை 10-15 நிமிடங்கள் ஊற வைக்கவும். எலுமிச்சையில் உள்ள அமிலம் இறந்த செல்களை நீக்க உதவும். பிறகு பாதத்தை நன்றாக கழுவவும்.
ரைஸ் ஃப்ளோர் ஸ்க்ரப்
அரிசி மாவு, தேன் மற்றும் ஆப்பிள் சிடர் வினிகர் கலந்து பேஸ்ட் செய்து, குதிகால்களில் தடவி மெதுவாக ஸ்க்ரப் செய்யவும். இது இறந்த செல்களை நீக்கி, குதிகாலை மென்மையாக்கும்.
பெட்ரோலியம் ஜெல்லி
இரவு படுக்கும் முன் வெடிப்புற்ற குதிகால்களில் பெட்ரோலியம் ஜெல்லியை தடவி, அதன் மேல் சில துளிகள் எலுமிச்சை சாறு விடவும். சாக்ஸ் அணிந்து இரவு முழுவதும் விடவும்.
மருதாணி போடுவது பித்த வெடிப்பை குறைக்க உதவும்
இதேபோல், பாதங்களுக்கு மருதாணி போடுவது பித்த வெடிப்பை குறைக்க உதவும். இது சருமத்தை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகிறது. அதன்படி, 15 நாட்களுக்கு ஒரு முறை மருதாணி போடுவதை பழக்கப்படுத்திக் கொள்ளலாம் என்று மருத்துவர் வேணி அறிவுறுத்துகிறார்.
இந்த எளிய வீட்டு வைத்திய முறைகளை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் வெடிப்புற்ற குதிகாலை சரிசெய்யலாம். குதிகால் மிகவும் மோசமாக இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.