Yogi Babu : லேடி கெட்டப்பில் யோகிபாபு.. விஜய் சேதுபதியின் ‘ஏஸ்’ படக்குழு வெளியிட்ட போட்டோஸ்!

Yogi Babu Lady Getup Photos : நடிகர் யோகிபாபுவை தமிழ் சினிமாவில் தெரியாத ஆளே இருக்கமுடியாது. பிரபல நகைச்சுவை நடிகராக இருந்து வரும் இவர், ஹீரோவாகவும், காமெடியனாகவும் படங்களில் நடித்து வருகிறார். நடிகர் விஜய் சேதுபதியின் முன்னணி நடிப்பில் இவர் இணைந்து நடித்துள்ள படம் ஏஸ். இருந்த படத்தில் யோகிபாபு லேடி கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

Yogi Babu : லேடி கெட்டப்பில் யோகிபாபு.. விஜய் சேதுபதியின் ஏஸ் படக்குழு வெளியிட்ட போட்டோஸ்!

யோகி பாபு

Published: 

07 May 2025 22:39 PM

தமிழ் சினிமாவில் தற்போது காமெடி ஹீரோவாக படங்களில் நடித்து வருபவர் யோகி பாபு (Yogi Babu). சினிமாவில் ஆரம்பத்தில் சிறு சிறு வேடத்தில் நடித்து வந்த இவர், அதைத் தொடர்ந்து துணை கதாபாத்திரத்திலும் பின் நகைச்சுவை நடிகராகவும் அடுத்தடுத்த கட்டத்திற்கு வளர்ந்து வந்தார். இவர் தற்போது முன்னணி நடிகர்களான அஜித், விஜய், ரஜினிகாந்த் எனப் பல்வேறு நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்தும் வருகிறார். மேலும் இவர் நடிகர் விஜய் சேதுபதியின்  (Vijay Sethupathi) ஏஸ் (Ace) படத்தில் காமெடி நடிகராக நடித்துள்ளார். இந்த படத்தை பிரபல இயக்குநர் ஆறுமுக குமார் (Arumuga Kumar)  இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் “ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்” என்ற படத்தை இயக்கியுள்ளார். அதைத் தொடர்ந்து ஏஸ் படத்தின் மூலம் இரண்டாவது முறையாக இணைந்துள்ளார்.

இந்த படமானது வரும் 2025, மே 23ம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது . இந்நிலையில் இந்தப் படத்திலிருந்து நடிகர் யோகிபாபுவின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நகைச்சுவை நடிகை யோகிபாபு லேடி கெட்டப்பில் நடித்திருக்கிறார். இந்நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இந்த இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் ஏஸ் படத்தின் மீதான ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது என்றே கூறலாம்.

இணையத்தில் வைரலாகும் யோகி பாபுவின் புகைப்படங்கள் :

இந்த புகைப்படத்தில் நடிகர் யோகி பாபு லேடி கெட்டப்பில் மிகவும் அருமையாக இருக்கிறார். பார்ப்பதற்கே சிரிப்புதான் வருகிறது. இவர் இதுவரை நடித்திருந்த படங்களில் இந்த அளவிற்கு லேடி கெட்டப்பில் நடித்ததில்லை. இந்த படத்தில்தான் அவர் இவ்வாறு நடித்துள்ளார் என்றார் கூறப்படுகிறது.

இந்த ஏஸ் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முன்னணி நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். இவர் இந்த படத்தின் மூலம்தான் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். மேலும் நடிகர் சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தில் ஹீரோயினியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் இந்த ஏஸ் திரைப்படம் வெளியாவதற்கு இன்னும் 2 வாரங்கள் மட்டும் உள்ள நிலையில், விரைவில் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதியுடன், யோகிபாபு நடித்திருக்கும் நிலையில், நிச்சயமாக இந்த படத்தில் காமெடி காட்சிகள் அதிகம் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தற்போது நடிகர் யோகிபாபுவின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.