Soori : சிவகார்த்திகேயன் படத்தைத் தயாரிக்க வேண்டிய அவசியமே இல்லையே.. கொட்டுக்காளி விமர்சனம் குறித்து சூரி பேச்சு!

Soori About Kottukkaali Movie : தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் சூரி. வெற்றிமாறனின் விடுதலை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான இவர், தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் முக்கிய ரோலில் நடித்து அசத்தியிருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் மாமன் படத்தின் ப்ரோமோஷன் பணியில் கலந்துகொண்ட அவர், சிவகார்த்திகேயனை வைத்து கொட்டுக்காளி படத்திற்கு வந்த விமர்சனங்கள் குறித்து விளக்கியுள்ளார்.

Soori : சிவகார்த்திகேயன் படத்தைத் தயாரிக்க வேண்டிய அவசியமே இல்லையே.. கொட்டுக்காளி விமர்சனம் குறித்து சூரி பேச்சு!

சூரி மற்றும் சிவகார்த்திகேயன்

Published: 

07 May 2025 22:44 PM

இயக்குநர் வெற்றிமாறனின் (Vetrimaaran)  விடுதலை  (Viduthalai) படத்திலிருந்து தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடித்து வருபவர் சூரி (Soori). இவர் ஆரம்பத்தில் சினிமாவில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அதைத் தொடர்ந்து படங்களில் துணை கதாபாத்திரம் மற்றும் காமெடி கதாபாத்திரம் என அடுத்தடுத்த கதாபாத்திரங்களில் நடித்துப் பிரபலமானார். இவர் பல முன்னணி பிரபலங்களில் படங்களில் காமெடியனாக நடித்து அசத்தியிருக்கிறார். இதைத் தொடர்ந்து நடிகர் சூரியை, இயக்குநர் வெற்றிமாறன் தனது விடுதலை படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். கடந்த 2023ம் ஆண்டு வெளியான விடுதலை பார்ட் 1 படத்தில் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துப் பிரபலமானார். அந்த படத்தைத் தொடர்ந்து கருடன், கொட்டுக்காளி போன்ற படங்களில் முன்னணி நாயகனாக நடித்திருக்கிறார். இதில் நடிகர் சிவகார்த்திகேயனின் (Sivakarthikeyan) தயாரிப்பில் வெளியான படம் கொட்டுக்காளி (Kottukkaali). இந்த படத்தை இயக்குநர் பி.எஸ். வினோத் ராஜ் (P.S. Vinod Raj) இயக்கியிருந்தார்.

இந்த படத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்க அவருடன் நடிகை அனா பென் இணைந்து நடித்திருந்தார். இந்த படத்தின் கதைக்களமானது இதுவரை எதிர்பார்த்திடாத கதைக்களத்தில் அமைந்திருந்தது. இந்த படமானது திரையரங்குகளில் வெளியாகி பெரும் விமர்சனங்களுக்கு உள்ளானது. படத்தின் கதைக்களம் பற்றியும், நடிப்பு பற்றியும் விமர்சிக்கப்பட்டது.

இந்த படங்களைத் தொடர்ந்து நடிகர் சூரியின் முன்னணி நடிப்பில் ரிலீரிற்கு தயாராகியுள்ள படம் மாமன். இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சிறப்பாகத் தொடங்கிய நிலையில், அதில் பேசிய சூரி, கொட்டுக்காளி படத்தின் விமர்சனம் குறித்தும், சிவகார்த்திகேயனுக்கு வந்த விமர்சனங்கள் குறித்தும் விளக்கியுள்ளார்.

சூரியின் இன்ஸ்டாகிராம் பதிவு :

கொட்டுக்காளி படத்தின் விமர்சனங்கள் குறித்து நடிகர் சூரி சொன்ன விஷயம் :

அந்த நிகழ்ச்சியில் பேசிய சூரி, கொட்டுக்காளி படத்தில் நடித்திருந்தது எனக்கு மிகவும் சந்தோசம் தான், நான் இதுவரை நடித்திருந்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படமாக அமைந்தது கொட்டுகிக்காளிதான். நான் இதுவரை நடித்திருந்த முக்கியமான படங்களில் ஒன்று இந்த கொட்டுக்காளி, அதே போல மெய்யழகன் படமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வாழ்க்கை போகும் நேரத்தில் யாருக்குமே திரைப்படத்தின் கதையைப் புரிந்து பார்ப்பதற்கு டைம் இல்லாமல் போகிவிட்டது.

பின் பல நாட்களுக்குப் பின் ஆமா அந்த படம் மிகவும் அருமையான படம் என்று கூறுவார்கள். தயவுசெய்து ஒரு நல்ல படத்திற்கு மரியாதையைக் கொடுங்கள்., நீங்கள் திரையரங்குகளில் சென்று பார்த்து நன்றாக இருக்கிறதா அல்லது இல்லையா எனத் தெரிந்துகொள்ளுங்கள்.  சிவகார்த்திகேயன் எனக்கு நல்லதுதான் செய்தார். அவர் என்னை வைத்து அந்த படத்தைத் தயாரிக்கவேண்டிய அவசியமே இல்லையே, சிவகார்த்திகேயன் தம்பி என்னை வைத்துப் படத்தை தயாரித்து அவருக்கு நஷ்டமாகவேண்டும் என்று நினைப்பாரா.அவருக்கு இந்த கதை மிகவும் பிடித்திருந்தது, உறவுகளுக்கு இவ்வாறு ஒரு படத்ததைக் கொண்டு செல்லவேண்டும் என்றுதான் அவர் நினைத்தார். இதனால் அவருக்குப் பல கோடிகள் வரும் என்று எல்லாம் நினைக்கவில்லை என்று நடிகர் சூரி பேசியிருக்கிறார்.