Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Vijay Sethupathi : விஜய் சேதுபதியின் தெலுங்கு படத்தில் அவருக்கு ஜோடி இந்த நடிகையா?

Vijay Sethupathi Telugu New Movie : தமிழில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துப் பிரபலமானவர் விஜய் சேதுபதி. இவர் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருந்து வருகிறார். தமிழ்ப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பூரி ஜெகன்நாத்தின் தெலுங்கு படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ள நடிகை பற்றிய தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Vijay Sethupathi : விஜய் சேதுபதியின் தெலுங்கு படத்தில் அவருக்கு ஜோடி இந்த நடிகையா?
விஜய் சேதுபதிImage Source: X
barath-murugan
Barath Murugan | Published: 28 Apr 2025 19:57 PM

நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathi) என்றாலே சிறப்பாக நடிக்கக் கூடியவர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இவர் தமிழில் பல படங்களில் முன்னணி கதாநாயகனாகவும், வில்லனாகவும் நடித்திருக்கிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் விடுதலை பார்ட் 2 (Viduthalai Part 2).  இந்த படத்தை இயக்குநர் வெற்றிமாறன் (Vetrimaaran) இயக்கியிருந்தார். விடுதலை பார்ட் 1ன் படத்தின் தொடர்ச்சியான கதைக்களத்தில் இந்த படமானது வெளியாகியிருந்தது. இந்த படத்தில் விஜய் சேதுபதியின் ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்திருந்தார். இவர்கள் இருவரின் காமினேஷனில் இந்த படம் மிகவும் அருமையாக இருந்தது. இந்த படத்தை அடுத்ததாக நடிகர் விஜய் சேதுபதி பல படங்களில் கமிட்டாகியிருந்தார். இந்த படங்களையெல்லாம் தொடர்ந்து தெலுங்கில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். இதுவரை தெலுங்கு மற்றும் ஹிந்தி போன்ற படங்களில் வில்லனாக நடித்துவந்த விஜய் சேதுபதி , இயக்குநர் பூரி ஜெகன்நாத் (Puri Jagannadh) படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார்.

இந்த தெலுங்கு திரைப்படத்தை நடிகையும், தயாரிப்பாளருமான சார்மி கவுர் இந்த படத்தைத் தயாரிக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகைகள் தபு மற்றும் ராதிகா ஆப்தே நடிக்கவுள்ளனர் என்ற தகவல்கள் சமீபத்தில் வெளியானது. அதைத் தொடர்ந்து இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை நிவேதா தாமஸ் நடிக்கவுள்ளார் என்ற புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

நடிகை நிவேதா தாமஸ் இன்ஸ்டாகிராம் பதிவு :

 

View this post on Instagram

 

A post shared by Nivetha Thomas (@i_nivethathomas)

இந்த படமானது மிகவும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த திரைப்படத்திற்கு பெக்கர் என்று டைட்டில் வைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், விஜய் சேதுபதி பிச்சைக்காரன் வேடத்தில் நடிப்பார் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இந்த தெலுங்கு பட தமிழிலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் சூட்டிங் வரும் 2025, ஜூன் மாதத்தில் சிறப்பாக தொடங்கி,வரும் 2026ம் ஆண்டு இந்த படத்தை வெளியிடப் படக்குழு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் கிட்டத்தட்ட 4 படங்கள் வரிசையில் உள்ளது. இதில் இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் ஏஸ். இந்த படமானது முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்தில் சிறப்பாக உருவாகியுள்ளது.

இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை ருக்மினி வசந்த் நடித்துள்ளார். இந்த ஏஸ் படமானது வரும் 2025, மே 23ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதை அடுத்ததாக இவரின் நடிப்பில் காந்தி டாக்கீஸ், ட்ரெயின், பாண்டியராஜ் இயக்கத்தில் புதிய படம் என இந்த படங்கள் அனைத்தும் இறுதிக்கட்ட பணியில் இருந்துவருகிறது.

விஜய் வருகை... மதுரை விமான நிலையத்தில் திரண்ட தவெக தொண்டர்கள்!
விஜய் வருகை... மதுரை விமான நிலையத்தில் திரண்ட தவெக தொண்டர்கள்!...
அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை - எவ்வளவு தெரியுமா?
அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை - எவ்வளவு தெரியுமா?...
அடுத்த போட்டியில் விளையாடுவேனா என்று தெரியாது - எம்எஸ் தோனி
அடுத்த போட்டியில் விளையாடுவேனா என்று தெரியாது - எம்எஸ் தோனி...
DMK-க்கு எதிராக அனைவரும் ஒன்றுசேர வேண்டும் - நயினார் நாகேந்திரன்
DMK-க்கு எதிராக அனைவரும் ஒன்றுசேர வேண்டும் - நயினார் நாகேந்திரன்...
சென்னை மக்களே அலர்ட்.. மாநகர பேருந்து வழித்தட எண்கள் மாற்றம்!
சென்னை மக்களே அலர்ட்.. மாநகர பேருந்து வழித்தட எண்கள் மாற்றம்!...
‘தன்னைத் தானே செதுக்கியவன்!’ - அஜித்குமார் பிறந்தநாள் ஸ்பெஷல்!
‘தன்னைத் தானே செதுக்கியவன்!’ - அஜித்குமார் பிறந்தநாள் ஸ்பெஷல்!...
பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சிக்கிய நாகை இளைஞர்
பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சிக்கிய நாகை இளைஞர்...
பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவில் பறக்க தடை.. மத்திய அரசு அதிரடி
பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவில் பறக்க தடை.. மத்திய அரசு அதிரடி...
ORS பவுடர் பயன்பாடு குறித்து பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு
ORS பவுடர் பயன்பாடு குறித்து பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு...
சுட்டெரிக்கும் வெயில்.. இன்னும் 3 டிகிரி வரை அதிகரிக்கும்!
சுட்டெரிக்கும் வெயில்.. இன்னும் 3 டிகிரி வரை அதிகரிக்கும்!...
தொடர் தோல்வி! ஐபிஎல் 2025 டாட்டா காட்டிய CSK.. கலக்கிய PBKS..!
தொடர் தோல்வி! ஐபிஎல் 2025 டாட்டா காட்டிய CSK.. கலக்கிய PBKS..!...