Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இணையத்தில் கவனம் பெறும் டொவினோ தாமஸின் நரிவேட்ட படத்தின் ட்ரெய்லர்!

Narivetta Official Trailer | அஜயந்தே ரண்டம் மோஷனம் படத்தில் தனது அற்புதமான நடிப்பிற்காக 48-வது கேரள திரைப்பட விமர்சகர்கள் விருதுகளில் சிறந்த நடிகருக்கான விருதை சமீபத்தில் பெற்றார் நடிகர் டொவினோ தாமஸ். பல திறமைகளுக்குப் பெயர் போன நடிகர் டொவினோ தாமஸ் இந்தப் படத்தில் தனது நடிப்பால் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றார்.

vinothini-aandisamy
Vinothini Aandisamy | Updated On: 25 Apr 2025 19:13 PM

மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் டொவினோ தாமஸ். இவர் நடிகர், தயாரிப்பாளர் என சினிமாவில் பன்முகத் தன்மையோடு வலம் வருகிறார். இந்த நிலையில் இவர் இறுதியாக இயக்குநர் பிருதிராஜ் சுகுமாரன் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியான எம்புரான் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து  தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள படம் நரிவேட்ட. இந்தப் படத்தை இயக்குநர் அனுராஜ் மனோகர் இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் நடிகர் டொவினோ தாம்ஸ் உடன் இணைந்து நடிகர்கள் சுராஜ் வெஞ்சாரமூடு, சேரன் என பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவான இந்தப் படத்தை இந்தியன் சினிமா கம்பெனி தயாரித்துள்ளது. மேலும் படம் மே மாதம் 16-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஒரு உண்மையான கதையை அடிப்படையாகக் கொண்டதாகக் கூறப்படும் படத்தின் டிரெய்லர், டொவினோவின் கதாபாத்திரமான ஒரு போலீஸ்காரரை விசாரணைக்காக இழுத்துச் செல்வதைக் காட்டுகிறது.

அந்த வீடியோவில் பார்த்தப்படி, மலைப்பகுதியின் போலீசாருக்கும் பழங்குடியினருக்கும் இடையே நடக்கும் பிரச்னையை இந்தப் படம் காட்டுகிரது. பழங்குடியினரை அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கு எதிரான போராட்டமாகும். நடிகரும் இயக்குநருமான சேரன் காவல் ஆய்வாளராக இந்தப் படத்தில் நடித்துள்ளார்.

டொவினோ தாமஸ் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

அவர் பழங்குடியினருடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிப்பதை வீடியோவில் காண முடியு. ஆனால் பதட்டங்கள் அதிகரிக்கும் போது, ​​பழங்குடியினரை அமைதிப்படுத்த போலீசார் வன்முறையை கையில் எடுக்கிறார்கள். டொவினோவின் கதாபாத்திரம் மட்டுமே அட்டூழியங்களுக்கு எதிராகப் பேச துணிந்தவர் போல அந்த வீடியோ காட்டுகிறது.

ஆனால் திடீரென ஏற்பட்ட திருப்பத்தில், ஒரு போராட்டக்காரரின் மரணத்திற்கு அவர் தான் காரணம் என்று குற்றம் சாட்டப்படுகிறது. ஒரு கட்டத்தில் டொவினோவே அதனை தான் செய்துக்கொண்டதாக பொறுப்பேற்கிறார். அதிகாரத்திற்கு எதிராக சாதாரண பழம்குடியின மக்கள் நடத்தும் போராட்டமே இந்தப் படம் என்பது ட்ரெய்லரைப் பார்க்கும் போது தெரிகிறது.

நான் எதுவாக இருந்தாலும் ஓபனாக கூறிவிடுவேன்.. நடிகர் அஜித் குமார்!
நான் எதுவாக இருந்தாலும் ஓபனாக கூறிவிடுவேன்.. நடிகர் அஜித் குமார்!...
விஜய் வருகை... மதுரை விமான நிலையத்தில் திரண்ட தவெக தொண்டர்கள்!
விஜய் வருகை... மதுரை விமான நிலையத்தில் திரண்ட தவெக தொண்டர்கள்!...
அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை - எவ்வளவு தெரியுமா?
அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை - எவ்வளவு தெரியுமா?...
அடுத்த போட்டியில் விளையாடுவேனா என்று தெரியாது - எம்எஸ் தோனி
அடுத்த போட்டியில் விளையாடுவேனா என்று தெரியாது - எம்எஸ் தோனி...
DMK-க்கு எதிராக அனைவரும் ஒன்றுசேர வேண்டும் - நயினார் நாகேந்திரன்
DMK-க்கு எதிராக அனைவரும் ஒன்றுசேர வேண்டும் - நயினார் நாகேந்திரன்...
சென்னை மக்களே அலர்ட்.. மாநகர பேருந்து வழித்தட எண்கள் மாற்றம்!
சென்னை மக்களே அலர்ட்.. மாநகர பேருந்து வழித்தட எண்கள் மாற்றம்!...
‘தன்னைத் தானே செதுக்கியவன்!’ - அஜித்குமார் பிறந்தநாள் ஸ்பெஷல்!
‘தன்னைத் தானே செதுக்கியவன்!’ - அஜித்குமார் பிறந்தநாள் ஸ்பெஷல்!...
பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சிக்கிய நாகை இளைஞர்
பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சிக்கிய நாகை இளைஞர்...
பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவில் பறக்க தடை.. மத்திய அரசு அதிரடி
பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவில் பறக்க தடை.. மத்திய அரசு அதிரடி...
ORS பவுடர் பயன்பாடு குறித்து பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு
ORS பவுடர் பயன்பாடு குறித்து பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு...
சுட்டெரிக்கும் வெயில்.. இன்னும் 3 டிகிரி வரை அதிகரிக்கும்!
சுட்டெரிக்கும் வெயில்.. இன்னும் 3 டிகிரி வரை அதிகரிக்கும்!...