Rajinikanth: இளம் இயக்குநருடன் இணையும் ரஜினி? – ரசிகர்கள் ஆச்சர்யம்!

Rajinikanth New Movie Update : தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாகக் கலக்கி வருபவர் ரஜினிகாந்த். இவரின் நடிப்பில் தற்போது கூலி மற்றும் ஜெயிலர் 2 என இரு படங்கள் உருவாகி வருகிறது. இந்த படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் இளம் இயக்குநர் ஒருவருடன் படத்தில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது, இது குறித்து விவரமாகப் பார்க்கலாம்.

Rajinikanth: இளம் இயக்குநருடன் இணையும் ரஜினி? - ரசிகர்கள் ஆச்சர்யம்!

ரஜினிகாந்த்

Published: 

17 May 2025 11:00 AM

நடிகர் ரஜினிகாந்த்  (Rajinikanth) நடிப்பில் இதுவரை பல படங்கள் வெளியாகி எதிர்பாராத ஹிட் கொடுத்துள்ளது. அதை தொடர்ந்து நடிகர் ரஜினியின் நடிப்பில் மட்டும் தமிழில் இரு படங்கள் உருவாகி வருகிறது. அதில் முதல் படம் கூலி (Coolie) , இந்த திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj)  இயக்கியுள்ளார். ரஜினியின் வேட்டையன் படத்தைத் தொடர்ந்து இந்த படத்தின் ஷூட்டிங்கும் கடந்த 2024ம் ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பமாகி , இந்த 2025ம் ஆண்டு மார்ச் இறுதியில் நிறைவடைந்தது. இந்த படமானது ஆக்ஷ்ன் மற்றும் செண்டிமெண்ட் கதைக்களத்துடன் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் , இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் ஜெயிலர் 2 (Jailer 2)  படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நெல்சன் இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனமானது தயாரித்து வருகிறது. இந்த படமானது கடந்த 2023ம் ஆண்டு வெளியான ஜெயிலர் 1 படத்தின் தொடர்ச்சி கதைக்களத்துடன் உருவாகி வருகிறது.

மேலும் இந்த படத்தில் நடிகர்கள் எஸ்.ஜே. சூர்யா, பகத் பாசில் மற்றும் பல்வேறு பான் இந்திய நடிகர்களும் நடித்து வருகிறார்கள். இந்த படத்தினை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் இளம் இயக்குநர் ஒருவரின் படத்தில் இணையவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த இயக்குநர் வேறு யாருமில்லை, தெலுங்கு இயக்குநர் விவேக் ஆத்ரேயாதான்.

இவரின் இயக்கத்தில்தான் நடிகர் ரஜினிகாந்த் புதிய படத்தில் இணையாயுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த தகவலானது எந்த அளவிற்கு உண்மை என்றார் தெரியவில்லை. மேலும் இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் விவேக் ஆத்ரேயா இன்ஸ்டாகிராம் பதிவு :

 

யார் இந்த விவேக் ஆத்ரேயா ?

இயக்குநர் விவேக் ஆத்ரேயா, தெலுங்கில் பிரபல இயக்குநர் ஆவார். இவர் இறுதியாக நடிகர் நானியின் “சரிபோதா சனிவாரம்” என்ற படத்தை இயக்கியிருந்தார். இந்த படமும் நல்ல வரவேற்பைப் பெற்று ஹிட்டானது. மேலும் நானியுடன் அண்டே சுந்தரிகி என்ற படத்தையும்,  நடிகர் நானியை வைத்து இயக்கியுள்ளார். இயக்குநர் விவேக் ஆத்ரேயா நானியை வைத்து மட்டும் 2 படங்களை இயக்கி ஹிட் கொடுத்திருக்கிறார்.

இந்த படத்தைத் தொடர்ந்து ரஜினியின் புதிய படத்தை இயக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிவருகிறது. இந்த புதிய படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமானது தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வெளியீட்டிற்குக் காத்திருக்கும் ரஜினியின் கூலி :

லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கூலி. நடிகர் ரஜினிகாந்த்தின் முன்னணி நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்து, தெலுங்கு, கன்னட மற்றும் இந்தி போன்ற சினிமா பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளார்கள். இந்த படமானது வரும் 2025, ஆகஸ்ட் 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்துதான் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.