Karthi : கார்த்தியின் 29வது படத்தின் ஷூட்டிங் எப்போது தெரியுமா.. இந்த நடிகர்களும் இணைந்து நடிக்கிறார்களா?

Karthi 29 Movie Shooting Update : தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் கார்த்தி. இவரின் நடிப்பில் மெய்யழகன் படம் இறுதியாக வெளியாகி மக்கள் மனதை வென்றது. அந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். தமிழ் இயக்கத்தில் உருவாக்கவுள்ள கார்த்தி 29 படத்தின் ஷூட்டிங் மற்றும் நடிகர்கள் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

Karthi : கார்த்தியின் 29வது படத்தின் ஷூட்டிங் எப்போது தெரியுமா.. இந்த நடிகர்களும் இணைந்து நடிக்கிறார்களா?

கார்த்தி 29வது படம்

Published: 

24 May 2025 16:05 PM

கோலிவுட் சினிமாவில் பழம்பெரும் நடிகர்களில் ஒருவர் சிவகுமார் (Shivakumar) .  இவரின் இரு மகன்களான சூர்யா (Suriya)மற்றும் கார்த்தியும் (Karthi) பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்திருக்கிறார்கள். இறுதியாக சூர்யாவின் தயாரிப்பில் நடிகர் கார்த்தியின் நடிப்பில் வெளியான படம் மெய்யழகன்   (Meiyazhagan) இந்த படத்தை 96 பட இயக்குநர் பிரேம் குமார் இயக்கியிருந்தார். இந்த படம் வசூலில் அந்த அளவிற்கு வெற்றிபெறாவிட்டாலும், மக்கள் மனதில் பெரும் இடத்தை பிடித்தது. இந்த படத்தைத் தொடர்ந்து நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியார் (Vaa Vaathiyaar) மற்றும் இயக்குநர் பி.எஸ் . மித்ரன் இயக்கத்தில் சர்தார் 2 (Sardar 2) போன்ற படங்களில் நடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட வேளைகளில் இருந்து வருகிறது.

இந்த படத்தினை தொடர்ந்து நடிகர் கார்த்தி நானியின் ஹிட் 3 படத்திலும் கேமியோ ரோலில் நடித்திருந்தார். இதன் மூலம் ஹிட் 4 படத்தில் முன்னணி நடிகராக நடிக்கவுள்ளார். இந்த படங்களைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி இயக்குநர் தமிழ் (Tamizh) இயக்கத்தில், தனது 29வது படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இயக்குநர் தமிழ் (Tamizh),  டாணாக்காரன் என்ற படத்தை இயக்கி மிகவும் பிரபலமானார். அதைத் தொடர்ந்து நடிகர் கார்த்தியின் 29வது திரைப்படத்தை இயக்கவுள்ளார். தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் தொடர்பான அப்டேட் வெளியாகியுள்ளது.

கார்த்தி 29 பட ஷூட்டிங் அப்டேட் :

நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் தமிழ் கூட்டணியில் உருவாக்கவுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் வரும் 2025, ஜூன் தொடக்கத்தில் ராமேஸ்வரத்தில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் கார்த்தியுடன் நடிகர் வடிவேலுவும் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளாராம். மேலும் கார்த்திக்கு ஜோடியாக மாநாடு படத்தில் நடித்த நடிகை கல்யாணி பிரியதர்சன் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த படம் கடல் மற்றும் கப்பல் சார்த்தக் கதைக்களத்துடன் உருவாக்கவுள்ளதாம். மேலும் இந்த படமானது 2 பாகங்களாக உருவாக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் கார்த்தியின் இன்ஸ்டாகிராம் பதிவு :

நடிகர் கார்த்தியின் கைவசத்தில் உருவாகிவந்த சர்தார் 2 மற்றும் வா வாத்தியார் போன்ற படங்கள் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது, இதில் இயக்குநர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள சர்தார் 2 படமானது மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. இந்த படமானது இந்த 2025 ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்றார் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சிலர் இந்த படம் 2026ம் ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாகும் என்றும் கூறிவருகின்றனர். ஆனால் படத்தின் ரிலீஸ் தொடர்பான அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.