லைப் இன்சூரன்ஸ் எடுக்க கடுமையான விதிமுறைகள் – என்ன தகுதிகள் தேவை?

Life Insurance: இந்தியாவில் லைப் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஒரு காப்பீட்டை அங்கீகரிக்கும் முன்பு முழுமையான மதிப்பீட்டு செயல்முறையை மேற்கொள்கின்றன. இந்த செயல்முறை "அண்டர்ரைட்டிங்" (Underwriting) என அழைக்கப்படுகிறது. இதில், விண்ணப்பதாரரின் ஆரோக்கியம், வாழ்க்கை முறை, தொழில், மற்றும் நிதி நிலை போன்ற காரணிகள் மதிப்பீடு செய்யப்படுகின்றன.

லைப் இன்சூரன்ஸ் எடுக்க கடுமையான விதிமுறைகள் – என்ன தகுதிகள் தேவை?

லைப் இன்சூரன்ஸ் எடுக்க கடுமையான விதிமுறைகள்

Published: 

21 Mar 2025 13:35 PM

இன்சூரன்ஸ் (Insurance) நிறுவனங்கள் மிகவும் கடுமையான மற்றும் சிக்கலான விதிமுறைகளை கடைபிடித்துவருகின்றன. இதன் காரணமாக லைப் இன்சூரன்ஸ் லைப் ( Lifie Insurance) மிகவும் சிக்கலானதாக மாறி வருகிறது. இது தொடர்பாக ஜெரோதா நிறுவனத்தின் சிஇஓ தனது எக்ஸ் பக்கத்தில் அதிர்ச்சி தகவல் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அவரது பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, பலர் லைப் இன்ஸ்சூரன்ஸ் எடுக்காமல் இருப்பதற்கான காரணம், காப்பீட்டு திட்டங்கள் மிகுந்த குழப்பமானவையாக உள்ளன. அவற்றை புரிந்துகொள்ள அதிக சிரமம் இருப்பது தான் என குறிப்பிட்டுள்ளார். மேலும், தனிப்பட்ட வணிகம் மற்றும் நிதி தொடர்பான வேலைகளை துவங்கும்போது, சரியான லைப் இன்சூரன்ஸ் மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸ் வைத்திருப்பது மிகவும் சிறந்தது. பொருளாதார ரீதியாக உங்கள் குடும்பத்தினர் உங்களை சார்ந்திருந்தால் லைப் இன்சூரன்ஸ் இல்லாமல் இருப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் லைப் இன்சூரன்ஸ் செயல்முறை

இந்தியாவில் லைப் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஒரு காப்பீட்டை அங்கீகரிக்கும் முன்பு முழுமையான மதிப்பீட்டு செயல்முறையை மேற்கொள்கின்றன. இந்த செயல்முறை “அண்டர்ரைட்டிங்” (Underwriting) என அழைக்கப்படுகிறது. இதில், விண்ணப்பதாரரின் ஆரோக்கியம், வாழ்க்கை முறை, தொழில், மற்றும் நிதி நிலை போன்ற காரணிகள் மதிப்பீடு செய்யப்படுகின்றன. காப்பீடு வழங்குவதில் உள்ள ஆபத்து அளவை கணிக்க, காப்பீடு நிறுவனங்கள் இந்த விவரங்களை கவனமாக ஆய்வு செய்கின்றன.

லைப் இன்சூரன்ஸ் பெற தகுதி ?

காப்பீட்டு தொகையும் தகுதியும் தீர்மானிக்க பல காரணிகள் கணக்கில் கொள்ளப்படுகின்றன. வயது, மருத்துவ வரலாறு, புகைபிடிக்கும் பழக்கம், குடும்ப மருத்துவ வரலாறு, வருமானம் போன்றவை முக்கியமானவை. இந்த விவரங்களை ஆய்வு செய்து, காப்பீட்டு நிறுவனங்கள் பிரீமியம் தொகை மற்றும் காப்பீட்டு பொருத்தத்தை தீர்மானிக்கின்றன. எதிர்பாராத விதமாக, கொரோனா காாலகட்டத்துக்கு பிறகு இன்சூரன்ஸ் கம்பெனிகள் கம்பெனிகள் தங்களது இன்சூரன்ஸ் பெறுவதர்கான தகுதி நிலையை மதிப்பீடு செய்வதை மிக கடுமையானதாக மாற்றியுள்ளனர்.

இதன் விளைவாக, முன்னதாக பெரிதாக கருதப்படாத சிறிய உடல்நலக் குறைபாடுகளும் இப்போது லைப் இன்சூரன்ஸ் பெறுவதற்கான தகுதியை பாதிக்கக்கூடிய நிலையை உருவாக்கியுள்ளன. மேலும், காப்பீட்டு கேட்பவர்கள் அதன் பலன்களை விரைவாக பெற முடியாமல் காலதாமதத்துக்குள்ளாகின்றனர்.

பலர் காப்பீட்டு கொள்கைகளை புரிந்துகொள்ள முடியாமல் தவிக்கிறார்கள், ஏனெனில் அவற்றில் இடம்பெற்றிருக்கும் தொழில்நுட்பச் சொற்கள் மற்றும் மறைந்த நிபந்தனைகள் அவர்களுக்கு பெரும் சவால்களை ஏற்படுத்தியுள்ளன. அதில் வார்த்தைகளுக்கு அங்கே எதன் பொருளில் குறிப்பிடப்பட்டுள்ளது என புரிந்துகொள்வது மிக முக்கியம். மேலும், காப்பீட்டு நிறுவனங்கள் தங்களின் விதிமுறைகளை அடிக்கடி மாற்றுவதால், இந்த குழப்பம் இன்னும் அதிகமாகிறது.

அவற்றில் இடம்பெற்றிருக்கும் விதிவிலக்குகளை நன்கு அறிந்துகொள்வது, பல்வேறு கொள்கைகளை ஒப்பிடுதல் , ஒரே காப்பீட்டு நிறுவனத்தில் மட்டும் அல்லாமல், பல நிறுவனங்களின் திட்டங்களை நன்கு ஆராய்ந்து தேர்வு செய்வது அவசியம். மருத்துவ பரிசோதனைக்கு தயாராக இருப்பது அவசியம். தவறான தகவல்கள் வழங்குவதால் காப்பீட்டு கோரிக்கையை நிராகரிக்கும் வாய்ப்பு உள்ளது, எனவே அனைத்து தகவல்களையும் உண்மையாக வழங்குதல் அவசியம்.

உகந்த காப்பீட்டு திட்டத்தை தேர்வு செய்ய உதவுகிற முக்கிய அம்சங்கள்:

விதிவிலக்குகள் (Exclusions) பார்க்கவும் எந்த விதமான நிலைகள் மற்றும் நோய்கள் காப்பீட்டில் உள்ளடங்காது என்பதை கவனமாக சரிபார்க்க வேண்டும். அதே போல சில நோய்களுக்கு, குறிப்பிட்ட காலம் வரை உரிமை கோர முடியாது. எனவே காப்பீட்டின் காத்திருப்பு காலத்தைக் கவனிக்க வேண்டும். காப்பீட்டு நிறுவனம் கோரிக்கைகளை எவ்வளவு விரைவாகவும் எளிதாகவும் முடிக்கிறது என்பதை மதிப்பீடு செய்வது முக்கியம். ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவது உங்கள் காப்பீட்டு ஒப்புதலை எளிதாக்கலாம், ஏனெனில் காப்பீட்டு நிறுவனங்கள் மருத்துவ அபாயங்களை மதிப்பீடு செய்கின்றன. மேலும், சரியான மருத்துவ தகவல்களை வெளிப்படையாக தெரிவிப்பது முக்கியம், இதனால் காப்பீட்டு கோரிக்கையின் போது எந்தவிதமான சிக்கல்களும் ஏற்படாது.