Aadhaar : ஆதாரில் பெயரை திருத்தம் செய்ய வேண்டுமா?.. ஆன்லைனில் மிக சுலபமாக செய்து முடித்துவிடலாம்!
Aadhaar Name Correction | இந்தியாவில் ஆதார் மிகவும் முக்கியமான ஆவணமாக உள்ளது. ஆதார் கார்டில் உள்ள விவரங்கள் மிகவும் துல்லியமாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இந்த நிலையில், ஆன்லைன் மூலம் ஆதார் கார்டில் பெயர் திருத்தம் செய்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
UIDAI (Unique Identification Authority of India) இந்தியாவில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் ஆதார் (Aadhaar) அட்டையை வழங்குகிறது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமக்களுக்கும் இது மிகவும் கட்டாயமாக உள்ளது. ஆதார் கார்டு இல்லை என்றால் அரசின் பல திட்டங்கள் மற்றும் சேவைகளை பெற முடியாத சூழல் உள்ளது. ஒரு குழந்தை பள்ளியில் சேறுவது முதல் வயதானவர்களுக்கு மருத்துவ சிகிச்சைள் அளிக்கப்படுவது வரை அனைத்திற்கும் இந்த ஆதார் கார்டு மிகவும் கட்டாயமாக உள்ளது.
ஆதார் விவரங்கள் துல்லியமாக இருப்பது கட்டாயம்
ஆதார் கார்டு இந்தியர்களின் மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாக கருதப்படும் நிலையில், அதில் இருக்கும் தகவல்கள் அனைத்தும் மிகவும் துல்லியமாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. ஒருவேளை ஆதார் கார்டில் இருக்கும் விவரங்கள் தவறாகவோ அல்லது வேறு ஏதேனும் முக்கிய ஆவணத்துடன் அது ஒற்று போகவில்லை என்றால் சில சேவைகளை செய்ய முடியாத சூழல் ஏற்படும். எனவே ஆதார் கார்டில் தவறாக உள்ள பெயரை எப்படி திருத்தம் செய்வது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஆதாரில் பெயர் திருத்தம் மேற்கொள்வது எப்படி?
- அதற்கு முதலில் ஆதார் அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளமான uidai.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
- அதில் மை ஆதார் (My Aadhaar) என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, அதில் ஆதார் அப்டேட் என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
- அங்கு உங்கள் ஆதார் எண், கேட்ப்சா குறியீட்டை உள்ளிட்டு Send OTP என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- அதனை தொடர்ந்து உங்கள் மொபைல் எண்ணுகு ஓடிபி அனுப்பப்படும்.
- அந்த ஒடிபியை பதிவிட்டு உள்நுழைய வேண்டும்.
- அப்போது உங்கள் பெயரில் என்ன திருத்தம் செய்ய வேண்டுமோ அதனை மேற்கொண்டு பிறது அதற்கான ஒரு அடையாள ஆவணத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் உள்ளிட்ட அடையாள ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்.
- உரிய ஆவணத்தை பதிவேற்றம் செய்து கோரிக்கையை ஒப்படைக்க வேண்டும்.
- இதனை தொடர்ந்து உங்கள் மொபைல் எண்ணுக்கு URN (Update Request Number) அனுப்பி வைக்கப்படும். அதனை வைத்து உங்கள் கோரிக்கையின் நிலை என்ன என்பதை நீங்கள் தெரிந்துக்கொள்ளலாம்.
மேற்குறிப்பிட்ட இந்த நடைமுறைகளை பின்பற்றி ஆதார் கார்டில் தவறாக உள்ள பெயரை ஆன்லைன் மூலம் மிக சுலபமாக அப்டேட் செய்துவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தேவைப்படும் ஆதார்
ஆதார் கார்டு பல சேவைகளுக்கு மிக முக்கியமான அடையாள அட்டையாக உள்ளது. இவ்வாறு முக்கிய ஆவணமாக உள்ள ஆதார் கார்டில், தகவல்கள் தவறாக இருக்கும் பட்சத்தில் அது உங்களது பனியை கடினமாக்கிவிடும். எனவே எப்போது உங்கள் ஆதார் கார்டில் இருக்கும் விவரங்கள் சரியாக இருப்பதை உறுதி செய்வது சிறந்தது.