Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

மே தினமும் வார விடுமுறையும்: சிறப்பு பேருந்துகள் இயக்கம்… போக்குவரத்துக் கழக அறிவிப்பு!

Special Bus Services for May Day: தமிழ்நாடு அரசு, 2025 மே 1-ம் தேதி உழைப்பாளர் தினம் மற்றும் வார இறுதியில் பயணிகளின் அதிக எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, சிறப்பு பேருந்துகளை இயக்கும். கிளாம்பாக்கம், கோயம்பேடு, பெங்களூர் மற்றும் மற்ற பகுதிகளில் 2025, 30 ஏப்ரல், 2, 3, 4 மே அன்று பல்வேறு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

மே தினமும் வார விடுமுறையும்: சிறப்பு பேருந்துகள் இயக்கம்… போக்குவரத்துக் கழக அறிவிப்பு!
மே தினமும் வார விடுமுறையும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்Image Source: pinrest
sivasankari-bose
Sivasankari Bose | Published: 29 Apr 2025 07:09 AM

தமிழ்நாடு, ஏப்ரல் 29: உழைப்பாளர் தினம் (2025 மே 1) (May Day) மற்றும் வார இறுதியில் அதிகப்படியான பயணிகள் எதிர்பார்க்கப்படுவதால், தமிழ்நாடு அரசு சிறப்பு பேருந்துகளை (Special Bus Services for May Day) இயக்குவதற்கு திட்டமிட்டுள்ளது. கிளாம்பாக்கம் மற்றும் கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, நாகபட்டினம் உள்ளிட்ட இடங்களுக்கு 2025 ஏப்ரல் 30, மே 2, 3 அன்று கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். பெங்களூர், திருப்பூர், ஈரோடு, கோவை, இந்த பகுதிகளிலிருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. மாதவரம்: 2025 மே 3 வரை தினசரி சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதை அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 மே 4 ஞாயிறு அன்று ஊர்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு நோக்கி 715 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

மே தினத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

உழைப்பாளர் தினம் (மே 1, வியாழக்கிழமை) மற்றும் முகூர்த்த நாள் (மே 2, வெள்ளிக்கிழமை)-க்கு பிறகு வரும் வார இறுதியில் (மே 3, 4), தமிழகம் முழுவதும் பொதுமக்கள் அதிகளவில் பயணம் செய்யவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பொருட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், தாயாராக இயக்கப்படும் தினசரி பேருந்துகளுக்கு கூடுதலாக, சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது.

கிளாம்பாக்கம் மற்றும் கோயம்பேட்டிலிருந்து கூடுதல் பேருந்துகள்

சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி உள்ளிட்ட இடங்களுக்கு:

2025 ஏப்ரல் 30 அன்று 565 சிறப்பு பேருந்துகள்

2025 மே 2, 3 தேதிகளில் 375 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

அதேபோல், கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகபட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு:

2025 ஏப்ரல் 30 அன்று 100 பேருந்துகள்

2025 மே 2 மற்றும் 3 தேதிகளில் 90 பேருந்துகள் இயக்கப்படும்.

பிற மாவட்டங்களிலும் சிறப்பு ஏற்பாடுகள்

பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை பகுதிகளில் இருந்து பல்வேறு இடங்களுக்கு மொத்தம் 250 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து 2025 ஏப்ரல் 30 முதல் 2025 மே 3 வரை தினமும் 24 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

2025 மே 4 அன்று சென்னை, பெங்களூரு திரும்பும் சிறப்பு ஏற்பாடுகள்

2025 மே 4 (ஞாயிறு) அன்று ஊருக்கு சென்ற பயணிகள் திரும்பும் போது, அவர்களது பயணம் வசதியாக அமைய, சொந்த ஊர்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு நோக்கி மொத்தம் 715 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

முன்பதிவு செய்யும் பயணிகள் எண்ணிக்கை

இந்த வார இறுதியில் முன்பதிவுகள் வழியாக ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட பயணிகள் விவரம்:

புதன்கிழமை: 16,123 பயணிகள்

வியாழக்கிழமை: 6,173 பயணிகள்

வெள்ளிக்கிழமை: 5,419 பயணிகள்

சனிக்கிழமை: 4,547 பயணிகள்

ஞாயிறு: 11,254 பயணிகள்

முன்பதிவு மூலம் பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடிய நிலை உள்ளதால், தொலைதூர பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்க, www.tnstc.in இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலமாக முன்பதிவு செய்து பயணிக்குமாறு போக்குவரத்து கழகம் கேட்டுக்கொண்டுள்ளது. சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க, அனைத்து பேருந்து நிலையங்களிலும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விஜய் வருகை... மதுரை விமான நிலையத்தில் திரண்ட தவெக தொண்டர்கள்!
விஜய் வருகை... மதுரை விமான நிலையத்தில் திரண்ட தவெக தொண்டர்கள்!...
அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை - எவ்வளவு தெரியுமா?
அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை - எவ்வளவு தெரியுமா?...
அடுத்த போட்டியில் விளையாடுவேனா என்று தெரியாது - எம்எஸ் தோனி
அடுத்த போட்டியில் விளையாடுவேனா என்று தெரியாது - எம்எஸ் தோனி...
DMK-க்கு எதிராக அனைவரும் ஒன்றுசேர வேண்டும் - நயினார் நாகேந்திரன்
DMK-க்கு எதிராக அனைவரும் ஒன்றுசேர வேண்டும் - நயினார் நாகேந்திரன்...
சென்னை மக்களே அலர்ட்.. மாநகர பேருந்து வழித்தட எண்கள் மாற்றம்!
சென்னை மக்களே அலர்ட்.. மாநகர பேருந்து வழித்தட எண்கள் மாற்றம்!...
‘தன்னைத் தானே செதுக்கியவன்!’ - அஜித்குமார் பிறந்தநாள் ஸ்பெஷல்!
‘தன்னைத் தானே செதுக்கியவன்!’ - அஜித்குமார் பிறந்தநாள் ஸ்பெஷல்!...
பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சிக்கிய நாகை இளைஞர்
பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சிக்கிய நாகை இளைஞர்...
பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவில் பறக்க தடை.. மத்திய அரசு அதிரடி
பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவில் பறக்க தடை.. மத்திய அரசு அதிரடி...
ORS பவுடர் பயன்பாடு குறித்து பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு
ORS பவுடர் பயன்பாடு குறித்து பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு...
சுட்டெரிக்கும் வெயில்.. இன்னும் 3 டிகிரி வரை அதிகரிக்கும்!
சுட்டெரிக்கும் வெயில்.. இன்னும் 3 டிகிரி வரை அதிகரிக்கும்!...
தொடர் தோல்வி! ஐபிஎல் 2025 டாட்டா காட்டிய CSK.. கலக்கிய PBKS..!
தொடர் தோல்வி! ஐபிஎல் 2025 டாட்டா காட்டிய CSK.. கலக்கிய PBKS..!...