Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Kitchen Hacks: பருப்பு வேகவைக்கும்போது குக்கரிலிருந்து தண்ணீர் வெளியேறுகிறதா? இதை செய்தால் நுரை பொங்காது!

Stop Dal Spillage: பருப்பு சமைக்கும் போது குக்கரில் இருந்து தண்ணீர் வழியும் பிரச்சனைக்கு எளிய தீர்வுகள் இங்கே! பருப்பை 30 நிமிடங்கள் ஊற வைப்பது, சிறிது நெய் அல்லது எண்ணெய் சேர்ப்பது, மஞ்சள் தூள் சேர்ப்பது, சரியான அளவு தண்ணீர் பயன்படுத்துவது போன்றவை குக்கர் ஓவர்ஃப்ளோவைத் தடுக்கும். குக்கரின் விசில் மற்றும் காற்றோட்டக் குழாயை சுத்தம் செய்வதும் அவசியம்.

Kitchen Hacks: பருப்பு வேகவைக்கும்போது குக்கரிலிருந்து தண்ணீர் வெளியேறுகிறதா? இதை செய்தால் நுரை பொங்காது!
பருப்பு வேகவைக்கும் முன் செய்ய வேண்டிய விஷயங்கள்Image Source: Freepik
mukesh-kannan
Mukesh Kannan | Published: 29 Apr 2025 14:48 PM

இந்திய சமையலறையில் ஒவ்வொரு வீட்டில் பருப்பு மிக முக்கிய உணவாக உள்ளது. இது உணவுக்கு சுவையை தருவது மட்டுமின்றி, ஆரோக்கியத்திலும் மிகவும் நன்மை தரும். இருப்பினும் தினந்தோறும் பருப்பு (Dal) சமைக்கும்போது, அதன் தண்ணீர் பெரும்பாலும் விசில் வழியாக வெளியே வந்து மூடி மீது கறை படிய செய்கிறது. மேலும், இது குக்கரில் (Pressure Cooker) இருந்து வழிந்தோடி அடுப்பு மீதும் சமையலறை (Kitchen) சுவர்களையும் கறைபடுத்துகிறது. சில சமயங்களில் இந்த பருப்பு தண்ணீர் நம் உடலில் தெறிக்கும்போது எரிச்சலை தரும். இந்தநிலையில், பருப்பை சமைப்பதற்கு முன் ஒரு சில எளிய விஷயங்களைச் செய்தால், இந்தப் பிரச்சனையை முற்றிலுமாக நீக்கலாம். அது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

பருப்பை ஊறவைத்தல்:

நீங்கள் பருப்பு சமைக்க திட்டமிட்டிருந்தால், அதற்கு முன் பருப்பை குறைந்தது 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைத்து கொள்ளுங்கள். இதனால், பிரஷர் குக்கரில் பருப்பானது விரைவாகவும், நன்றாகவும் வெந்துவிடும். இதன் காரணமாக, ஊறவைத்த பருப்பு மிகவும் லேசாக வெந்து, பருப்பு அதிலிருந்து நுரை வரும் வாய்ப்பு கணிசமாக குறையும். இதனால், பருப்பு வேகவைத்த தண்ணீர் விசில் வழியாக வெளியே வராது.

பருப்பை ஊறவைக்காமல் நேரடியாக கழுவி குக்கரில் வேகவைக்கும்போது, அதிக நுரை உருவாகும். இந்த நுரை குக்கரின் விசில் வழியாக வெளியேறி தொல்லை தரும். சில நேரங்களில் இந்த நுரை குக்கரின் விசில் வெளியேறுவதையும் தடுக்கும். இதனால், பருப்பில் இருந்த நுரை வெளியேறும்போது, பிரஷர் வெளியேறாது. இது சில சமயங்களில் குக்கர் வெடிப்பது போன்ற ஆபத்துகளும் ஏற்படலாம்.

பருப்பு வேகவைக்கும்முன் செய்ய வேண்டிய சில விஷயங்கள்:

  • பிரஷர் குக்கரில் பருப்பை வேகவைப்பதற்கு முன், அதில் 1 அல்லது 2 சொட்டு நெய் அல்லது எண்ணெய் சேர்க்கலாம். இது நுரை உருவாகாமல் தடுத்து நுரை வெளியேறும் வாய்ப்பை தடுக்கும்.
  • பருப்பு வேகவைக்கும் முன் சிறிது மஞ்சள் தூள் சேர்ப்பது பருப்பின் சுவையையும் நிறத்தையும் அதிகரிப்பது மட்டுமல்லாமல், பருப்பை ஜீரணிக்கவும், நுரையைக் குறைக்கவும் உதவுகிறது.
  • பருப்பில் தேவைக்கு அதிகமாக தண்ணீர் சேர்ப்பது அதிக நுரை உருவாவதற்கு வழிவகுக்கும். அளவை சமநிலையில் வைத்திருங்கள்.
  • பிரஷர் குக்கரின் விசில் மற்றும் காற்றோட்டக் குழாயை அவ்வப்போது சுத்தம் செய்யுங்கள், இதனால் நுரை அல்லது துகள்கள் சிக்கிக் கொள்ளாமல், பாதையைத் தடுக்காது.

பருப்பை ஊறவைக்க சரியான வழிமுறை என்ன..?

பருப்பை வேகவைக்கும்முன், அவற்றை பைப் குழாயில் 2 முதல் 3 முறை நன்றாக கழுவி எடுக்கவும். இப்போது, ஒரு பாத்திரத்தில் பருப்பை கொட்டி, அதிக் குறைந்தது பருப்பை விட 2 மடங்கு தண்ணீரை சேர்க்கவும். அதில், சிறிதளவு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வேகவைக்கலாம்.

உலகத்தில் உயர்ந்தது தாய்மை.. குரங்கின் தாகம் தீர்த்த பெண்!
உலகத்தில் உயர்ந்தது தாய்மை.. குரங்கின் தாகம் தீர்த்த பெண்!...
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!...
தந்தையின் கடையில் திருடி ஐபோன் வாங்கிய சிறுவன்: அதிர்ச்சி சம்பவம்
தந்தையின் கடையில் திருடி ஐபோன் வாங்கிய சிறுவன்: அதிர்ச்சி சம்பவம்...
2025ல் மாணவர்களுக்கான பெஸ்ட் லேப்டாப் - எப்படி தேர்ந்தெடுப்பது ?
2025ல் மாணவர்களுக்கான பெஸ்ட் லேப்டாப் - எப்படி தேர்ந்தெடுப்பது ?...
டூரிஸ்ட் ஃபேமிலி, ஹிட் 3 படங்களுக்கு வாழ்த்து சொன்ன நடிகர் சூர்யா
டூரிஸ்ட் ஃபேமிலி, ஹிட் 3 படங்களுக்கு வாழ்த்து சொன்ன நடிகர் சூர்யா...
ஜப்பானில் தென்பட்ட அரியவகை வெள்ளைநிற திமிங்கலம்!
ஜப்பானில் தென்பட்ட அரியவகை வெள்ளைநிற திமிங்கலம்!...
ஏசி குளிரும் வெயிலும்: ஆரோக்கியமாக இருக்க 8 அறிவுரைகள்!
ஏசி குளிரும் வெயிலும்: ஆரோக்கியமாக இருக்க 8 அறிவுரைகள்!...
குடும்பத்தினருடன் கீழடி சென்ற நடிகர் சிவகார்த்திகேயன்...
குடும்பத்தினருடன் கீழடி சென்ற நடிகர் சிவகார்த்திகேயன்......
சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியா கூட்டணியின் வெற்றி - CM ஸ்டாலின்
சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியா கூட்டணியின் வெற்றி - CM ஸ்டாலின்...
கோடைகாலத்தில் மூட்டு வலி பிரச்னை.. டாக்டர் சொல்லும் அட்வைஸ்!
கோடைகாலத்தில் மூட்டு வலி பிரச்னை.. டாக்டர் சொல்லும் அட்வைஸ்!...
பொக்கிஷமான தருணம்... வைரலாகும் ஷாலினி அஜித்தின் இன்ஸ்டா போஸ்ட்
பொக்கிஷமான தருணம்... வைரலாகும் ஷாலினி அஜித்தின் இன்ஸ்டா போஸ்ட்...