போருக்கு ரெடியான இந்தியா… போர் விமானங்களை இறக்கி சோதனை.. கதிகலங்கும் பாகிஸ்தான்!

Pahalgam Terror Attack : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து, எல்லையில் பதற்றமான சூழல் நிலவுகிறது. எந்த நேரத்தில் வேண்டுமானாலும், பாகிஸ்தானுக்கு இந்தியா பதிலடி கொடுக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த சூழலில், கங்கா விரைவுச் சாலையில் போர் விமானங்களை இறக்கி இந்திய சோதனையில் ஈடுபட்டு வருகிறது.

போருக்கு ரெடியான இந்தியா... போர் விமானங்களை இறக்கி சோதனை.. கதிகலங்கும் பாகிஸ்தான்!

விமானப்படை

Updated On: 

03 May 2025 08:19 AM

உத்தர பிரதேசம், மே 02 :  பஹல்காம் தாக்குதலை (Pahalgam Attack) தொடர்ந்து, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்த சூழலில், இந்தியா போர் விமானங்களை (Indian Air Force) இறக்கி சோதனையில் ஈடுபட்டு வருகிறது. உத்தரபிரதேசத்தின் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் உள்ள கங்கா விரைவுச் சாலையின் 3.5 கி.மீ நீளமுள்ள பகுதியில் இந்திய விமானப்படை போர் விமானங்களை இறக்கி சோதனை நடத்தியுள்ளது. அதுவும் கங்கா விரைவுச் சாலையில் முதல்முறையாக இந்திய விமானப்படை போர் விமானங்களை இறக்கி சோதனை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால், பாகிஸ்தான் இந்தியா இடையே மேலும் பதற்றம் அதிகரித்து இருக்கிறது.

போருக்கு ரெடியான இந்தியா

2025  ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில்  பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 22 பேர் கொல்லப்பட்டனர். இந்த  தாக்குதல் இந்தியா உட்பட உலக நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதோடு, இந்தியா பாகிஸ்தான் இடையேயான உறவில் கலக்கம் ஏற்பட்டது.

இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தாலும்,  இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானுக்கு முக்கிய பங்கு இருப்பதாக குற்றச்சாட்டி உள்ளது. இதனால், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மேலும், பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இந்திய பிரதமர் மோடி உள்ளிட்டோர் சூளுரைத்து வருகின்றனர். இதனால், எல்லையில் பதற்றம் சூழல் நிலவுகிறது. எல்லையில்  கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக இந்தியா ராணுவப்படைக்கும், பாகிஸ்தான் ராணுவ படைக்கும் துப்பாக்கிச் சண்டை நிலவி வருகிறது.

போர் விமானங்களை இறக்கி சோதனை


மேலும், பயங்கரவாதிகள் ஒழிக்கும் முயற்சியில் முப்படைகளும் தயாராகி வருகிறது.  இதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் மீது இந்தியா எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்று கூறப்படுகிறது. இதனால், பாகிஸ்தான் அச்சத்திலேயே உள்ளது. இந்த நிலையில், போர் விமானங்கள் வைத்து இந்தியா 2025 மே 2ஆம் தேதி ஒத்திகை பார்த்துள்ளது.

அதாவது, உத்தரபிரதேசத்தின் ஷாஜஹான்பூர் மாவட்டத்தில் உள்ள 3.5 கி.மீ நீளமுள்ள கங்கா விரைவுச் சாலையில் இந்திய விமானப்படை போர் விமானங்களை இறக்கி பயிற்சி மேற்கொண்டது.

இந்தப் பயிற்சியில் ரஃபேல், சுகோய்-30 எம்கேஐ, மிக்-29, மிராஜ்-2000, ஜாகுவார், ஏஎன்-32 சி-130ஜே சூப்பர் ஹெர்குலஸ் மற்றும் எம்ஐ-17 ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட முன்னணி விமானங்களின் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின்போது விமானத்தின் ஓட்டம், செயல்பாடு, போர் திறன் உள்ளிட்டவை பார்க்கப்பட்டது.

இந்த சோதனையில் பலமுறை விமானங்கள் தரையிறங்கும் மற்றும் புறப்படும் சூழ்ச்சிகள் இடம்பெற்றன. இந்தியாவின் முதல் விரைவுச்சாலையுடன் ஒருங்கிணைக்கப்பட்ட விமான ஓடுபாதை இப்போது 24 மணி நேரமும் போர் விமான நடவடிக்கைகளுக்கு தயாராக உள்ளது.

Related Stories
நாடு முழுவதும் நீட் இளநிலை தேர்வு… 23 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு.. மாணவர்களுக்கு கட்டுப்பாடு!
Viral Video : பைக்கில் எழுந்து நின்று ஆபத்தான முறையில் சாகசம்.. சாலையில் விழுந்து நூலிழையில் உயிர் தப்பிய காட்சி!
வங்கி கணக்கிற்கு தவறாக வந்த ரூ.50,000 – தேர்வில் 97% பெற்ற மாணவி – என்ன நடந்தது தெரியுமா?
Pahalgam Attack: பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு முதல் முறை! ஜம்மு காஷ்மீர் முதல்வரை சந்தித்த பிரதமர் மோடி.. பதட்டத்தில் பாகிஸ்தான்!
பஹல்காம் தாக்குதலுக்கு பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் காரணமா? முன்னாள் ராணுவ அதிகாரியின் வீடியோவால் சர்ச்சை
மொபைல் கேமிங்கில் மூழ்கும் இந்திய Gen Z இளைஞர்கள் – அதிர்ச்சி தரும் சமீபத்திய ஆய்வு