Viral Video : பைக்கில் எழுந்து நின்று ஆபத்தான முறையில் சாகசம்.. சாலையில் விழுந்து நூலிழையில் உயிர் தப்பிய காட்சி!

Young Man who Had An Adventure On Highway : டெல்லி-ஜெய்ப்பூர் நெடுஞ்சாலையில் பைக் ஓட்டுநர் ஒருவர் சாகச ஸ்டண்ட் செய்து விபத்தில் சிக்கிய வீடியோ வைரலாகியுள்ளது. பைக்கில் நின்று சென்ற அவர் சமநிலை இழந்து கீழே விழுந்தார். அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் இல்லை. இணையவாசிகள் அவரது செயலைக் கண்டித்து வருகின்றனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Viral Video : பைக்கில் எழுந்து நின்று ஆபத்தான முறையில் சாகசம்.. சாலையில் விழுந்து நூலிழையில் உயிர் தப்பிய காட்சி!

வைரல் வீடியோ

Published: 

03 May 2025 23:29 PM

வளர்ந்துவரும் காலங்களில் மக்களின் வாழ்க்கை முறைகளை மாற்றி வருகின்றனர். அந்த வகையில் பணக்காரர்கள் முதல் சாதாரண மனிதர்கள் (rich people to ordinary people) வரை அனைவரின் கையில் பைக் மற்றும் கார் (Bike and car) போன்றவை இருக்கிறது. மேலும் சாதாரணமாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குச் செல்வதற்கு இந்த வாகனங்கள் உதவியாக இருந்து வருகிறது. அந்த வகையில் இளைஞர் ஒருவர் (young man)  நெடுஞ்சாலையில் எழுந்துநின்று பைக் ஒட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த நபர் பல பைக்குகள் மற்றும் கார்கள் செல்லும் நெடுஞ்சாலையில், பைக் மீது எழுந்துநின்று சாகசம் செய்துள்ளார். அவர் அவ்வாறு சாகசம் செய்யும்போது கீழ் விழுந்து விபத்தில் சிக்கினார். அவர் பைக்கில் இருந்து உருண்டபடியே சாலையில் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது. இந்த சம்பவமானது டெல்லி-ஜெய்ப்பூர் (Delhi-Jaipur) நெடுஞ்சாலையில் அரங்கேறியுள்ளது.

அந்த வீடியோவில் இளைஞன் ஒருவர் பைக்கில் நின்று கொண்டு திடீரென சாலையில் விழுந்த காட்சியானது வைரலாகி வருகிறது. அந்த சாலையில் கார்கள், பைக்குகள் எனப் பல வாகனங்கள் தொடர்ந்து செல்லும் சாலையில் இந்த விபத்து நடந்திருக்கிறது. நல்ல வேளையாக இந்த விபத்தில் அந்த இளைஞனுக்கு உயிர்ச்சேதம் எதுவும் ஆகவில்லை என்று கூறப்படுகிறது. அந்த இளைஞர் செய்த விஷயத்தை வீடியோவை பார்த்து நீங்களே தெரிந்துகொள்ளுங்கள்.

இணையத்தில் வைரலாகும் இளைஞரின் வீடியோ :

இந்த வீடியோவில், பைக் ஓட்டுநர் நெடுஞ்சாலையில் போகும் போது தனது இரு சக்கர வாகனத்தில் நிற்பதைக் காணலாம். அவர் தனது பைக் ஓட்டும் திறமையைக் காட்ட முயன்று, கைகளை இரு பக்கவாட்டில் நீட்டியபடி பைக் சீட் மீது ஏறிநின்று சாகசம் செய்ய முயன்றார். இருப்பினும், அவரது ஸ்டண்ட் அவருக்கே ஒரு ஆபத்தாக அமைந்தது. சாலையில் கார் ஒன்று அவரை முந்திச் சென்ற சில நொடிகளில் அவர் சமநிலையை இழந்து சாலையில் விழுந்தார்.

கீழே விழுந்த அவர் சாலையில் வேகமாக உருண்டோடினார். நல்லவேளை அதிர்ஷ்டவசமாக, எதிரே வந்த வாகனங்கள் அவர் மீது மோதாமல் அவரைக் கடந்து சென்றன. அந்த இளைஞர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். தற்போது இந்த காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஸ்டண்ட் செய்த இளைஞனுக்குத் தக்க தண்டனை கிடைத்தால்தான் அவர் மீண்டும் இவ்வாறு செய்யமாட்டார் என்றும் இதுபோன்று சாகசங்கள் ஈடுபடுபவர்களுக்கு நிச்சயம் தண்டனை கொடுத்துத்தான் ஆகவேண்டும் எனவும் இந்த வீடியோவின் கீழ் பலரும் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

வீடியோவின் கீழ் நெட்டிசன்களின் கருத்துக்கள் :

இந்த வீடியோவின் கீழ் முதல் பயனர் ஒருவர் “நானும் இந்த இளைஞர் வேறு ஏதோ செய்கிறார் என்று நினைத்தேன், ஆனால் அவர் இவ்வாறு பைக்கை வைத்து சாகசம் செய்து கீழே விழுவார் என்று நினைக்கவில்லை என்று கூறியுள்ளார். இரண்டாவது நபர் ஒருவர் “இந்த இளைஞர் மது போதையில் இருந்திருப்பார் போல, அதன் தேசிய நெடுஞ்சாலையில் சாகசம் செய்கிறார் என்றும் கூறியுள்ளார்.