Viral Video : சாலையில் வெப்பம் தாங்காமல் விழுந்த குதிரை.. பரபரப்பை ஏற்படுத்திய உரிமையாளரின் செயல்!

Kolkata Horse Collapse : கொல்கத்தாவில் வெயிலின் தாக்கத்தால் சாலையில் விழுந்த குதிரையை அதன் உரிமையாளர் கொடூரமாக நடத்திய வீடியோ வைரலானது. தாகத்தால் வீழ்ந்த குதிரையைத் தாக்கியும், கயிற்றால் இழுத்தும் எழுப்ப முயன்ற உரிமையாளர் மீது மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து உரிமையாளரை கைது செய்தனர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே கடும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.

Viral Video : சாலையில் வெப்பம் தாங்காமல் விழுந்த குதிரை.. பரபரப்பை ஏற்படுத்திய உரிமையாளரின் செயல்!

வைரல் வீடியோ

Published: 

02 May 2025 21:37 PM

நாடு முழுவதும் தற்போது வெப்பம் (Heat) அதிகரித்தது வருகிறது. இதன் காரணமாக மனிதர்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக உடலில் நீர்ச்சத்து குறைவது (Dehydration) , நீர் கொப்பளங்கள் ஏற்படுவது என பல்வேறு பிரச்னைகள் இருந்து வருகிறது. அந்த வகையில் வாயில்லா ஜீவன்களும் இந்த வெப்பத்தினால் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொல்கத்தாவில் (Kolkata)  குதிரை  (Horse) ஒன்றிற்கு நடந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  போக்குவரத்து (Traffic jam)  அதிகம் இருக்கும் சாலையில், இரு குதிரைகளைப் பூட்டிய வண்டி ஒன்று பிரதான சாலையில் சென்றுள்ளது. இதில் வெயிலின் தாக்கம் அதிகமான காரணத்தால் குதிரை ஒன்று நாடு ரோட்டிலேயே கீழே விழுந்துள்ளது. அந்த குதிரையை எழுப்பும் முயற்சியில் உரிமையாளர் செய்த விஷயமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறு அவர் என்ன செய்திருக்கிறார் தெரியுமா? அவர் குதிரையை முகத்தில் பலமாகத் தாக்கியுள்ளார்.

வெப்பத்தினால் பலமிழந்த குதிரையானது எழுந்துகொள்ள முடியாமல் சாலையில் மயங்கிக் கிடந்துள்ளது. அந்த குதிரை உரிமையாளர் கழுத்தில் இருந்த கயிற்றை இழுத்துப் பிடித்து, குதிரையை எழுப்ப முயற்சி செய்துள்ளார். ஆனால் இந்த வீடியோ இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த குதிரையின் உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய வைரல் வீடியோ :

இந்த வீடியோவில், இரண்டு குதிரைகள் குதிரை வண்டியை இழுத்துச் செல்கின்றன. அதில் சூரியனின் வெப்பத்தைத் தாங்க முடியாமல், தாகத்தால் சோர்வடைந்த ஒரு குதிரை, குதிரை வண்டியை இழுக்க முடியாமல் திடீரென சாலையில் கீழே விழுந்தது. இருப்பினும், குதிரைக்குத் தண்ணீர் ஊற்றி அதன் தாகத்தைத் தணிக்க வேண்டிய உரிமையாளர், அதைக் கொடூரமாக நடத்தினார். அதைத் தாக்கி, கயிற்றால் இழுத்துத் தூக்க முயன்றார். ஆனால் ஏற்கனவே களைத்துப்போய் இருந்தது. களைத்துப் போன குதிரையால் எழுந்திருக்க முடியவில்லை. இந்நிலையில், இது தொடர்பான வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

இந்த சம்பவத்தின் வீடியோவை அவர்கள் PETA India தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு, அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரை டேக் செய்து, வாயில்லா ஜீவனைக் கொடூரமாக நடத்திய உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரினர். இது வைரலான பிறகு, அரசாங்கம் அதை காவல்துறையின் கவனத்திற்குக் கொண்டு வந்தது, அவர்கள் குதிரை வண்டியின் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அறிவித்த கொல்கத்தா காவல்துறையினர் இந்த வீடியோவை எக்ஸ் தளத்தில் வெளியிட்டு உள்ளனர். தற்போது இந்த வீடியோவானது மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி வருகிறது.