ஜன நாயகன் ஷூட்டிங்… ரசிகர்களை பார்க்க ஜீப்பில் வந்த விஜய் – வைராலும் வீடியோ
Actor Vijay: தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது நடித்து வரும் படம் ஜன நாயகன். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகளி விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து தொடர்ந்து வீடியோவும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

விஜய்
நடிகர் விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். 2024-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் நடிகைகள் சிநேகா மற்றும் மீனாட்சி சௌத்ரி ஆகியோர் நாயகிகளாக நடித்திருந்தனர். இதில் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். நடிகர் விஜய் அப்பா மகன் என இரட்டை வேடங்களில் நடித்துள்ள நிலையில் மகன் விஜய் கதாப்பாத்திரத்திற்காக டீ ஏஜிங்கை பயன்படுத்தியுள்ளனர். இந்தப் படத்தில் நடிகர் விஜய் உடன் இணைந்து நடிகர்கள் மோகன், பிரபு தேவா, பிரசாந்த், அஜ்மல், ஜெயராம், லைலா, பிரேம் ஜி அமரன், வைபவ் என பலர் நடித்திருந்தனர். படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது.
இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இந்தப் படத்திற்காக இசையமைத்துள்ளார். மேலும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து இருந்தது. படத்தின் வசூல் பாக்ஸ் ஆபிஸில் தெரிக்க விட்டது குறிப்பிடத்தக்கது. படத்தின் விமர்சனம் ரசிகர்களிடையே கலவையானதாக இருந்தாலும் வசூலில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தனது 69-வது படத்திற்காக இயக்குநர் எச்.வினோத் உடன் கூட்டணி வைத்துள்ளார். நடிகர் விஜய் தீவிரமாக அரசியலில் ஈடுபடுவதாக கூறியதால் அவர் நடிக்கும் கடைசிப் படம் இதுதான் என்றும் விஜய் தெரிவித்தார். இது விஜய் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் தயாரித்து வருகின்றது. இந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் நடிகர் விஜய் உடன் இணைந்து நடிகர்கள் பூஜா ஹெக்டே மற்றும் பாபி தியோல் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
அவர்களுடன் இணைந்து நடிகர்கள் கௌதம் வாசுதேவ் மேனன் , பிரகாஷ் ராஜ் , நரேன் , பிரியாமணி , மமிதா பைஜு , மோனிஷா பிளெஸ்ஸி மற்றும் வரலட்சுமி சரத்குமார் ஆகியோரும் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகின்றார். இந்தப் படத்தின் படப்பிடிப்பிற்கு இடையே விஜய் அவ்வப்போது கட்சிப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றார்.
இந்த நிலையில் நடிகர் விஜயின் ஜன நாயகன் படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது கொடைக்கானலை சுற்றியுள்ள பகுதிகளில் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. அந்த படப்பிடிப்பு பணிகளை முடித்துவிட்டு தொடர்ந்து ரசிகர்களையும் பொது மக்களையும் சந்தித்து வருகிறார் விஜய்.
இணையத்தில் வைராலும் விஜயின் வீடியோ:
Day 3 , Thalaivar @TVKVijayHQ dharisanam after JanaNayagan Shoot 📸
பாச மழையில் தங்க தளபதி 🙏🔥 pic.twitter.com/k41nExmeME
— TVK Vijay Trends (@TVKVijayTrends) May 4, 2025
அந்த வகையில் இன்று கொடைக்கானலில் மூன்றாவது நாள் ஷூட்டிங்கை முடித்துவிட்டு விஜய் ஜீப்பில் வலம் வருகிறார். அப்போது ரசிகர்களையும் பொது மக்களையும் பார்த்து கைக்கூப்பி வணங்கி வருகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.