Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

R Madhavan : அதில் நடித்தது என் மனைவிக்குச் சுத்தமா பிடிக்கல.. ஆர். மாதவன்

R Madhavan About Inba character : தமிழ் சினிமாவில் 2000ம் ஆண்டு தொடக்கத்தில் முன்னணி கதாநாயகனாகக் கலக்கி வந்தவர் ஆர். மாதவன். இவர் தான் நடித்திருந்த முதல் படத்தின் மூலமாகவே மிகவும் பிரபலமானார். மேலும் தற்போது வரை படங்களில் முக்கிய தோற்றத்தில் நடித்து வருகிறார். இவர் முன்னதாக பேசிய வீடியோ ஒன்றில் ஆயுத எழுத்து படத்தில் நடித்தது, தனது மனைவிக்குப் பிடிக்கவில்லை என்று கூறியுள்ளார். அதைப் பற்றி முழுமையாகப் பார்க்கலாம்.

R Madhavan : அதில் நடித்தது என் மனைவிக்குச் சுத்தமா பிடிக்கல.. ஆர். மாதவன்
ஆர். மாதவன் Image Source: X
barath-murugan
Barath Murugan | Updated On: 23 Apr 2025 23:21 PM

தென்னிந்தியப் பிரபல கதாநாயகர்களில் ஒருவர்தான் ஆர். மாதவன் (R. Madhavan). இவர் கடந்த 1996ம் ஆண்டு இந்தியில் வெளியான, இஸ் ராட் கி சுபஹ் நஹின் (Is Raat Ki Subah Nahin)  என்ற படத்தில் சிறிய தோற்றத்தில் நடித்து சினிமாவில் நுழைந்தார். இதை தொடர்ந்து அடுத்தடுத்த இந்தி படங்களில் நடித்து வந்தார். இவரின் தமிழ் அறிமுக திரைப்படமாக அமைந்து அலை பாயுதே (Alai Payuthey) . கடந்த 2000ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் நடிகை ஷாலினியுடன் இணைந்து நடித்திருந்தார். முதல் படத்திலே தமிழில் ஹிட் இயக்குநரான மணிரத்னத்தின் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து , இவருக்குத் தமிழில் எக்கச்சக்க திரைப்படங்கள் குவிந்தது. என்னவளே, மின்னலே, டும் டும் டும் போன்ற பல படங்களில் நடித்திருந்தார். தொடர்ந்து இவர் தமிழ், இந்தி மற்றும் மலையாளம் போன்ற மொழி படங்களில் நடித்து வந்தார்.

சமீபத்தில் இவரின் நடிப்பில் தமிழில் டெஸ்ட் (Test) என்ற படமானது வெளியானது. இந்த திரைப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார். கிரிக்கெட் மற்றும் குடும்பங்கள் போன்ற கதைக்களத்துடன் இந்த படமானது அமைந்திருந்து.  இந்த திரைப்படமானது திரையரங்குகளில் வெளியாகாமல் நேரடியாக நெட்பிளிக்ஸில் வெளியிடப்பட்டது. இதுவும் ஓடிடியில் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இவர் மணிரத்னத்தின் ஆயுத எழுத்து படத்தில் நடித்து குறித்து, தனது மனைவி செய்த சம்பவம் குறித்துப் பேசியிருக்கிறார்.

ஆயுத எழுத்து படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகர் ஆர் மாதவன் :

நடிகர் ஆர் மாதவன், “நான் ஆயுத எழுத்து படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது, எனது மனைவி என்னிடம் ” உன்னை இப்படி மொட்டையாகப் பார்ப்பதற்கு எனக்குச் சுத்தமாகப் பிடிக்கவில்லை ” என்று கூறினார். என் மனைவி என்னிடம் “மாதவன் நீ வீட்டிற்குள் வரும்போது இன்பா என்ற கதாபாத்திரத்தை வெளியில் விட்டுவா” என்பார். ஏனென்றால் நான் அப்படியே ஆயுத எழுத்தில் நடித்த இன்பா என்ற கதாபாத்திரத்தில் கோபத்துடன் வீட்டில் நடந்துகொள்வேன் என்று எனது மனைவி கூறினார். நான் அந்த படத்தில் நடிக்கும்போது மொட்டைத் தலையுடன், வெயிலில் அலைந்து பார்ப்பதற்கே கருப்பாக இருப்பேன்.

அது எனது மனைவிக்குச் சுத்தமாகப் பிடிக்காது. நானும் ஆயுத எழுத்து படத்தைச் சீக்கிரம் முடிக்கவேண்டும் என்று நினைத்தேன், ஆனால் சூழ்நிலை அவ்வாறு அமையவில்லை. கிட்டத்தட்ட 2 வருடமாக மொட்டைத் தலையுடன்தான் மிருகம் போலத்தான் அலைந்தேன். மேலும் அந்த மொட்டைத் தலையுடன் எதிரி என்ற மற்றொரு படத்திலும் நடித்தேன். அதனால் இனி வாழ்கையிலே மொட்டைத் தலையுடன் படத்தில் நடிக்கவேண்டாம் என்று நினைத்தேன் என்று நடிகர் ஆர் மாதவன் ஓபனாக பேசியிருந்தார்.

விஜய் வருகை... மதுரை விமான நிலையத்தில் திரண்ட தவெக தொண்டர்கள்!
விஜய் வருகை... மதுரை விமான நிலையத்தில் திரண்ட தவெக தொண்டர்கள்!...
அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை - எவ்வளவு தெரியுமா?
அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை - எவ்வளவு தெரியுமா?...
அடுத்த போட்டியில் விளையாடுவேனா என்று தெரியாது - எம்எஸ் தோனி
அடுத்த போட்டியில் விளையாடுவேனா என்று தெரியாது - எம்எஸ் தோனி...
DMK-க்கு எதிராக அனைவரும் ஒன்றுசேர வேண்டும் - நயினார் நாகேந்திரன்
DMK-க்கு எதிராக அனைவரும் ஒன்றுசேர வேண்டும் - நயினார் நாகேந்திரன்...
சென்னை மக்களே அலர்ட்.. மாநகர பேருந்து வழித்தட எண்கள் மாற்றம்!
சென்னை மக்களே அலர்ட்.. மாநகர பேருந்து வழித்தட எண்கள் மாற்றம்!...
‘தன்னைத் தானே செதுக்கியவன்!’ - அஜித்குமார் பிறந்தநாள் ஸ்பெஷல்!
‘தன்னைத் தானே செதுக்கியவன்!’ - அஜித்குமார் பிறந்தநாள் ஸ்பெஷல்!...
பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சிக்கிய நாகை இளைஞர்
பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சிக்கிய நாகை இளைஞர்...
பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவில் பறக்க தடை.. மத்திய அரசு அதிரடி
பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவில் பறக்க தடை.. மத்திய அரசு அதிரடி...
ORS பவுடர் பயன்பாடு குறித்து பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு
ORS பவுடர் பயன்பாடு குறித்து பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு...
சுட்டெரிக்கும் வெயில்.. இன்னும் 3 டிகிரி வரை அதிகரிக்கும்!
சுட்டெரிக்கும் வெயில்.. இன்னும் 3 டிகிரி வரை அதிகரிக்கும்!...
தொடர் தோல்வி! ஐபிஎல் 2025 டாட்டா காட்டிய CSK.. கலக்கிய PBKS..!
தொடர் தோல்வி! ஐபிஎல் 2025 டாட்டா காட்டிய CSK.. கலக்கிய PBKS..!...