நடிகர் ஜெய்யின் அடுத்தப் படத்தின் டைட்டில் இதுதான் – வெளியானது அப்டேட்

Actor Jai New Movie Update: நடிகர் ஜெய்யின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் பேபி & பேபி. இந்தப் படத்தில் நடிகர் ஜெய் உடன் இணைந்து நடிகர்கள் சத்யராஜ், யோகி பாபு, பிரக்யா நாக்ரா மற்றும் சாய் தன்யா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது.

நடிகர் ஜெய்யின் அடுத்தப் படத்தின் டைட்டில் இதுதான் - வெளியானது அப்டேட்

நடிகர் ஜெய்

Updated On: 

02 May 2025 13:04 PM

நடிகர் ஜெய்யின் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படத்தின் தலைப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. கடந்த 2002-ம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான படம் பகவதி. இந்தப் படத்தில் நடிகர் ஜெய் விஜயின் தம்பியாக நடித்திருப்பார். இது இவர் அறிமுகம் ஆன முதல் படம் ஆகும். இந்தப் படத்தில் நடிகர் ஜெய்யை கொலை செய்துவிடுவார்கள். அதனைத் தொடர்ந்து விஜய் என்ன செய்கிறார் என்பது படத்தின் கதை. முதல் படத்திலேயே நடிகர் விஜயின் தம்பியாக நடித்து கவனம் பெற்ற ஜெய் அதனைத் தொடர்ந்து 2007-ம் ஆண்டு இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 28 படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். கிர்க்கெட்டை மையமாக வைத்து வெளியான இந்த காமெடி படத்தை ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்.

அதனைத் தொடர்ந்து 2008-ம் ஆண்டு இயக்குநர் சசிக்குமார் இயக்கத்தில் வெளியான சுப்ரமணியபுரம் படத்தின் நாயகனாக தோன்றினார். இந்தப் படத்தில் சசிக்குமார் ஜெய்யின் தோழனாகவே நடித்திருந்தார். காதல், நட்பு, துரோகம் என அனைத்தையும் ஒரே படத்தில் சிறப்பாக காட்டியிருப்பார் சசிக்குமார். இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

அதனைத் தொடர்ந்து நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான வாமனன், அதே நேரம் அதே இடம், கோவா, அவள் பெயர் தமிழரசி, கனிமொழி, கோ, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, நவீர சரஸ்வதி சபதம், வடகறி, திருமணம் எனும் நிக்கா, வலியவன், புகழ், தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும், சென்னை 28 பாகம் இரண்டு என அனைத்தும் படங்களும் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

2019-ம் ஆண்டு கேப்மாரி என்ற படத்தில் நடித்த ஜெய் அதனைத் தொடர்ந்து சுமார் 3 ஆண்டுகளுக்கு எந்தப் படங்களிலும் நடிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து கடந்த 2022-ம் ஆண்டு மட்டும் 5 படங்களில் நடித்தார். இதில் இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியான காஃபி வித் காதல் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

நடிகர் ஜெய் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

இந்த நிலையில் நடிகர் ஜெய் அடுத்ததாக நடிக்க உள்ள படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதில் படத்திற்கு ஒர்க்கர் என்று பெயர் வைத்துள்ளனர். இந்தப் படத்தை இயக்குநர் வினய் கிருஷ்ணா இயக்கியுள்ளார். ரொமான்டிக் ஆக்சன் திரில்லராக உருவாகும் இந்தப் படத்தில் நடிகர் ஜெய் உடன் இணைந்து நடிகர்கள் யோகி பாபு மற்றும் நாகிநீடு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளனர்.