Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Cinema Rewind : அந்நியன் படத்தில் நடித்தது எனக்குத் தொந்தரவாக இருந்தது – நடிகர் விக்ரம்!

Actor Vikram About The Film Anniyan : கோலிவுட் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம்வருபவர் சியான் விக்ரம். இவரின் நடிப்பில் கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகியுள்ளது. தற்போது வரையிலும் முன்னணி நாயகனாக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இவர் முன்னதாக ஒரு நேர்காணலில் அந்நியன் படத்தில் 3 கேரக்டரில் நடித்ததைக் குறித்தது ஓபனாக பேசியுள்ளார்.

Cinema Rewind : அந்நியன் படத்தில் நடித்தது எனக்குத் தொந்தரவாக இருந்தது – நடிகர் விக்ரம்!
நடிகர் விக்ரம்Image Source: IMDb
barath-murugan
Barath Murugan | Published: 27 Apr 2025 21:45 PM

நடிகர் சியான் விக்ரம்  (Chiyaan Vikram) என்றாலே அவரின் நடிப்பு மிகவும் அருமையாக இருக்கும் என்று அனைவருக்கும் தெரியும். இவர் தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் முன்னணி கதாநாயகனாக, பல வேடங்களில் நடித்திருக்கிறார். இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் வீர தீர சூரன் 2 (Veera Dheera Sooran 2). இந்த படத்தைப் பிரபல இயக்குநர் எஸ்.யு. அருண் குமார் (S.U. Arun kumar) இயக்கியிருந்தார். கிராமத்துக் கதைக்களத்துடன், ஆக்ஷ்ன் படமாக இந்த படம் இருந்தது. இதில் விக்ரமிற்கு ஜோடியாக நடிகை துஷாரா விஜயன் (Dushara Vijayan) நடித்திருந்தார். இவரின் நடிப்பில் வெளியான இந்த படமானது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து சியான் விக்ரம் மேலும் ஒரு புதிய படத்தில் கமிட்டாகியுள்ளார். நடிகர் விக்ரமின் 63வது படத்தை இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கவுள்ளார். இந்த படத்தின் அறிவிப்புக்களைக் கடந்த 2024ம் ஆண்டிலே வெளியாகியது.

இந்த படத்திற்கு “வீரமே ஜெயம்” என்ற டைட்டில் வைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையின் 2025 மே மாதத்தில் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முன்னதாக நடிகர் விக்ரம் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் நடிகர் விக்ரம் அந்நியன் (Anniyan) படத்தில் நடித்த அனுபவம் குறித்துப் பகிர்ந்துள்ளார். அதில் “அந்நியன் படத்தில் 3 வேடங்களில் மாற்றி மாற்றி நடிக்கும்போது ஏற்பட்ட கஷ்டம் குறித்துப் பேசியுள்ளார்.

அந்நியன் படத்தில் நடித்ததை குறித்து சியான் விக்ரம் சொன்னது :

நடிகர் விக்ரம் அதில் “அந்நியன் படத்தில் நடிக்கும்போது எனக்குக் கொஞ்சம் தொந்தரவாகத்தான் இருந்தது. ஏனென்றால் அந்த படத்தில் நான் மூன்று வேடங்களில் நடித்திருந்தேன். இப்போது அந்த மாதிரியான படத்தில் நடிக்கவேண்டும் என்றால் நான் மிகவும் சுலபமாக நடித்துவிடுவேன், ஒவ்வொரு கேரக்டராக மாறி நடித்துவிடுவேன். ஆனால் நான் அந்த படத்தில் நடிக்கும்போது அந்த அளவிற்கு என்னிடம் அனுபவம் இல்லை. ராமானுஜம் கதாபாத்திரம் முதலில், ரெமோ கதாபாத்திரம் அடுத்து, அடுத்ததாக அந்நியன் என மூன்று கதாபாத்திரத்துக்கும் தொடர்ந்து ஷூட்டிங் இருந்தது.

ஒரு கதாபாத்திரத்தில் நடித்து விட்டு அடுத்த கதாபாத்திரத்திற்கு என்னை மாற்றிக் கொள்ள 15 நாட்கள் ஆனது. அந்த 15 நாட்களில் வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து இருப்பேன், சுற்றி நடப்பதை உன்னிப்பாகக் கவனிப்பேன். என்னை மாற்றிக்கொள்ள அந்த 15 நாட்களும் காலை சாப்பாட்டைச் சாப்பிடுவேன் தனியாக இருப்பேன், மாலை  சாப்பிடுவேன் தனியாக எனது நேரத்தைச் செலவழித்தேன். அந்த 15 நாட்களின் என்னை மாற்றிக்கொள்வதற்கு நான் இந்த மாதிரிதான் செய்தேன்” என்று நடிகர் சியான் விக்ரம் கூறியுள்ளார்.

சென்னை மக்களே அலர்ட்.. மாநகர பேருந்து வழித்தட எண்கள் மாற்றம்!
சென்னை மக்களே அலர்ட்.. மாநகர பேருந்து வழித்தட எண்கள் மாற்றம்!...
‘தன்னைத் தானே செதுக்கியவன்!’ - அஜித்குமார் பிறந்தநாள் ஸ்பெஷல்!
‘தன்னைத் தானே செதுக்கியவன்!’ - அஜித்குமார் பிறந்தநாள் ஸ்பெஷல்!...
பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சிக்கிய நாகை இளைஞர்
பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சிக்கிய நாகை இளைஞர்...
பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவில் பறக்க தடை.. மத்திய அரசு அதிரடி
பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவில் பறக்க தடை.. மத்திய அரசு அதிரடி...
ORS பவுடர் பயன்பாடு குறித்து பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு
ORS பவுடர் பயன்பாடு குறித்து பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு...
சுட்டெரிக்கும் வெயில்.. இன்னும் 3 டிகிரி வரை அதிகரிக்கும்!
சுட்டெரிக்கும் வெயில்.. இன்னும் 3 டிகிரி வரை அதிகரிக்கும்!...
தொடர் தோல்வி! ஐபிஎல் 2025 டாட்டா காட்டிய CSK.. கலக்கிய PBKS..!
தொடர் தோல்வி! ஐபிஎல் 2025 டாட்டா காட்டிய CSK.. கலக்கிய PBKS..!...
உலகத்தில் உயர்ந்தது தாய்மை.. குரங்கின் தாகம் தீர்த்த பெண்!
உலகத்தில் உயர்ந்தது தாய்மை.. குரங்கின் தாகம் தீர்த்த பெண்!...
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!...
தந்தையின் கடையில் திருடி ஐபோன் வாங்கிய சிறுவன்: அதிர்ச்சி சம்பவம்
தந்தையின் கடையில் திருடி ஐபோன் வாங்கிய சிறுவன்: அதிர்ச்சி சம்பவம்...
2025ல் மாணவர்களுக்கான பெஸ்ட் லேப்டாப் - எப்படி தேர்ந்தெடுப்பது ?
2025ல் மாணவர்களுக்கான பெஸ்ட் லேப்டாப் - எப்படி தேர்ந்தெடுப்பது ?...