Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பயங்கர குண்டுவெடிப்பு.. 10 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு.. பாகிஸ்தானில் பரபரப்பு!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் 10 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு பலூச் விடுதலை ராணுவம் பொறுப்பேற்றது. ஏற்கனவே, பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே பதற்றம் நிலவி வரும் சூழலில், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் அந்நாட்டு ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பயங்கர குண்டுவெடிப்பு.. 10 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு.. பாகிஸ்தானில் பரபரப்பு!
பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்Image Source: X
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 26 Apr 2025 10:02 AM

பாகிஸ்தான், ஏப்ரல் 26: மேற்கு பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் குண்டு வெடிப்பு தாக்குதலில் 10 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு பலூச் விடுதலை இராணுவம் (BLA) பொறுப்பேற்றுள்ளது. மேலும், பாகிஸ்தான் ராணுவம் மீதான நடவடிக்கை தொடரும் எனவும் பலூச் விடுதலை அமைப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கு இந்தியாவுக்கும் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக அந்நாட்டுக்குள்ளே தீவிரவாத அமைப்புகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

10 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு

பாகிஸ்தான் ராணுவம் மீது அந்நாட்டில் உள்ள பயங்கரவாத அமைப்புகள் அவ்வப்போது தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், 2025 ஏப்ரல் 25ஆம் தேதி மோசமான சம்பவம் நடந்துள்ளது. அதாவது, மேற்கு பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் குண்டிவெடிப்பு தாக்குதலில் 10 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

குவெட்டாவிலிருந்து சுமார் 30 கிமீ தொலைவில் உள்ள மார்கட் சௌகியில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் தடுப்பில் மோதியதை அடுத்து, குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதலில் 10 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சுபேதார் ஷெஹ்சாத் அமீன், நைப் சுபேதார் அப்பாஸ், சிபாய் கலீல், சிபாய் ஜாஹித், சிபாய் குர்ராம் சலீம் உள்ளிட்டோர் உயிரிழந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு பலூச் விடுதலை அமைப்பு பொறுப்பேற்றது.

இதுகுறித்து பலூச் விடுதலை அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், குவெட்டாவின் புறநகர்ப் பகுதியான மார்கட்டில், பலூச் விடுதலை அமைப்பு இராணுவ வாகனம் மீது குண்டு வெடிப்பு தாக்குல் நடத்தியது. இந்த நடவடிக்கையில், ஒரு எதிரி வாகனம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது.

பாகிஸ்தானில் பரபரப்பு


அதில் இருந்த 10 ராணுவ வீரர்கள் கொல்லப்ப்ட்டனர். இந்தத் தாக்குதலுக்கான பொறுப்பை பலூச் விடுதலை இராணுவம் ஏற்றுக்கொள்கிறது. பாகிஸ்தான் ராணுவம் மீதான நடவடிக்கை தொடரும்” என்று கூறியுள்ளது. ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானின் எல்லையை ஒட்டியுள்ள பலுசிஸ்தானில் அண்மை காலமாக வன்முறை அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானில் உள்ள பலூச் விடுதலை ராணுவம் பல ஆண்டுகளுக்கு தங்களை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என போராடி வருகிறது.  இதற்கு பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் ராணுவத்தின் எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது. அண்மையில் கூட, 400 பயணிகளுடன் சென்ற ரயிலை பலூச் விடுதலை ராணுவம் வெடி பொருட்களை வைத்ததால், ரயில் தடம் புரண்டது.

மேலும், அந்த ரயிலையே பலூச் விடுதலை ராணுவம் கடத்தியது. குவெட்டாவிலிருந்து 160 கி.மீ தொலைவில் உள்ள குடாலர் மற்றும் பிரு குன்ரி மலைப்பகுதிக்கு அருகே ரயிலை கடத்தினர். அதன்பிறகு, பயணிகளை விடுவித்தனர்.

உலகத்தில் உயர்ந்தது தாய்மை.. குரங்கின் தாகம் தீர்த்த பெண்!
உலகத்தில் உயர்ந்தது தாய்மை.. குரங்கின் தாகம் தீர்த்த பெண்!...
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!...
தந்தையின் கடையில் திருடி ஐபோன் வாங்கிய சிறுவன்: அதிர்ச்சி சம்பவம்
தந்தையின் கடையில் திருடி ஐபோன் வாங்கிய சிறுவன்: அதிர்ச்சி சம்பவம்...
2025ல் மாணவர்களுக்கான பெஸ்ட் லேப்டாப் - எப்படி தேர்ந்தெடுப்பது ?
2025ல் மாணவர்களுக்கான பெஸ்ட் லேப்டாப் - எப்படி தேர்ந்தெடுப்பது ?...
டூரிஸ்ட் ஃபேமிலி, ஹிட் 3 படங்களுக்கு வாழ்த்து சொன்ன நடிகர் சூர்யா
டூரிஸ்ட் ஃபேமிலி, ஹிட் 3 படங்களுக்கு வாழ்த்து சொன்ன நடிகர் சூர்யா...
ஜப்பானில் தென்பட்ட அரியவகை வெள்ளைநிற திமிங்கலம்!
ஜப்பானில் தென்பட்ட அரியவகை வெள்ளைநிற திமிங்கலம்!...
ஏசி குளிரும் வெயிலும்: ஆரோக்கியமாக இருக்க 8 அறிவுரைகள்!
ஏசி குளிரும் வெயிலும்: ஆரோக்கியமாக இருக்க 8 அறிவுரைகள்!...
குடும்பத்தினருடன் கீழடி சென்ற நடிகர் சிவகார்த்திகேயன்...
குடும்பத்தினருடன் கீழடி சென்ற நடிகர் சிவகார்த்திகேயன்......
சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியா கூட்டணியின் வெற்றி - CM ஸ்டாலின்
சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியா கூட்டணியின் வெற்றி - CM ஸ்டாலின்...
கோடைகாலத்தில் மூட்டு வலி பிரச்னை.. டாக்டர் சொல்லும் அட்வைஸ்!
கோடைகாலத்தில் மூட்டு வலி பிரச்னை.. டாக்டர் சொல்லும் அட்வைஸ்!...
பொக்கிஷமான தருணம்... வைரலாகும் ஷாலினி அஜித்தின் இன்ஸ்டா போஸ்ட்
பொக்கிஷமான தருணம்... வைரலாகும் ஷாலினி அஜித்தின் இன்ஸ்டா போஸ்ட்...