Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

இந்தியா எடுத்த ஆக்ஷன்… சிக்கலில் பாகிஸ்தான்.. மருந்து தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

Pahalgam Terror Attack : பாகிஸ்தான் உடனான வர்த்தகத்தை இந்தியா நிறுத்தியதை அடுத்து, பாகிஸ்தானில் மருந்துகள் தட்டுப்பாடுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. பாகிஸ்தான் மருந்து பொருட்களில் 40 சதவீதம் வரை இந்தியாவை நம்பி இருக்கும் நிலையில், அதற்காக அவசர நிலையை அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ளது.

இந்தியா எடுத்த ஆக்ஷன்… சிக்கலில் பாகிஸ்தான்.. மருந்து தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!
பாகிஸ்தான்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 27 Apr 2025 09:21 AM

பாகிஸ்தான், ஏப்ரல் 27: ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு, இந்திய எடுத்த நடவடிக்கையால் பாகிஸ்தான் கடும் பிரச்சைகளை சந்தித்து வருகிறது. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானுடனான வர்த்தக உறவுகளை இந்திய அரசு நிறுத்தி உள்ளது. இதனால், பாகிஸ்தானில் பல்வேறு பிரச்னைகள் அதிகரித்து வருகிறது. சிந்து நதி ஒப்புதந்தை ரத்து செய்யததால், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து, தற்போது மருத்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சிக்கலில் பாகிஸ்தான்

2025 ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் சுற்றுலா பயணிகள். இவர்கள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் உலக நாடுகளை பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இந்த தாக்குதலில் பாகிஸ்தானின் லஷ்கர் இ தொய்பாவின் நிழல் அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பொறுப்பேற்றுள்ளது. இருப்பினும், இந்த தாக்குதலுக்கு பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாக இந்தியா குற்றச்சாட்டி வருகிறது. ஆனால், இதற்கு பாகிஸ்தான் மறுத்து வருகிறது.

இருப்பினும்,பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அதிரடி நடவடிக்கைளை மேற்கொண்டது. சிந்து நதி நீர் ஒப்பந்தம், பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம், பாகிஸ்தான் விசா ரத்து, வாகா எல்லை மூடல், தூதரக பாதுகாப்பு வாபஸ் போன்ற அதிரடி நடவடிக்கையை எடுத்தது.

மருந்து தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

இது பாகிஸ்தானில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக பாகிஸ்தான் உடனான வர்த்தகத்தை இந்தியா நிறுத்தியுள்ளது. இதனால், பாகிஸ்தான் பில்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறது. அதில் குறிப்பாக மருந்துகளில் தட்டுப்பாடு.

இதனால், மருந்துப் பொருட்களைப் பெறுவதற்கு பாகிஸ்தான் அவசர நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.மருந்து பற்றாக்குறை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகளைக் கருத்தில் கொண்டு, மருந்துகளின் விநியோகத்தை உறுதி செய்வதற்கான அவசர நடவடிக்கைகளை பாகிஸ்தான் தொடங்கியுள்ளது.

பாகிஸ்தான் மருந்து பொருட்களில் 40 சதவீதம் வரை இந்தியாவை நம்பி இருக்கிறது. மருந்து தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, பாகிஸ்தானின் மருந்து ஒழுங்குமுறை ஆணையம் சீனா, ரஷ்யா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளிலிருந்து மருந்துகளை அதிகளவில் வாங்க முடிவு செய்திருக்கிறது.

ரேபிஸ் எதிர்ப்பு தடுப்பூசிகள், பாம்பு விஷ எதிர்ப்பு, புற்றுநோய் சிகிச்சைகள் மற்றும் மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள் போன்ற மருந்துகளின் கிடைக்கும் தன்மையை உறுதி செய்வதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து பாகிஸ்தானின் மருந்து ஒழுங்குமுறை ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், “2019 நெருக்கடியைத் தொடர்ந்து, இதுபோன்ற செயலுக்கு நாங்கள் தயாராகத் இருக்கிறோம். எங்கள் மருந்துத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான மாற்று வழிகளை நாங்கள் இப்போது தீவிரமாகப் பார்த்து வருகிறோம்” என்றார்.

உலகத்தில் உயர்ந்தது தாய்மை.. குரங்கின் தாகம் தீர்த்த பெண்!
உலகத்தில் உயர்ந்தது தாய்மை.. குரங்கின் தாகம் தீர்த்த பெண்!...
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!...
தந்தையின் கடையில் திருடி ஐபோன் வாங்கிய சிறுவன்: அதிர்ச்சி சம்பவம்
தந்தையின் கடையில் திருடி ஐபோன் வாங்கிய சிறுவன்: அதிர்ச்சி சம்பவம்...
2025ல் மாணவர்களுக்கான பெஸ்ட் லேப்டாப் - எப்படி தேர்ந்தெடுப்பது ?
2025ல் மாணவர்களுக்கான பெஸ்ட் லேப்டாப் - எப்படி தேர்ந்தெடுப்பது ?...
டூரிஸ்ட் ஃபேமிலி, ஹிட் 3 படங்களுக்கு வாழ்த்து சொன்ன நடிகர் சூர்யா
டூரிஸ்ட் ஃபேமிலி, ஹிட் 3 படங்களுக்கு வாழ்த்து சொன்ன நடிகர் சூர்யா...
ஜப்பானில் தென்பட்ட அரியவகை வெள்ளைநிற திமிங்கலம்!
ஜப்பானில் தென்பட்ட அரியவகை வெள்ளைநிற திமிங்கலம்!...
ஏசி குளிரும் வெயிலும்: ஆரோக்கியமாக இருக்க 8 அறிவுரைகள்!
ஏசி குளிரும் வெயிலும்: ஆரோக்கியமாக இருக்க 8 அறிவுரைகள்!...
குடும்பத்தினருடன் கீழடி சென்ற நடிகர் சிவகார்த்திகேயன்...
குடும்பத்தினருடன் கீழடி சென்ற நடிகர் சிவகார்த்திகேயன்......
சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியா கூட்டணியின் வெற்றி - CM ஸ்டாலின்
சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியா கூட்டணியின் வெற்றி - CM ஸ்டாலின்...
கோடைகாலத்தில் மூட்டு வலி பிரச்னை.. டாக்டர் சொல்லும் அட்வைஸ்!
கோடைகாலத்தில் மூட்டு வலி பிரச்னை.. டாக்டர் சொல்லும் அட்வைஸ்!...
பொக்கிஷமான தருணம்... வைரலாகும் ஷாலினி அஜித்தின் இன்ஸ்டா போஸ்ட்
பொக்கிஷமான தருணம்... வைரலாகும் ஷாலினி அஜித்தின் இன்ஸ்டா போஸ்ட்...