Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பத்து வருடக் கனவு கார்… ஒரு மணி நேரத்தில் சாம்பல் – ஜப்பானியருக்கு நேர்ந்த சோகம்

Japanese Man's Ferrari Dream: விலையுயர்ந்த கார் வாங்குவது அனைவரின் கனவு. இதற்காக, வசதி படைத்தவர்கள் எந்தத் தொகையையும் செலவிடத் தயங்க மாட்டார்கள். ஆனால், ஒரு எளிமையான மனிதர் பத்து வருட காத்திருப்புக்கு பிறகு தனது கடின உழைப்பால் சம்பாதித்த பணத்தில் தனது கனவு காரை வாங்கிய அடுத்த ஒரு மணி நேரத்தில் சாம்பலாக மாறினால் என்ன செய்வது? இந்த சம்பவம் ஜப்பானில் ஒருவருக்கு நடந்திருக்கிறது.

பத்து வருடக் கனவு கார்… ஒரு மணி நேரத்தில் சாம்பல் – ஜப்பானியருக்கு நேர்ந்த சோகம்
எரிந்து சாம்பலான ஃபெராரி கார்
karthikeyan-s
Karthikeyan S | Published: 28 Apr 2025 23:53 PM

ஜப்பானை (Japan) சேர்ந்த இசைக் கலைஞர் என்ற ஹொங்கான் என்பவர், தன்னுடைய கனவு காரான ஃபெராரி 458 ஸ்பைடர் காரை (Ferrari) வாங்க பத்து ஆண்டுகளாக சேமித்து வந்தார். இந்திய மதிப்பில் சுமார் இரண்டரை கோடி மதிப்புள்ள இந்த ஃபெராரி காரை அவர் கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி வாங்கினார். ஆனால், கார் வாங்கிய வெறும் ஒரு மணி நேரத்துக்குள் கார் தீப்பற்றி எரிந்தது. ஜப்பானின் ஷுடோ எக்ஸ்பிரஸ்வேயில் ஓட்டிக்கொண்டிருந்தபோது, காரில் நெருப்பு ஏற்பட்டதை அவர் கவனித்திருக்கிறார். உடனே காரை நிறுத்தி அதில் இறுந்து இறங்கினார். நல்ல வேலையாக ஹொங்கானுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தீயணைப்பு வீரர்கள் தீயை 20 நிமிடங்களில் அணைத்தனர். ஆனாலும் கார் முழுவதும் எரிந்து விட்டது. காரின் பம்பர் மட்டும் தான் அவருக்கு எஞ்சியது. தீப்பற்றியதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நான் பெராரி வாங்கும் கனவு கண்டேன். ஆனால் அந்த கனவு சில நிமிடங்களில் எரிந்து சாம்பலாகிவிட்டது என்று அவர் தனது சமூக வலைதளங்களில் குறிப்பிட்டிருக்கிறார். விலை உயர்ந்த கார் வாங்க வேண்டும் என்பது அனைவரது கனவு. அதற்காக பெஹாங்கான் 10 ஆண்டு காலமாக கடுமையாக உழைத்திருக்கிறார். இந்த 10 ஆண்டுகளும் தனது தேவையில்லாத செலவுகளை தவிர்த்து அதன் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சியை புறக்கணித்து ஒரு ஜென் மன நிலையில் இருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி வாங்கிய கார் ஒரு மணி நேரத்திற்குள் இப்படி ஒன்றுமில்லாமல் ஆவது என்பது எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

எரிந்து சாம்பலான ஃபெராரி கார்

 

ஹொங்ன்கான் தனது மனவேதனையை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டுள்ளார்.  இது தொடர்பாக ஃபெராரியை சொந்தமாக்க வேண்டும் என்று எப்போதும் கனவு கண்டதாக அவர் எழுதினார். அது நனவான சில நிமிடங்களில் அந்தக் கனவு ஒரு கனவாக மாறியதாக வேதனையுடன் பதிவிட்டுள்ளார். “டெலிவரி செய்யப்பட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு எனது ஃபெராரி எரிந்து சாம்பலானது. ஜப்பான் முழுவதிலும் இதுபோன்ற பிரச்சனையை அனுபவித்த ஒரே நபர் நான்தான்” என்று தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

இதே போல கடந்த 2019 ஆம் ஆண்டு, அமெரிக்காவில் ஒரு மனிதர் தனது கனவான சிறிய படகை வாங்கி, கடலில் பயணித்திருக்கிறார். ஆனால் சில மணி நேரங்களில் அது மூழ்கியது. நல் வாய்ப்பாக அவர் உயிர் தப்பினார். இந்த சம்பவம், புதிய யாட் வாங்கியவர்களின் மனதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேட்பதற்கு சாதாரணமாக இருக்கும் சம்பவங்களும் அவர்களுக்கு தான் அதன் வலி தெரியும்.

உலகத்தில் உயர்ந்தது தாய்மை.. குரங்கின் தாகம் தீர்த்த பெண்!
உலகத்தில் உயர்ந்தது தாய்மை.. குரங்கின் தாகம் தீர்த்த பெண்!...
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!...
தந்தையின் கடையில் திருடி ஐபோன் வாங்கிய சிறுவன்: அதிர்ச்சி சம்பவம்
தந்தையின் கடையில் திருடி ஐபோன் வாங்கிய சிறுவன்: அதிர்ச்சி சம்பவம்...
2025ல் மாணவர்களுக்கான பெஸ்ட் லேப்டாப் - எப்படி தேர்ந்தெடுப்பது ?
2025ல் மாணவர்களுக்கான பெஸ்ட் லேப்டாப் - எப்படி தேர்ந்தெடுப்பது ?...
டூரிஸ்ட் ஃபேமிலி, ஹிட் 3 படங்களுக்கு வாழ்த்து சொன்ன நடிகர் சூர்யா
டூரிஸ்ட் ஃபேமிலி, ஹிட் 3 படங்களுக்கு வாழ்த்து சொன்ன நடிகர் சூர்யா...
ஜப்பானில் தென்பட்ட அரியவகை வெள்ளைநிற திமிங்கலம்!
ஜப்பானில் தென்பட்ட அரியவகை வெள்ளைநிற திமிங்கலம்!...
ஏசி குளிரும் வெயிலும்: ஆரோக்கியமாக இருக்க 8 அறிவுரைகள்!
ஏசி குளிரும் வெயிலும்: ஆரோக்கியமாக இருக்க 8 அறிவுரைகள்!...
குடும்பத்தினருடன் கீழடி சென்ற நடிகர் சிவகார்த்திகேயன்...
குடும்பத்தினருடன் கீழடி சென்ற நடிகர் சிவகார்த்திகேயன்......
சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியா கூட்டணியின் வெற்றி - CM ஸ்டாலின்
சாதிவாரி கணக்கெடுப்பு இந்தியா கூட்டணியின் வெற்றி - CM ஸ்டாலின்...
கோடைகாலத்தில் மூட்டு வலி பிரச்னை.. டாக்டர் சொல்லும் அட்வைஸ்!
கோடைகாலத்தில் மூட்டு வலி பிரச்னை.. டாக்டர் சொல்லும் அட்வைஸ்!...
பொக்கிஷமான தருணம்... வைரலாகும் ஷாலினி அஜித்தின் இன்ஸ்டா போஸ்ட்
பொக்கிஷமான தருணம்... வைரலாகும் ஷாலினி அஜித்தின் இன்ஸ்டா போஸ்ட்...