சிலி மற்றும் அர்ஜென்டினாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 7.4 ரிக்டர் ஆக பதிவு!

7.4 Magnitude Earthquake Hits Argentina and Chile | சிலி மற்றும் அர்ஜென்டினாவில் இன்று (மே 2, 2025) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது அங்கு 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்ட நிலையில், சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

சிலி மற்றும் அர்ஜென்டினாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 7.4 ரிக்டர் ஆக பதிவு!

மாதிரி புகைப்படம்

Updated On: 

02 May 2025 20:40 PM

அர்ஜென்டினா, மே 2 : சிலி (Chile) மற்றும் அர்ஜென்டினாவில் (Argentina) இன்று (மே 2, 2025) சக்திவாய்ந்த நிலநடுக்கம் (Strongest Earthquake) ஏற்பட்டுள்ளது. அங்கு 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சில பகுதிகளில் நில அதிர்வுகள் உணரப்பட்டதாகவு  கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கையும் (Tsunami Warning) விடுக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் மிக கடுமையான நிலநடுக்கம் அங்கு ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என்பது குறித்து தகவல்கள் வெளியாகாமல் உள்ளது.

சிலி மற்றும் அர்ஜென்டினாவை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்

தெற்கு அமெரிக்க நாடுகளான சிலி மற்றும் அர்ஜென்டினாவில் 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சிலி மற்றும் அர்ஜென்டினாவுக்கு தெற்கே சுமார் 258 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கடலுக்கு அடியில் சுமார் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த கடலை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

7.4 ரிக்டர் அளவில் பதிவு செய்யப்பட்ட நிலநடுக்கம்

இந்த பயங்கர நிலநடுக்கம் காரணமாக வீடுகள் மற்றும் கட்டங்கள் குலுங்கியதால் அச்சமடைந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சமடைந்தனர். இதன் காரணமாக பொதுமக்கள் சாலைகளில் பதற்றத்துடன் அங்கும் இங்கும் சுற்றித் திரியும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

சாலைகளில் அலறி அடித்துக்கொண்டு ஓடிய பொதுமக்கள்

சிலி மற்றும் அர்ஜென்டினாவை சக்திவாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ள நிலையில், அங்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து எந்த வித தகவலும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.