Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கும்பகோணத்தில் விரைவில் கலைஞர் பல்கலைக்கழகம்.. சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு!

kalaignar karunanidhi university: கலைஞர் பிறந்த ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் கலைஞர் கருணாநிதி பெயரில் விரைவில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பாமகவின் ஜி.கே.மணி எழுப்பிய கேள்விக்கு, முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டார்

கும்பகோணத்தில் விரைவில் கலைஞர் பல்கலைக்கழகம்.. சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு!
முதல்வர் ஸ்டாலின் - கருணாநிதி
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 24 Apr 2025 13:08 PM

சென்னை, ஏப்ரல் 24: கலைஞர் பிறந்த ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் விரைவில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் (kalaignar karunanidhi university) என சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின்  (MK Stalin) அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் இல்லையே என பாமகவின் ஜி.கே.மணி பேசிய நிலையில், அதற்கு முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்ததற்கு, பாடல் பாடி கும்பகோணம் எம்.எல்.ஏ. சாக்கோட்டை அன்பழகன் வரவேற்றார்.

கும்பகோணத்தில் விரைவில் கலைஞர் பல்கலைக்கழகம்

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வருகிறது. அதன்படி, 2025 ஏப்ரல் 24ஆம் தேதி காலை 9 மணிக்கு சட்டப்பேரவை கூடியது. அப்போது, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி தொடர்பாக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இந்த தீர்மானத்தின்போது கலைஞர் பெயரில் பல்கலைக்கழகம் இல்லையே என பாமகவின் ஜி.கே.மணி  பேசியனார். இதற்கு பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின்,  தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் கலைஞர் பெயரில் விரைவில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு

மேலும் பேசிய அவர்,  “தமிழகத்தில் இருக்கக் கூடிய பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் அனைத்தும் வளர்ந்து மேலோங்கி, மற்ற மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக உருவாகுவதற்கு காரணம் பல்வேறு தலைவர்கள் இருந்தாலும், அதற்கு முக்கியம் காரணம் கலைஞர் கருணாநிதி.

இப்படி கல்வியின் வளர்ச்சிக்கு பாடுபட்டு இருக்கக் கூடிய கலைஞர் கருணாநிதியின் பெயரில் பல்கலைக்கழக விரைவில் அமைக்கப்படும். அவர் பிறந்த ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திலேயே கருணாநிதியின் பெயரில் பல்கலைக்கழகம் விரைவில் அமைக்கப்படும்.

எந்த வித தயக்கமும் இல்லாமல் இதனை அறிவிக்கிறேன்” என்று கூறினார். இந்த அறிவிப்பை தொடர்ந்து, கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் நுற்றாண்டு காலம் வாழ்க என பாட்டி பாடி வரவேற்றார். இதனை தொடர்ந்ரு,  நான் முதல்வன் திட்டத்தில் பயின்று குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

மேலும், ரூ.40 கோடி மதிப்பில் மாணவர்களுக்கு பயிற்சி மையம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். முன்னதாக, 2025 ஏப்ரல் 23ஆம் தேதியான நேற்று துணை முதல்வர் ஸ்டாலின் நான் முதல்வன் திட்டத்தில் பயின்று குடிமைப் பணி தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ரூ.50,000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தார் குறிப்பிடத்தக்கது.

 

அடுத்த போட்டியில் விளையாடுவேனா என்று தெரியாது - எம்எஸ் தோனி
அடுத்த போட்டியில் விளையாடுவேனா என்று தெரியாது - எம்எஸ் தோனி...
DMK-க்கு எதிராக அனைவரும் ஒன்றுசேர வேண்டும் - நயினார் நாகேந்திரன்
DMK-க்கு எதிராக அனைவரும் ஒன்றுசேர வேண்டும் - நயினார் நாகேந்திரன்...
சென்னை மக்களே அலர்ட்.. மாநகர பேருந்து வழித்தட எண்கள் மாற்றம்!
சென்னை மக்களே அலர்ட்.. மாநகர பேருந்து வழித்தட எண்கள் மாற்றம்!...
‘தன்னைத் தானே செதுக்கியவன்!’ - அஜித்குமார் பிறந்தநாள் ஸ்பெஷல்!
‘தன்னைத் தானே செதுக்கியவன்!’ - அஜித்குமார் பிறந்தநாள் ஸ்பெஷல்!...
பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சிக்கிய நாகை இளைஞர்
பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சிக்கிய நாகை இளைஞர்...
பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவில் பறக்க தடை.. மத்திய அரசு அதிரடி
பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவில் பறக்க தடை.. மத்திய அரசு அதிரடி...
ORS பவுடர் பயன்பாடு குறித்து பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு
ORS பவுடர் பயன்பாடு குறித்து பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு...
சுட்டெரிக்கும் வெயில்.. இன்னும் 3 டிகிரி வரை அதிகரிக்கும்!
சுட்டெரிக்கும் வெயில்.. இன்னும் 3 டிகிரி வரை அதிகரிக்கும்!...
தொடர் தோல்வி! ஐபிஎல் 2025 டாட்டா காட்டிய CSK.. கலக்கிய PBKS..!
தொடர் தோல்வி! ஐபிஎல் 2025 டாட்டா காட்டிய CSK.. கலக்கிய PBKS..!...
உலகத்தில் உயர்ந்தது தாய்மை.. குரங்கின் தாகம் தீர்த்த பெண்!
உலகத்தில் உயர்ந்தது தாய்மை.. குரங்கின் தாகம் தீர்த்த பெண்!...
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!...