Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தமிழகத்தில் கத்திரி வெயில் எப்போது முதல் தொடக்கம்..? வெப்பநிலை 4 டிகிரி வரை அதிகரிக்க வாய்ப்பு

Heatwave in Tamil Nadu: தமிழகத்தில் கடும் வெயிலை ஏற்படுத்தும் அக்னி நட்சத்திரம் (கத்திரி வெயில்) இந்த ஆண்டு 2025 மே 4 முதல் மே 28 வரை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த காலத்தில் வெப்பநிலை வழக்கத்தை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கத்திரி வெயில் எப்போது முதல் தொடக்கம்..? வெப்பநிலை 4 டிகிரி வரை அதிகரிக்க வாய்ப்பு
அக்னி நட்சத்திரம் மே 4 முதல் தொடக்கம்Image Source: pinrest
sivasankari-bose
Sivasankari Bose | Published: 28 Apr 2025 12:10 PM

தமிழ்நாடு ஏப்ரல் 28: தமிழகத்தில் (Tamilnadu) கோடை வெயிலின் (Heatwave in Tamil Nadu) உச்சமாகக் கருதப்படும் அக்னி நட்சத்திரம் (Agni Nakshatram) இவ்வாண்டு 2025 மே 4ஆம் தேதி தொடங்கி 2025 மே 28ஆம் தேதி வரை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் வெப்பநிலை வழக்கத்தை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மார்ச் முதல் ஜூன் மாதம் வரை தமிழகத்தில் கடும் வெயில் தாக்கம் காணப்படுகிறது. அதிலே அக்னி நட்சத்திர காலமான 24 நாட்கள் சிறப்பு கவனத்துக்கு உரியது. இந்த காலத்தில் வெப்பத்தின் தாக்கம் மற்ற காலங்களை விட அதிகமாக இருக்கும்.

அக்னி நட்சத்திரம் 2025 மே 4 முதல் தொடக்கம்

கத்திரி வெயில் இவ்வாண்டு 2025 மே 4ஆம் தேதி தொடங்கி 2025 மே 28ஆம் தேதி வரை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. கடந்த 2024 ஆம் வருடம் கரூரில் 111 டிகிரி வரை வெப்பம் பதிவானது. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். இந்த வருடம் வெப்பம் அதிகமாக இருந்தாலும், கடந்த வருடத்தைப் போல் இருக்காது என்று தனியார் வானிலை நிபுணர்கள் கூறுகின்றனர்.

இருப்பினும், வறண்ட காற்று மற்றும் அதிக ஈரப்பதம் சேர்ந்து அசௌகரியத்தை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்படுகிறார்கள். குறிப்பாக, பகல் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வெப்பநிலை முன்னறிவிப்பு

வானிலை அறிக்கையின்படி, 2025 மே 1-ம் தேதி முதல் வெப்பம் படிப்படியாக அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. எனவே, மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியம். குறிப்பாக முதியவர்கள் மற்றும் குழந்தைகள் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

மழைக்கான சாத்தியம்

கடந்த ஆண்டுகளில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய உடனே சில பகுதிகளில் மழை பெய்து வெப்பத்தை தணித்தது. இந்த ஆண்டு அந்த அனுபவம் மீண்டும் கிடைக்குமா என்பதைக் காலமே நிரூபிக்க வேண்டும். மழை ஏற்படுவதற்கான சூழ்நிலைகள் – வெப்பசலனம், மேலடுக்கு, கீழடுக்கு சுழற்சி போன்றவை – சாதகமாக அமைய வேண்டியுள்ளது.

பாதுகாப்பு நடவடிக்கைகள்

  • அக்னி நட்சத்திரம் காலத்தில் வெப்பத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ள சில எளிய வழிகள்:
  • வெளியில் செல்வதைத் தவிர்க்கவும்: முடிந்தவரை பகல் நேரங்களில் வெளியில் செல்வதைத் தவிர்க்கவும்.
    நீர்சத்து: உடல் வறட்சி அடையாமல் இருக்க நிறைய தண்ணீர் குடிக்கவும்.
  • தளர்வான ஆடைகள்: மெல்லிய மற்றும் தளர்வான ஆடைகளை அணியவும்.
  • குளிர்ச்சியான உணவு: குளிர்ச்சியான பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ளவும்.
  • குளிர்ச்சி: அவ்வப்போது குளிர்ந்த நீரில் குளிக்கவும்.
  • அக்னி நட்சத்திரம் காலத்தில் வெப்பத்தின் தாக்கத்தை குறைக்க மேற்கூறிய பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது நல்லது.

அடுத்த போட்டியில் விளையாடுவேனா என்று தெரியாது - எம்எஸ் தோனி
அடுத்த போட்டியில் விளையாடுவேனா என்று தெரியாது - எம்எஸ் தோனி...
DMK-க்கு எதிராக அனைவரும் ஒன்றுசேர வேண்டும் - நயினார் நாகேந்திரன்
DMK-க்கு எதிராக அனைவரும் ஒன்றுசேர வேண்டும் - நயினார் நாகேந்திரன்...
சென்னை மக்களே அலர்ட்.. மாநகர பேருந்து வழித்தட எண்கள் மாற்றம்!
சென்னை மக்களே அலர்ட்.. மாநகர பேருந்து வழித்தட எண்கள் மாற்றம்!...
‘தன்னைத் தானே செதுக்கியவன்!’ - அஜித்குமார் பிறந்தநாள் ஸ்பெஷல்!
‘தன்னைத் தானே செதுக்கியவன்!’ - அஜித்குமார் பிறந்தநாள் ஸ்பெஷல்!...
பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சிக்கிய நாகை இளைஞர்
பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சிக்கிய நாகை இளைஞர்...
பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவில் பறக்க தடை.. மத்திய அரசு அதிரடி
பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவில் பறக்க தடை.. மத்திய அரசு அதிரடி...
ORS பவுடர் பயன்பாடு குறித்து பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு
ORS பவுடர் பயன்பாடு குறித்து பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு...
சுட்டெரிக்கும் வெயில்.. இன்னும் 3 டிகிரி வரை அதிகரிக்கும்!
சுட்டெரிக்கும் வெயில்.. இன்னும் 3 டிகிரி வரை அதிகரிக்கும்!...
தொடர் தோல்வி! ஐபிஎல் 2025 டாட்டா காட்டிய CSK.. கலக்கிய PBKS..!
தொடர் தோல்வி! ஐபிஎல் 2025 டாட்டா காட்டிய CSK.. கலக்கிய PBKS..!...
உலகத்தில் உயர்ந்தது தாய்மை.. குரங்கின் தாகம் தீர்த்த பெண்!
உலகத்தில் உயர்ந்தது தாய்மை.. குரங்கின் தாகம் தீர்த்த பெண்!...
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!...