Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பரபரப்புக்கு மத்தியில் இன்று நடக்கும் துணைவேந்தர்கள் மாநாடு: ஊட்டியில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு

Ooty Vice Chancellors Conference: ஊட்டியில் நடைபெறும் துணைவேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையிலே நடத்தி வருகிறார். இதற்கெதிராக காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பல அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. பாதுகாப்புக்காக 500-க்கும் மேற்பட்ட போலீசார் ஊட்டி நகரம் முழுவதும் குவிக்கப்பட்டுள்ளனர்.

பரபரப்புக்கு மத்தியில் இன்று நடக்கும் துணைவேந்தர்கள் மாநாடு: ஊட்டியில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு
ஊட்டியில் இன்று நடக்கும் துணைவேந்தர்கள் மாநாடுImage Source: x
sivasankari-bose
Sivasankari Bose | Published: 25 Apr 2025 08:53 AM

நீலகிரி ஏப்ரல் 25: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் (Ooty VC Conference Amid Tight Security) நடைபெறும் துணைவேந்தர்கள் (Vice Chancellors’ Conference) மாநாட்டில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் (Vice President Jagdeep Dhankar) சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். மாநாட்டை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகிக்க, இதில் கலந்து கொள்ள பல்வேறு துணைவேந்தர்கள் வருகை தருகின்றனர். துணை ஜனாதிபதி, தோடர் இன மக்களை 2025 ஏப்ரல் 25 இன்று மாலை சந்திக்க உள்ளார். ஆளுநருக்கு எதிராக பல அரசியல், சமூக அமைப்புகள் போராட்டம் அறிவித்துள்ளன. மாநாட்டை ஒட்டி ஊட்டி முழுவதும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஊட்டியில் துணைவேந்தர்கள் மாநாடு இன்று தொடக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் 2025 ஏப்ரல் 25 இன்று மற்றும் 2025 ஏப்ரல் 26 நாளை (வெள்ளி, சனி) பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையிலாக செயல்பட்டு வருகின்றார். மாநாட்டின் சிறப்பு விருந்தினராக குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பங்கேற்கின்றார்.

துணை ஜனாதிபதி வருகை – தோடர் இனத்தவருடன் சந்திப்பு

துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். அங்கிருந்து விமானப்படை ஹெலிகாப்டரில் ஊட்டியின் தீட்டுக்கல் ஹெலிபாட் வரை பயணித்து ஏப்ரல் 24 காலை 11.15 மணிக்கு தரையிறங்கினார். அவரை ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் உயர் அதிகாரிகள் வரவேற்றனர். மேலும், 2025 ஏப்ரல் 25 இன்று மாலை 6 மணிக்கு முத்தநாடுமந்து பகுதியில் தோடர் இன மக்களை சந்திக்க உள்ளார்.

ஆளுநருக்கு எதிராக போராட்டக் களமாய் ஊட்டி

மாநாட்டை முன்னிட்டு, ஆளுநர் ஆர்.என்.ரவி மீது ஏற்கனவே விமர்சனங்கள் கிளம்பியுள்ள நிலையில், அவரது தலைமைக்கான எதிர்ப்பாக பல அமைப்புகள் போராட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன. காங்கிரஸ், தந்தை பெரியார் திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட அமைப்புகள் 2025 ஏப்ரல் 25  இன்று காலை 11 மணிக்கு ஊட்டி பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு ராஜ்பவனை முற்றுகையிட உள்ளதாக தெரிவித்துள்ளன.

பாதுகாப்பு சூழல் மற்றும் போலீஸ் கண்காணிப்பு

இத்தனை எதிர்ப்புகளுக்கிடையே, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் ராஜ்பவனும், ஹெலிபாட் பகுதிகளும், முக்கிய சாலைகளும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. போராட்டக்காரர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

கோவையில் கருப்புக்கொடி போராட்டம் – 30 பேர் கைது

ஆளுநர் ரவி கோவை விமான நிலையம் வழியாக ஊட்டிக்கு வந்தபோது, திராவிடர் விடுதலை கழகம் மற்றும் தமிழ்ப் புலிகள் கட்சியினர் கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசாரும் போராட்டக்காரர்களும் இடையே வாக்குவாதம் வெடித்து, 30 பேர் கைது செய்யப்பட்டனர்.

துணை ஜனாதிபதிக்கு எதிராக வக்கீல்கள் கண்டனம்

உச்சநீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்புகளை விமர்சித்த துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் மற்றும் பாஜ எம்பி நிஷிகாந்த் துபே ஆகியோருக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றம், திருப்பூர், திருச்சி உள்ளிட்ட நீதிமன்றங்களின் முன்பாக வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த இருவரும் பதவியில் இருந்து விலக வேண்டும் என வலியுறுத்தியும் முழக்கம் எழுப்பினர்.

சென்னை மக்களே அலர்ட்.. மாநகர பேருந்து வழித்தட எண்கள் மாற்றம்!
சென்னை மக்களே அலர்ட்.. மாநகர பேருந்து வழித்தட எண்கள் மாற்றம்!...
‘தன்னைத் தானே செதுக்கியவன்!’ - அஜித்குமார் பிறந்தநாள் ஸ்பெஷல்!
‘தன்னைத் தானே செதுக்கியவன்!’ - அஜித்குமார் பிறந்தநாள் ஸ்பெஷல்!...
பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சிக்கிய நாகை இளைஞர்
பிரதமர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்.. சிக்கிய நாகை இளைஞர்...
பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவில் பறக்க தடை.. மத்திய அரசு அதிரடி
பாகிஸ்தான் விமானங்கள் இந்தியாவில் பறக்க தடை.. மத்திய அரசு அதிரடி...
ORS பவுடர் பயன்பாடு குறித்து பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு
ORS பவுடர் பயன்பாடு குறித்து பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு...
சுட்டெரிக்கும் வெயில்.. இன்னும் 3 டிகிரி வரை அதிகரிக்கும்!
சுட்டெரிக்கும் வெயில்.. இன்னும் 3 டிகிரி வரை அதிகரிக்கும்!...
தொடர் தோல்வி! ஐபிஎல் 2025 டாட்டா காட்டிய CSK.. கலக்கிய PBKS..!
தொடர் தோல்வி! ஐபிஎல் 2025 டாட்டா காட்டிய CSK.. கலக்கிய PBKS..!...
உலகத்தில் உயர்ந்தது தாய்மை.. குரங்கின் தாகம் தீர்த்த பெண்!
உலகத்தில் உயர்ந்தது தாய்மை.. குரங்கின் தாகம் தீர்த்த பெண்!...
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!...
தந்தையின் கடையில் திருடி ஐபோன் வாங்கிய சிறுவன்: அதிர்ச்சி சம்பவம்
தந்தையின் கடையில் திருடி ஐபோன் வாங்கிய சிறுவன்: அதிர்ச்சி சம்பவம்...
2025ல் மாணவர்களுக்கான பெஸ்ட் லேப்டாப் - எப்படி தேர்ந்தெடுப்பது ?
2025ல் மாணவர்களுக்கான பெஸ்ட் லேப்டாப் - எப்படி தேர்ந்தெடுப்பது ?...