Virat Kohli vs CSK: சென்னைக்கு எதிராக குவியப்போகும் சாதனைகள்.. கலக்க காத்திருக்கும் விராட் கோலி..!

Kohli's IPL 2025 CSK Match: ஐபிஎல் 2025ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் விராட் கோலி படைக்கவுள்ள சாதனைகள் பற்றி தெரிந்து கொள்வோம். 750 பவுண்டரிகள், டேவிட் வார்னர் சாதனை முறிப்பு, 50 சிக்ஸர்கள், 300 சிக்ஸர்கள் (ஆர்சிபிக்காக) மற்றும் 8500 ஐபிஎல் ரன்கள் உள்ளிட்ட முக்கிய சாதனைகளை இந்த ஆர்டிகிள் பேசுகிறது.

Virat Kohli vs CSK: சென்னைக்கு எதிராக குவியப்போகும் சாதனைகள்.. கலக்க காத்திருக்கும் விராட் கோலி..!

விராட் கோலி

Published: 

03 May 2025 18:08 PM

ஐபிஎல் கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்டது முதலே ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் விராட் கோலியும் (Virat Kohli), சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்.எஸ்.தோனியும் விளையாடி வருகிறது. இந்த இரு அணிகளும் மோதும்போது ஐபிஎல்லில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவும். ஐபிஎல் 2025ல் (IPL 2025) 52வது போட்டியில் இன்று அதாவது 2025 மே 3ம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியும் பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு மோதுகிறது. இந்த போட்டியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பே விராட் கோலிதான். இந்தநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி படைக்கவிருக்கும் சாதனைகளை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

சிஎஸ்கே அணிக்கு எதிரான விராட் கோலியின் சாதனைகள்:

ஐபிஎல் வரலாற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ்-க்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் விராட் கோலி ஆவார். மொத்தம் 34 இன்னிங்ஸ்களில் கோலி 1098 ரன்கள் எடுத்தார். இதில், இவரது சராசரி 36.60 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 125.34 ஆகவும் உள்ளது. மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக விராட் கோலி இதுவரை 9 அரைசதங்களை பதிவு செய்துள்ளார்.

விராட் கோலி படைக்கவுள்ள சாதனைகள்:

750 பவுண்டரிகள்:

ஐபிஎல் வரலாற்றில் விராட் கோலி 750 பவுண்டரிகள் அடிக்க பொன்னான வாய்ப்பு உள்ளது. இன்றைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி இன்னும் 6 பவுண்டரிகள் அடித்தால் ஐபிஎல்லில் 750க்கு மேற்பட்ட பவுண்டரி அடித்த 2வது வீரர் என்ற சாதனை படைப்பார். ஐபிஎல் வரலாற்றில் அதிக பவுண்டரிகள் (768) அடித்த சாதனையை ஷிகர் தவான் வைத்துள்ளார்.

டேவிட் வார்னர் சாதனை முறியடிப்பு:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் விராட் கோலி 42 ரன்கள் அடித்தால், டேவிட் வார்னர் வைத்திருந்த தனி சாதனையை முறியடிப்பார். ஒரு அணிக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைப்பார். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக டேவிட் வார்னர் அடித்திருந்த 1134 ரன்கள் முறியடிக்கப்படும்.

சென்னை அணிக்கு எதிராக 50 சிக்ஸர்கள்:

விராட் கோலி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 50 சிக்ஸர்களை அடிக்க வாய்ப்புள்ளது. இன்னும், 7 சிக்ஸர்கள் அடித்தால் இந்த சாதனையை படைப்பார்.

பெங்களூரு அணிக்காக 300 சிக்ஸர்கள்:

இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக விராட் கோலி 5 சிக்ஸர்கள் அடித்தால், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக 300 சிக்ஸர்கள் அடித்த சாதனையை படைப்பார். இதன்மூலம், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக இந்த சாதனையை படைத்த முதல் வீரர் ஆவார்.

ஐபிஎல்லில் 8500 ரன்கள்:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலிக்கு 53 ரன்கள் அடித்தால், தனது ஐபிஎல் வாழ்க்கையில் 8500 ரன்களை நிறைவு செய்வார். இதன்மூலம், ஐபிஎல் போட்டிகளில் 8500 ரன்களை கடந்த உலகின் முதல் வீரர் என்ற பெருமையை கோலி பெறுவார்.

Related Stories
IPL 2025: தர்மசாலாவில் தடம் பதிக்கும் முனைப்பில் பஞ்சாப்..? என்ன திட்டத்தில் ரிஷப் பண்ட் படை..? பிட்ச் விவரம்!
IPL 2025: கௌரவ வெற்றிக்காக ராஜஸ்தான்! கட்டாய வெற்றிக்காக கொல்கத்தா! பிளே ஆஃப் பாதையில் சிக்கல் வருமா?
RCB vs CSK: முதல் சதத்தை தவறவிட்ட ஆயுஷ் மத்ரே.. கடைசி நேரத்தில் 3வது வெற்றியை தவறவிட்ட CSK..!
IPL 2025: ஊக்கமருந்தில் சிக்கிய ஐபிஎல் பிரபலம்.. கிரிக்கெட்டில் இடைநீக்கம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
ICC Women’s T20 World Cup 2026: லார்ட்ஸில் 3வது முறை இறுதிப்போட்டி.. ஐசிசி கொடுத்த அப்டேட்.. வாய்ப்பை பயன்படுத்துமா இங்கிலாந்து..?
IPL 2025: அடாவடி காட்ட காத்திருக்கும் மழை.. சென்னை vs பெங்களூரு போட்டி நடைபெறுமா..? வெதர் ரிப்போர்ட் இதோ!