ICC Women’s T20 World Cup 2026: லார்ட்ஸில் 3வது முறை இறுதிப்போட்டி.. ஐசிசி கொடுத்த அப்டேட்.. வாய்ப்பை பயன்படுத்துமா இங்கிலாந்து..?

Lord's Cricket Ground: 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள மகளிர் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி, லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என ஐசிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இங்கிலாந்தில் உள்ள ஏழு மைதானங்களில் போட்டிகள் நடைபெறும். 12 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் ஜூன் 12 முதல் ஜூலை 5 வரை நடைபெறும். லார்ட்ஸ் மைதானத்தில் மூன்றாவது முறையாக இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.

ICC Womens T20 World Cup 2026: லார்ட்ஸில் 3வது முறை இறுதிப்போட்டி.. ஐசிசி கொடுத்த அப்டேட்.. வாய்ப்பை பயன்படுத்துமா இங்கிலாந்து..?

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி

Published: 

03 May 2025 15:51 PM

அடுத்த ஆண்டு அதாவது 2026ம் ஆண்டு நடைபெற உள்ள மகளிர் டி20 உலகக் கோப்பை (ICC Women’s T20 World Cup 2026)  குறித்து ஐசிசி (ICC) மிகப்பெரிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த மிகப்பெரிய போட்டி இங்கிலாந்து நாட்டில் நடத்தப்படுகிறது என்றாலும், இறுதிப்போட்டி எங்கு நடைபெறும் என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லாமல் இருந்தது. தற்போது இதுதொடர்பான அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி, 2026ம் ஆண்டு மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி வரலாற்று சிறப்புமிக்க லார்ட்ஸ் ஸ்டேடியத்தில் (Lord’s Cricket Ground) நடைபெறும் என்று ஐசிசி அறிவித்துள்ளது.

ஐசிசி இறுதிப்போட்டி:

ஐசிசியின் இறுதிப்போட்டியானது லார்ட்ஸில் தொடர்ந்து மூன்றாவது முறையாக நடத்தப்பட இருக்கிறது. 2026 மகளிர் டி20 உலகக் கோப்பை இங்கிலாந்து நாட்டில் 6 இடங்களில் நடைபெறவுள்ளது. அதன்படி, இறுதிப்போட்டி நடைபெறும் லார்ட்ஸை தவிர, ஹெடிங்லி, எட்ஜ்பாஸ்டன், ஓல்ட் டிராஃபோர்டு, ஹாம்ப்ஷயர் பவுல், தி ஓவல் மற்றும் பிரிஸ்டல் கவுண்டி ஸ்டேடியத்தில் மற்ற போட்டிகள் நடைபெறவுள்ளது. 2026ம் ஆண்டு நடைபெறும் மகளிர் டி20 உலகக் கோப்பையில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்கும் நிலையில், இந்த போட்டியானது 2026ம் ஆண்டு ஜூன் 12 முதல் ஜூலை 5 வரை நடைபெறவுள்ளது.

2026 மகளிர் டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கான அறிவிப்பு:

இந்த 12 அணிகளில் தலா 6 அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு, 24 நாட்களில் 33 போட்டிகளாக நடத்தப்படும் என ஐசிசி தலைவர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். மேலும் 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு லார்ட்ஸ் மைதானம் சிறந்த தேர்வாக இருந்தது. அதனால், இந்த ஸ்டேடியம் தேர்வு செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

3வது முறையாக லார்ட்ஸில் இறுதிப்போட்டி:

ஐசிசி போட்டியின் இறுதிப் போட்டிகள் லார்ட்ஸில் நடைபெற்ற கடைசி 3 முறையும் இங்கிலாந்து அணியே சாம்பியனாக உருவெடுத்தது. கடந்த 2017ம் ஆண்டு லார்ட்ஸில் நடைபெற்ற மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற ஆண்கள் ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தில் இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதுபோன்ற சூழ்நிலையில், 2026 ஆண்டு நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணி மீண்டும் சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Related Stories