நடிகையின் போட்டோவுக்கு லைக் செய்ததாக சர்ச்சை – விராட் கோலி விளக்கம் – நடந்தது என்ன?
Kohli Clarifies Instagram Like : விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் இருந்து நடிகை அவ்நீத் கௌர் புகைப்படத்தை ‘லைக்’ செய்ததாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், அது அல்காரிதம் காரணமாக ஏற்பட்ட தவறு என விளக்கம் அளித்துள்ளார்.

விராட் கோலி
ஐபிஎல் (IPL) 2025ல் 52வது லீக் போட்டியில் மே 3, 2025 அன்று நடைபெறும் ஆட்டத்தில் ரஜத் பட்டிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) அணியும் மகேந்திர சிங் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியும் மோதுகின்றன. இந்த போட்டி பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. கடைசி இடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்தப் போட்டியில் வென்றாலும் தோற்றாலும் அதனை பெரிதும் பாதிக்காது. ஆனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 வெற்றி, 3 தோல்வி என புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்தப் போட்டியில் வென்று ப்ளே ஆஃப் சுற்றை உறுதிப்படுத்தும் முயற்சியில் அந்த அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கேற்ப அந்த அணியின் விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் நல்ல ஃபார்மில் இருந்து வருகிறார். இந்த சீசனில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் இதுவரை 443 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறார். மேலும் ராயல் சேலஞ்சர்ஸ் அணி தனது சொந்த மண்ணில் விளையாடவிருப்பதால் அதிக ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை ரசிகர்கள் குறித்து கோலி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டி குறித்து பேசியுள்ள கோலி, “பெங்களூருவில் சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டி மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. சென்னை ரசிகர்கள் ஒரு பெரிய குழுவாக பெங்களூருவுக்கு வருகிறார்கள். எங்கு பார்த்தாலும் மஞ்சளாக இருக்கும். சிஎஸ்கே ரசிகர்கள் எல்லா இடத்திலும் இருக்கிறார்கள். அதன் மூலம் டிக்கெட் விற்பனையில் மிகுந்த பரபரப்பு ஏற்படும். இரு அணிகளுக்கு இடையிலான போட்டிகள் மிகக் கடுமையானதாக இருக்கும். இந்த போட்டியில் விளையாட நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன் என்றார்.
நடிகையின் போட்டோவுக்கு லைக் செய்த விராட் கோலி?
இந்த நிலையில் விராட் கோலி அவ்நீத் கௌரின் ஃபேன் பேஜில் உள்ள அவரது புகைப்படத்தை லைக் செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் வைரலானது. இது அவரது ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பலரும் அவரது மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மாவைக் குறிப்பிட்டு கமெண்ட் செய்யத் தொடங்கினர். இந்த சம்பவம் பரபரப்பான நிலையில் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், இந்த லைக் என்பதை ஆல்காரிதம் தவறுதலாக பதிவு செய்ததாக கூறியுள்ளார்.
விராட் கோலியின் விளக்கம்
Virat Kohli’s Instagram story. pic.twitter.com/xnjK3GH2T2
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 2, 2025
அவரது பதிவில், நான் இதனை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் என் இன்ஸ்டாகிராம் ஃபீடை கிளியர் செய்யும்போது அல்காரிதம் தவறுதலாக லைக் செய்திருக்கலாம். அதன் பின்னால் எந்த உள்நோக்கமும் இல்லை. தயவுசெய்து எந்தவொரு அவசியமற்ற வதந்திகளையும் பரப்ப வேண்டாம். உங்கள் புரிதலுக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பரபரப்பை உருவாக்கியிருந்த நிலையில், கோலியின் விளக்கம் இப்போது அவரது பெரும்பான்மையான ரசிகர்களிடம் புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது.