IPL 2025: சொந்த மண்ணில் தடம் பதிக்குமா பெங்களூரு..? பழிவாங்கும் முனைப்பில் ராஜஸ்தான்.. ஹெட் டூ ஹெட் விவரம்!

RCB vs RR Match Preview: ஐபிஎல் 2025ன் 42வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. சின்னசாமி ஸ்டேடியத்தின் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான பிட்ச், இரு அணிகளின் பலம், பலவீனங்கள், மற்றும் நேருக்குநேர் சந்திப்புகளின் வரலாறு ஆகியவற்றை இந்த ஆர்டிக்கிள் விரிவாக விளக்குகிறது. இரு அணிகளின் கணிக்கப்பட்ட பதினோரு வீரர்களின் பட்டியலும் இதில் இடம்பெற்றுள்ளது.

IPL 2025: சொந்த மண்ணில் தடம் பதிக்குமா பெங்களூரு..? பழிவாங்கும் முனைப்பில் ராஜஸ்தான்.. ஹெட் டூ ஹெட் விவரம்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - ராஜஸ்தான் ராயல்ஸ்

Published: 

24 Apr 2025 08:00 AM

ஐபிஎல் 2025ன் (IPL 2025) 42வது போட்டியில் இன்று அதாவது 2025 ஏப்ரல் 23ம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் (Rajasthan Royals) மோதுகிறது. இந்த போட்டியானது பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஐபிஎல் 2025 சீசனின் தொடக்கத்திலும் இரு அணிகளும் மோதியது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வெற்றி பெற்றிருந்தது. இத்தகைய சூழ்நிலையில், இப்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, பெங்களூரு அணியை பழிவாங்க முயற்சிக்கும். பெங்களூரு அணி இதுவரை சொந்த மண்ணில் 3 போட்டிகளில் விளையாடி மூன்றிலும் தோல்வியடைந்துள்ளது. அந்தவகையில், பெங்களூரு ஸ்டேடியத்தின் பிட்ச் எப்படி, இரு அணிகளின் பிளேயிங் லெவன் என்ன..? உள்ளிட்ட விவரங்களை இங்கு தெரிந்து கொள்வோம்.

பிட்ச் ரிப்போர்ட்:

பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தின் பிட்ச் எப்போதும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த 2025 ஐபிஎல் சீசனில் இந்த ஸ்டேடியத்தில் அதிக ஸ்கோரிங் பெற்ற ஒரு போட்டி கூட பார்க்க முடியவில்லை. இந்த ஸ்டேடியத்தில் கடைசியாக நடந்த ஒரு போட்டியில் மழை குறுக்கிட்டதால் போட்டி தலா 14 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் இதுவரை 98 ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில், முதலில் பேட்டிங் செய்த அணி 41 போட்டிகளிலும், 2வதாக பேட்டிங் செய்த அணி 53 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் 287 ரன்கள் ஆகும். ஐபிஎல் வரலாற்றிலும் இதுவே அதிகபட்ச ஸ்கோராகும். இந்த ஸ்கோரை பெங்களூரு அணிக்கு எதிராக ஹைதராபாத் அணி பதிவு செய்தது.

நேருக்குநேர்:

ஐபிஎல் வரலாற்றில் இதுவரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் 33 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், பெங்களூரு அணி 16 போட்டிகளிலும், ராஜஸ்தான் அணி 14 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதேநேரத்தில் 3 போட்டிகள் முடிவில்லாமல் முடிந்தது.

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

விராட் கோலி, பில் சால்ட், ரஜத் படிதார் (கேப்டன்), தேவ்தத் பாடிக்கல், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், சுயாஷ் சர்மா, ஜோஷ் ஹேசில்வுட், யாஷ் தயாள்.

ராஜஸ்தான் ராயல்ஸ்:

யஷஸ்வி ஜெய்ஸ்வால், வைபவ் சூர்யவன்ஷி, நிதிஷ் ராணா, ரியான் பராக் (கேப்டன்), துருவ் ஜூரல் (வி.கே), ஷிம்ரோன் ஹெட்மியர், வனிந்து ஹசரங்கா, ஜோஃப்ரா ஆர்ச்சர், மகேஷ் தீக்ஷனா, சந்தீப் சர்மா, துஷார் தேஷ்பாண்டே.

Related Stories
IPL 2025: கரை சேர துடிக்கும் ஹைதராபாத்..! தாக்குதலை தொடுக்குமா குஜராத்..? பிட்ச் எப்படி..?
RR vs MI: பேட்டிங்கில் ரன் மழை.. விக்கெட்டில் வேட்டை.. ராஜஸ்தானை வீழ்த்தி மும்பை ராஜ நடை!
Shikhar Dhawan New Love: காதலில் விழுந்த ஷிகர் தவான்.. புகைப்படத்துடன் வெளியான அதிகாரப்பூர்வ அப்டேட்.. யார் அந்த பெண்?
IPL 2025 Playoffs: பிளே ஆஃப் கனவுடன் பெங்களூரு, கொல்கத்தா.. வெற்றி பெற்று ஆப்பு வைக்குமா சென்னை..?
Virat Kohli’s Favorite Song: இந்தியும் இல்லை! பஞ்சாபியும் இல்லை.. இந்த தமிழ் சாங்தான் என்னுடைய பேவரைட்.. ஆச்சர்யம் கொடுத்த விராட் கோலி!
CSK IPL 2025 Playoff Exit: பிளேஆஃப்களில் இருந்து வெளியேறிய சிஎஸ்கே.. விரக்தியை வெளிப்படுத்திய தோனி.. என்ன சொன்னார்..?