RCB vs CSK: முதல் சதத்தை தவறவிட்ட ஆயுஷ் மத்ரே.. கடைசி நேரத்தில் 3வது வெற்றியை தவறவிட்ட CSK..!

Royal Challengers Bengaluru: ஐபிஎல் 2025ன் 52வது போட்டியில், பெங்களூரில் உள்ள எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 2 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 213 ரன்கள் குவித்தது, செப்பர்டு 53 ரன்களுடன் அசத்தினார். சென்னை அணி 214 ரன்கள் இலக்கை நோக்கி விறுவிறுப்பாக ஆடியது, ஆயுஷ் மத்ரே (94) மற்றும் ரவீந்திர ஜடேஜா (59) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால், இறுதிப் பந்தில் வெற்றி பெறத் தவறி, பெங்களூரு வெற்றி பெற்றது.

RCB vs CSK: முதல் சதத்தை தவறவிட்ட ஆயுஷ் மத்ரே.. கடைசி நேரத்தில் 3வது வெற்றியை தவறவிட்ட CSK..!

ஆயுஷ் மத்ரே - ஜடேஜா

Published: 

03 May 2025 23:28 PM

ஐபிஎல் 2025ன் (IPL 2025) 52வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் (Chennai Super Kings), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) அணியும் பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் மோதியது. இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.  முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளி இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்தது. சென்னை அணிக்கு எதிரான விராட் கோலி, பெத்தேல் மற்றும் செப்பர்டு அரைசதம் கடந்தனர். அதிலும், கடைசியாக ரொமாரியோ செப்பர்டு வெறும் 14 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்சர்கள் உதவியுடன் 53 ரன்களை குவித்தார். இதனால், பெங்களூரு அணி 210 ரன்களை கடந்தது.

214 ரன்கள் இலக்கு:

214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக ஷேக் ரஷீத் மற்றும் ஆயுஷ் மத்ரே களமிறங்கினர். க்ருணால் பாண்டியா வீசிய முதல் ஓவரிலேயே தொடக்க வீரர்கள் 6 ரன்கள் எடுத்தனர். தொடர்ந்து இருவரும் ஆட்டத்தை வெளிப்படுத்த தொடங்கினார். தொடர்ந்து, அனுபவ வீரர் புவனேஷ்வர் குமார் வீசிய 4 ஓவரில் ஆயுஷ் மத்ரே 6 பந்துகளிலும் பவுண்டரி, சிக்ஸர்கள் அடித்து 26 ரன்கள் திரட்டினார். அதற்கு அடுத்த ஓவரில் ஷேக் ரஷீத் 11 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து க்ருனால் பாண்ட்யா பந்தில் ஆட்டமிழந்த்தார். இதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 51 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்தது.

அடுத்ததாக உள்ளே வந்த சாம் கர்ரனும் 5 பந்துகளில் 5 ரன்களில் ஆட்டமிழக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2வது விக்கெட்டை இழந்தது. இதற்கு பிறகுதான், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு தலைவலி தொடங்கியது. ஆயுஷ் மத்ரே அதிரடியாக விளையாட, மறுபுறம் இணைந்த ரவீந்திர ஜடேஜா தேவையான நேரத்தில் பவுண்டரிகளை அடித்து கொடுத்தார். இதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் 16 ஓவர்களில் 171 ரன்கள் எடுத்தது. 17 வயதே ஆன ஆயுஷ் மத்ரே 47 பந்துகளில் 94 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 34 பந்துகளில் 59 ரன்களும் எடுத்திருந்தனர்.

அடுத்த ஓவர் வீசிய லுங்கி நெகிடி மத்ரேவை 94 ரன்களில் ஆட்டமிழக்க செய்ய, ஐபிஎல் தனது முதல் சதத்தை தவறவிட்டு ஏமாற்றத்துடன் வெளியேறினார். தொடர்ந்து, உள்ளே வந்த பிரெவிஸும் முதல் பந்தே அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். இதனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு 21 பந்துகளில் 42 ரன்கள் தேவையாக இருந்தது. அதேஓவரில், ரவீந்திர ஜடேஜா சிக்ஸர் அடித்து நம்பிக்கையை கொடுத்தார். சுயாஷ் சர்மா வீசிய 18வது ஓவரில் வெறும் 6 ரன்கள் மட்டுமே கொடுத்த கட்டுப்படுத்தினார். இதனால், கடைசி 12 பந்துகளில் 29 ரன்கள் தேவை என்ற நிலையில், புவனேஷ்வர் குமார் வீசிய அடுத்த ஓவரில் ஜடேஜா ஒரு பவுண்டரியும், தோனி ஒரு சிக்ஸரும் பறக்கவிட்டனர்.

6 பந்துகளில் 15 ரன்கள் தேவை என்ற நிலையில், முதல் 2  பந்துகளை சிங்கிளாக தட்டினர் தோனியும், ஜடேஜாவும். யாஷ் தயாள் வீசிய 3வது பந்தில் தோனி எல்பிடபிள்யூ முறையில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். 4 வது ஷிவம் துபே நோ பாலுடன் ஒரு சிக்ஸரையும் பறக்கவிட்டார். அடுத்த பந்தில் சிங்கிளை துபே தட்ட, 5வது பந்தில் மீண்டும் ஒரு சிங்கிள் கிடைத்தது. கடைசி பந்தில் 4 ரன்கள் தேவை என்ற நிலையில், துபே ஒரே ஒரு சிங்கிளை எடுக்க, பெங்களூரு அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.

 

Related Stories
IPL 2025: தர்மசாலாவில் தடம் பதிக்கும் முனைப்பில் பஞ்சாப்..? என்ன திட்டத்தில் ரிஷப் பண்ட் படை..? பிட்ச் விவரம்!
IPL 2025: கௌரவ வெற்றிக்காக ராஜஸ்தான்! கட்டாய வெற்றிக்காக கொல்கத்தா! பிளே ஆஃப் பாதையில் சிக்கல் வருமா?
IPL 2025: ஊக்கமருந்தில் சிக்கிய ஐபிஎல் பிரபலம்.. கிரிக்கெட்டில் இடைநீக்கம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Virat Kohli vs CSK: சென்னைக்கு எதிராக குவியப்போகும் சாதனைகள்.. கலக்க காத்திருக்கும் விராட் கோலி..!
ICC Women’s T20 World Cup 2026: லார்ட்ஸில் 3வது முறை இறுதிப்போட்டி.. ஐசிசி கொடுத்த அப்டேட்.. வாய்ப்பை பயன்படுத்துமா இங்கிலாந்து..?
IPL 2025: அடாவடி காட்ட காத்திருக்கும் மழை.. சென்னை vs பெங்களூரு போட்டி நடைபெறுமா..? வெதர் ரிப்போர்ட் இதோ!