IPL 2025: கரை சேர துடிக்கும் ஹைதராபாத்..! தாக்குதலை தொடுக்குமா குஜராத்..? பிட்ச் எப்படி..?
GT vs SRH Match 51 Preview: குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று (மே 2, 2025) அகமதாபாத்தில் மோதுகின்றன. GT 4வது இடத்திலும், SRH 9வது இடத்திலும் உள்ளன. அகமதாபாத் மைதானத்தில் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் அதிகமாக இருக்கும். வானிலை சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகளின் பிளேயிங் லெவன்கள் மற்றும் போட்டி முன்னோட்டம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

குஜராத் டைட்டன்ஸ் Vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
இந்தியன் பீரிமியர் லீக் 2025ன் (IPL 2025) 51வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (Sunrisers Hyderabad) அணிகள் இன்று அதாவது 2025 மே 2ம் தேதி மோதுகின்றனர். இந்த போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு மோதுகிறது. ஐபிஎல் 2025 புள்ளிகள் பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகள் மற்றும் 3 தோல்விகளுடன் 4வது இடத்திலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகள் மற்றும் 6 தோல்விகளுடன் 9வது இடத்திலும் உள்ளன. இந்தநிலையில், இரு அணிகளுக்கு இடையிலான போட்டி விவரங்கள், பிளேயிங் லெவன் உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்வோம்.
வானிலை எப்படி..?
அகமதாபாத்தில் நடைபெறும் குஜராத் டைட்டன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மழை இடையூறு விளைவிக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு 2025 மே 2ம் தேதி அதிகபட்ச வெப்பநிலை 44 டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரியாகவும் இருக்கும் என்று கூறப்படுகிறது.
பிட்ச் ரிப்போர்ட்:
ஐபிஎல் 2025 சீசனில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இதுவரை நடந்த 4 போட்டிகளில் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 215 ஆக உள்ளது. நான்கு போட்டிகளில் மூன்றில் முதலில் பேட்டிங் செய்த அணிகளே வெற்றி பெற்றுள்ளன. இந்த மைதானத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வது நல்லது. நரேந்திர மோடி மைதானத்தில் விக்கெட்டின் தன்மையை கணிப்பது கடினம். சில நேரங்களில் பேட்டிங்கிற்கு சாதகமாகவும், சில நேரங்களில் பந்துவீச்சிற்கு சாதகமாகவும் இருக்கும்.
நேருக்குநேர்:
ஐபிஎல் வரலாற்றில் குஜராத் டைட்டன்ஸ் (ஜிடி) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்ஆர்ஹெச்) இடையே இதுவரை 5 போட்டிகள் நடந்துள்ளது. இதில், குஜராத் டைட்டன்ஸ் அணி 4லிலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 1லிலும் வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில் அகமதாபாத்தில் இரு அணிகளுக்கும் இடையே நடந்த இரண்டு போட்டிகளிலும் குஜராத் டைட்டன்ஸ் அணியே வெற்றி பெற்றுள்ளது.
கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:
குஜராத் டைட்டன்ஸ்:
சாய் சுதர்ஷன், சுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், ஷாருக் கான், ராகுல் தெவாடியா, கரீம் ஜனத், ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா
இம்பேக்ட் வீரர்: இஷாந்த் சர்மா
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
Got us on cloud 𝟗 with their rhythm 😉🎶
Harshal Patel | Jaydev Unadkat | #PlayWithFire | #GTvSRH | #TATAIPL2025 pic.twitter.com/PUvRjMt9FR
— SunRisers Hyderabad (@SunRisers) May 1, 2025
அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அனிகேத் வர்மா, கமிந்து மெண்டிஸ், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஹர்ஷல் படேல், ஜெய்தேவ் உனத்கட், ஜீஷன் அன்சாரி, முகமது ஷமி
இம்பேக்ட் வீரர்: டிராவிஸ் ஹெட்