Guru Peyarchi 2025: குருபெயர்ச்சி 2025 எப்போது?.. மேஷ ராசிக்கான பலன்கள் இதோ!
2025-ம் ஆண்டு மே மாதம் குரு பெயர்ச்சி ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு நடைபெறுகிறது. இதனால் மேஷ ராசிக்காரர்களுக்கு மூன்றாம் இடத்தில் குருவின் இருப்பு நல்ல பலன்களைத் தரும். திருமணத் தடைகள் நீங்கும், தொழில் வளர்ச்சி அமையும். பணியிடத்தில் உயர்வு, வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்பு உள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.

குருபெயர்ச்சி - மேஷ ராசி பலன்கள்
கிரகங்களின் இயக்க மாற்றம் காரணமாக குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைவது குருபெயர்ச்சி என அழைக்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு குரு பெயர்ச்சியானது (Guru Peyarchi 2025) வாக்கிய பஞ்சாங்கத்தின்படி மே 11 ஆம் தேதியும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி மே 14 ஆம் தேதியும் குருபெயர்ச்சி நடைபெறுகிறது. இப்படியான நிலையில் குருபகவான் இம்முறை ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்லவுள்ளார். இதனால் மேஷ ராசியினர் (Aries zodiac) என்ன மாதிரியான பலன்களை பெறுவார்கள் என்பது பற்றி காணலாம். அதாவது, “மேஷ ராசியை பொருத்தவரை மூன்றாம் இடத்திற்கு குரு செல்வதால் பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது என சொல்லப்படுகிறது. எண்ணங்கள் மற்றும் செயல்கள் இந்த காலகட்டத்தில் சிறப்பாக இருக்கும். எந்த ஒரு காரியத்திலும் எப்படி வெற்றி பெறுவது என்பது இந்த ராசியினருக்கு தெரியும். திருமணத்தடையால் அவதிப்படுபவர்கள் அந்தப் பிரச்சினையில் இருந்து நிவர்த்தி பெறுவார்கள். சுயமாக தொழில் தொடங்கக்கூடிய சூழல் உண்டாகும்.
உங்களுடைய வாழ்க்கை துணையே பிசினஸில் பார்ட்னராக வரலாம். குருவின் பார்வையால் குழந்தை இல்லாமல் அவதிப்படும் தம்பதியினருக்கு நல்ல செய்தி கிடைக்க வாய்ப்புள்ளது. வீட்டில் முன்னோர்களின் சொத்து பிரச்சனைகள் இருந்தால் அவை நீங்கும். இதுவரை மதிக்கப்படாமல் இருந்த சமூகத்தில் குடும்பத்தினருக்கு மதிப்பு உயரும்.
தடைகள் அனைத்தும் நீங்கும்
மேஷ ராசிக்கு பாக்கியஸ்தானத்தில் குருவின் பார்வை கிடைப்பதால் வாழ்க்கையில் மிகப்பெரிய ஏற்றம் இருக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் அமையும். படிப்பில் இருந்த மந்த நிலைகள் நீங்கி அறிவு மேலோங்கும். கல்வியில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும்.
வேலையில்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு 2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் கையில் வருமானம் வரும். மேஷ ராசிக்கு குருவின் பார்வை ராகு மீது விழுவதால் வீடு மற்றும் வாகனம் வாங்குவது, வெளிமாநில பயணங்கள் செல்வது ஆகியவை நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அமையும். குழந்தைகள் பெரிய அளவில் சாதனை படைத்து பெற்றோர்களுக்கு பெருமை சேர்ப்பார்கள். பணியிடங்களில் பதவி உயர்வு சம்பள உயர்வு ஆகியவை இருக்கும்.
குறுகிய காலம் மட்டுமே நீடிக்கும் பிரச்னை
குரு பார்வை இருந்தாலும் சில பிரச்சனைகள் வாழ்க்கையில் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால் அவை குறுகிய காலம் மட்டுமே நீடிக்கும் என்பதால் கவலை கொள்ள வேண்டாம்.குரு பெயர்ச்சியால் இதுவரை வீட்டில் அடைந்த கிடந்த பெண்களின் அசாத்திய திறமைகள் வெளிப்பட்டு பாராட்டுகள் குவியும் காலமாக அமையும். வியாபாரத்தில் தொழில் வளர்ச்சி நன்றாக அமையும். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. இந்த ராசிக்காரர்கள் நீண்ட கால முதலீடு திட்டங்களில் பணத்தை செலவழிக்கலாம்.
குரு பெயர்ச்சிக்கு பிறகு மேஷ ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை நன்றாக செல்ல வேண்டும் என்றால் குருவாயூர் கோயிலுக்கு சென்று வழிபடலாம் என சொல்லப்பட்டுள்ளது. குருபகவான் புதன் வீட்டில் அமர்ந்து இருப்பதால் ராசிினரின் ஆற்றல் அதிகமாகும். குருவாயூர் கோயிலில் நெய் தானம் செய்தால் பெரிய ஏற்றத்தை வாழ்க்கையில் அடையாளம் என கணிக்கப்பட்டுள்ளது. மேஷ ராசி மாணவர்கள் சி ஏ எனப்படும் ஆடிட்டர் படிப்பை தேர்வு செய்து படித்தால் நிச்சயம் வெற்றி பெறலாம். இதனைத் தவிர்த்து பொருளாதார சம்பந்தப்பட்ட படிப்புகள கை கொடுக்கும். மேஷ ராசியினருக்கு இந்த குருபெயர்ச்சி 95% பலனளிக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
(ஜோதிட மற்றும் ஆன்மிக நம்பிக்கையில் இக்கட்டுரையானது எழுதப்பட்டுள்ளது. இதன் உண்மைகளின் துல்லியத்திற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)