Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

டென்ஷனான முதல்வர்.. மேடையில் போலீஸ் அதிகாரியை அடிக்க கை ஓங்கிய சித்தராமையா.. வெளியான வீடியோ!

karnataka CM siddaramaiah: கர்நாடக முதல்வர் சித்தராமையா பொது நிகழ்ச்சி மேடையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளரை அடிக்க கை ஓங்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சித்தராமையாவின் செயலுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

டென்ஷனான முதல்வர்.. மேடையில் போலீஸ் அதிகாரியை அடிக்க கை ஓங்கிய சித்தராமையா.. வெளியான வீடியோ!
முதல்வர் சித்தராமையாImage Source: screengrab/PTI
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 29 Apr 2025 07:32 AM

கர்நாடகா, ஏப்ரல் 29: கர்நாடக மாநிலம் பெலகாவியில் பொதுக் கூட்ட மேடையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளரை முதல்வர் சித்தராமையா அடிக்க கை ஓங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொது மேடையில் போலீசாரை அடிக்க ஓங்கிய சித்தராமையாவின் செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகினறனர். இந்த விவகாரம் கர்நாடகாவில் புதிய புயலை கிளப்பியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

போலீஸ் அதிகாரியை அடிக்க கை ஓங்கிய சித்தராமையா

இந்த நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா நிகழ்ச்சி ஒன்றில் 2025 ஏப்ரல் 28ஆம் தேதியான நேற்று கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி பெலகாவியில் நடந்துள்ளது. அந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் இருந்தனர்.

மேலும், காங்கிரஸ் முக்கிய தலைவர்களும் இருந்துள்ளனர். இந்நிகழ்ச்சிக்கு அருகில் பாஜக பெண் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிகழ்ச்சிக்கான பாதுகாப்பை நிர்வகிக்க கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பரமணி(ஏஎஸ்பி) நியமிக்கப்பட்டிருந்தார்.

எனவே, நிகழ்ச்சிக்கு அருகில் பாஜக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால், டென்ஷனான சித்தராமையா, ஏஎஸ்பி பரமணியை மேடைக்கு அழைத்து, அவரை பகிரங்கமாக கடிந்து, அவரை அடிப்பதற்கு கை ஓங்கி இருக்கிறார். ஆனால், அவரை தாக்கவில்லை.

வெளியான வீடியோ


பொது மேடையிலேயே நூற்றுக்கணக்கான கட்சி தொண்டர்கள் மத்தியில், காவல்துறை அதிகாரியை சித்தராமையா அடிக்க கை ஓங்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில், காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் சூழ்ந்திருந்த மேடையில் நின்ற சித்தராமையா, அதிகாரியை அழைத்து,  நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குள் மக்கள் எப்படி எதிர்ப்புத் தெரிவிக்கவும், கருப்புக் கொடிகளை அசைக்கவும் அனுமதிக்கப்பட்டார்கள் என்று கேட்டார்.

மேலும், ” ஏய், இங்கே வா, எஸ்பி யார்? நீங்க என்ன பண்றீங்க?” என கேட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து, ஏஎஸ்பியை அடிக்க கை ஓங்கியிருப்பதை வீடியோ காட்டுகிறது. முதல்வர் சித்தராமையாவின் செயலுக்கு எதிர்க்கட்சிகள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறது.

சித்தராமையாவின் செயலுக்கு மதச்சார்பற்ற ஜனதா தளம் கண்டனம் தெரிவித்தது. அதாவது, ” காவல்துறை அதிகாரியை அடிக்க கையை உயர்த்துவது உங்கள் பதவிக்கோ கண்ணியத்திற்கோ எந்தப் பெருமையையும் தராது. உங்கள் பதவிக்காலம் 5 ஆண்டுகள் மட்டுமே. ஆனால் ஒரு அரசு அதிகாரி 60 வயது வரை பணியாற்றுகிறார். அதிகாரம் யாருக்கும் நிரந்தரமானது அல்ல. உங்கள் தவறான நடத்தையைத் திருத்திக் கொள்ளுங்கள்”  என எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

ORS பவுடர் பயன்பாடு குறித்து பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு
ORS பவுடர் பயன்பாடு குறித்து பொது சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பு...
சுட்டெரிக்கும் வெயில்.. இன்னும் 3 டிகிரி வரை அதிகரிக்கும்!
சுட்டெரிக்கும் வெயில்.. இன்னும் 3 டிகிரி வரை அதிகரிக்கும்!...
தொடர் தோல்வி! ஐபிஎல் 2025 டாட்டா காட்டிய CSK.. கலக்கிய PBKS..!
தொடர் தோல்வி! ஐபிஎல் 2025 டாட்டா காட்டிய CSK.. கலக்கிய PBKS..!...
உலகத்தில் உயர்ந்தது தாய்மை.. குரங்கின் தாகம் தீர்த்த பெண்!
உலகத்தில் உயர்ந்தது தாய்மை.. குரங்கின் தாகம் தீர்த்த பெண்!...
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்!...
தந்தையின் கடையில் திருடி ஐபோன் வாங்கிய சிறுவன்: அதிர்ச்சி சம்பவம்
தந்தையின் கடையில் திருடி ஐபோன் வாங்கிய சிறுவன்: அதிர்ச்சி சம்பவம்...
2025ல் மாணவர்களுக்கான பெஸ்ட் லேப்டாப் - எப்படி தேர்ந்தெடுப்பது ?
2025ல் மாணவர்களுக்கான பெஸ்ட் லேப்டாப் - எப்படி தேர்ந்தெடுப்பது ?...
டூரிஸ்ட் ஃபேமிலி, ஹிட் 3 படங்களுக்கு வாழ்த்து சொன்ன நடிகர் சூர்யா
டூரிஸ்ட் ஃபேமிலி, ஹிட் 3 படங்களுக்கு வாழ்த்து சொன்ன நடிகர் சூர்யா...
ஜப்பானில் தென்பட்ட அரியவகை வெள்ளைநிற திமிங்கலம்!
ஜப்பானில் தென்பட்ட அரியவகை வெள்ளைநிற திமிங்கலம்!...
ஏசி குளிரும் வெயிலும்: ஆரோக்கியமாக இருக்க 8 அறிவுரைகள்!
ஏசி குளிரும் வெயிலும்: ஆரோக்கியமாக இருக்க 8 அறிவுரைகள்!...
குடும்பத்தினருடன் கீழடி சென்ற நடிகர் சிவகார்த்திகேயன்...
குடும்பத்தினருடன் கீழடி சென்ற நடிகர் சிவகார்த்திகேயன்......