தினமும் வேர்க்கடலை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

Health Benefits of Peanut : வேர்க்கடலை என்பது உடலுக்கு பல வகையான ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் சிறந்த உணவுகளில் ஒன்றாகும். இவை மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் உதவுகின்றன. வேர்க்கடலையில் உள்ள புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உடலின் பல்வேறு பகுதிகளின் செயல்பாடுகளை சீராக்குகின்றன.

தினமும் வேர்க்கடலை சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

மாதிரி புகைப்படம்

Published: 

02 May 2025 23:26 PM

உணவுப் பழக்கங்கள் நம் உடல்நலனைக் கட்டுப்படுத்தும் முக்கியமான அம்சமாகும். குறிப்பாக வேர்க்கடலை (Peanuts) நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது நாள்தோறும் உணவில் சிறிதளவு வேகவைத்த வேர்க்கடலையைச் சேர்த்தாலே அதனால் பல நன்மைகள் கிடைக்கும். இது மூளைத் (Brain) திறனை அதிகரிக்க, இதயத்தை பாதுகாக்க, எடையைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இது மூளை ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வேர்க்கடலையில் வைட்டமின் ஈ உள்ளது. இது மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. வயதாகும்போது மூளையின் செயல்பாடு குறைகிறது. இதுபோன்ற நேரங்களில் வேர்க்கடலை சாப்பிடுவது மூளையில் ஏற்படும் பிரச்னைகளைக் குறைக்கிறது. மேலும் சோர்வு மற்றும் மறதி போன்ற பாதிப்புகளைத் தடுக்கிறது.

மாலை நேர சிற்றுண்டியாக வேகவைத்த வேர்க்கடலையை சாப்பிடுவது நல்லது. இவை பசியைத் தணித்து உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்குகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த வேர்க்கடலை அனைவருக்கும் ஏற்றது. இது குறைந்த செலவில் அதிக நன்மைகளை வழங்கும் உணவாக வேர்கடலை பார்க்கப்படுகிறது.

வேகவைத்த வேர்க்கடலையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆகியவை உள்ளன. உடல் வளர்ச்சிக்கு புரதம் அவசியம். இது தசைகளை பலப்படுத்துகிறது. நல்ல செரிமானத்திற்கு நார்ச்சத்து அவசியம். இது செரிமான பிரச்னைகளைக் குறைக்கிறது. வைட்டமின்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். தாதுக்கள் எலும்புகளை வலுப்படுத்தி ஆற்றலை வழங்குகின்றன.

இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது

இவை இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. அதிகப்படியான கொழுப்பு இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும். ஆனால் வேர்க்கடலையில் உள்ள நல்ல கொழுப்புகள் இதயத்தின் சரியான செயல்பாட்டிற்கு பயனுள்ளதாக இருக்கும். இவை இரத்த நாளங்களில் அடைப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கின்றன. மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது.

வேர்க்கடலையை உட்கொள்ளும்போது உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. இது இதயம் தொடர்பான பிரச்னைகளின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. அதிக அளவு கெட்ட கொழுப்பு இரத்த நாளங்களில் பிளேக் உருவாகி இரத்த ஓட்டத்தைத் தடுக்கிறது. ஆனால் வேர்க்கடலை சாப்பிடுவதால் இந்த பிரச்னை தடுக்கப்படுகிறது.

உடல் எடையைக் கட்டுப்படுத்துகிறது

உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேர்க்கடலை மிக முக்கியமானது. அதிகமாக சாப்பிடாமல் உங்கள் பசியைக் கட்டுப்படுத்த விரும்பினால் இது ஒரு நல்ல வழி. சாப்பிட்ட பிறகு நீண்ட நேரம் பசி எடுக்காது. அதிக எடை கொண்டவர்கள் இதை தொடர்ந்து உட்கொண்டால் தங்கள் எடையைக் கட்டுப்படுத்தலாம். நீங்கள் ஆரோக்கியமான சிற்றுண்டியை விரும்பினால், வேர்க்கடலை சாப்பிடுவது நல்லது.

நீரிழிவு நோயாளிகளுக்கு சிறிய அளவில் வேர்க்கடலையை உணவில் எடுத்துக்கொள்வது நன்மை பயக்கும். இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இது இரத்த சர்க்கரை அளவை சரியான அளவில் பராமரிக்க உதவுகிறது. உடலில் ஆஸ்துமா பாதிப்பை குறைப்பதுடன் சோர்வைக் குறைக்க உதவுகிறது. குறிப்பாக நீங்கள் தினமும் சிறிது வேக வைத்த வேர்க்கடலையை சாப்பிட்டால், உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.