லக்கி பாஸ்கர் முதல் கோர்ட் வரை… நெட்ஃபிளிக்ஸில் மிஸ் செய்யக்கூடாத டாப் தென்னிந்திய படங்களின் லிஸ்ட் இதோ!
Watch To Watch: தென்னிந்திய மொழிகளில் உருவாகி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற படங்கள் தற்போது ஓடிடியில் வெளியாகியுள்ளது. அதன்படி நெட்ஃபிளிக்ஸில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உள்ள சிறந்த படங்களின் தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

படங்கள்
லக்கி பாஸ்கர்: இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் (Dulquer Salmaan) நடிப்பில் வெளியான படம் லக்கி பாஸ்கர். இந்தப் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் மாதம் 31-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. படம் தெலுங்கு மொழியில் உருவாகி இருந்தாலும் தென்னிந்திய மொழி ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தில் துல்கர் சல்மானுக்கு நாயகியாக நடிகை மீனாட்சி சௌத்ரி நடித்திருந்தார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் டின்னு ஆனந்த், பி. சாய் குமார், ராம்கி, ரகு பாபு, சர்வதாமன் டி. பானர்ஜி, சச்சின் கேடேகர் மற்றும் ஒய். காசி விஸ்வநாத் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
ஆஃபிஸர் ஆன் டியூட்டி: நடிகர் குஞ்சாக்கோ போபன் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான படம் ஆஃபிஸர் ஆன் டியூட்டி. இந்தப் படத்தை இயக்குநர் ஜித்து அஷ்ரஃப் இயக்கியுள்ளார். க்ரைம் ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவான இந்தப் படத்தில் நடிகர் குஞ்சாக்கோ போபன் உடன் இணைந்து நடிகர்கள் விஷக் நாயர், ஜெகதீஷ் மற்றும் பிரியாமணி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
டிராகன்: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் டிராகன் படத்தில் நடித்துள்ளார். இதில் பிரதீப் ரங்கநாதன் உடன் இணைந்து நடிகர்கள் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், கே.எஸ். ரவிக்குமார் மற்றும் ஜார்ஜ் மரியன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
பெருசு: இயக்குநர் இளங்கோ ராம் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் பெருசு. இந்தப் படத்தில் நடிகர்கள் வைபவ், சுனில் ரெட்டி, நிஹாரிகா என்எம், சாந்தினி தமிழரசன் மற்றும் பால சரவணன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.
கோர்ட்: இயக்குநர் ராம் ஜெகதீஸ் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற படம் கோர்ட். இந்தப் படத்தில் நடிகர்கள் பிரியதர்ஷி புலிகொண்டா, ஹர்ஷ் ரோஷன், ஸ்ரீதேவி, மற்றும் சிவாஜி ஆகியோருடன், பி. சாய் குமார், ஹர்ஷ வர்தன், ரோகினி, சுபலேகா சுதாகர், சுரபி பிரபாவதி, மற்றும் ராஜசேகர் அனிங்கி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் ராம் ஜெகதீஸ் இயக்கிய இந்தப் படத்தை பிரபல நடிகர் நானி தயாரித்துள்ளார். படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் காணக் கிடைக்கின்றது.