இந்திய சினிமாவைத் தவிற வேறு எந்த சினிமாவாலும் அதை செய்ய முடியாது – இயக்குநர் ராஜமௌலி

Director SS Rajamouli: பாகுபலி என்ற பிரமாண்டமான படத்தை இயக்கியதன் மூலம் ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குநர் ராஜமௌலி. இந்தப் படத்தில் பிரபாஸ் நாயகனாக நடித்திருந்த நிலையில் பாக்ஸ் ஆஃபிஸிலும் பட்டையை கிளப்பியது பாகுபலி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய சினிமாவைத் தவிற வேறு எந்த சினிமாவாலும் அதை செய்ய முடியாது - இயக்குநர் ராஜமௌலி

ராஜமௌலி

Updated On: 

02 May 2025 14:27 PM

நடிகர் நானி (Nani) மற்றும் சமந்தாவை வைத்து நான் ஈ என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் இயக்கியுனர் ராஜமௌலி (Rajamouli). இவர் தமிழில் பிரபலமாக இந்தப் படம் காரணமாக இருந்தது. அதனைத் தொடர்ந்து இவரது இயக்கத்தில் வெளியானை பாகுபலி ஒன்று மற்றும் பாகுபலி 2 ஆகிய படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இயக்குநர் ராஜமௌலி இறுதியாக இயக்கியப் படம் ஆர் ஆர் ஆர். இந்தப் படத்தில் நடிகர்கள் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படமுக் இந்திய அளவில் உள்ள ரசிகர்கள் மட்டும் இன்றி உலக அளவில் உள்ள ரசிகர்களை கவர்ந்தது. மேலும் பல விருதுகளையும் வாங்கிக் குவித்தது குறிப்பிடத்தக்கது.

மே மாதம் 1ம் தேதி 2025-ம் ஆண்டு அன்று மும்பையில் நடைபெற்ற WAVES 2025  நிகழ்ச்சியில் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி கலந்து கொண்டார். மேடையில் உரையாற்றிய அவர், இந்தியா ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கதைகள் மற்றும் கதைசொல்லிகளின் பூமியாக இருந்து வருகிறது என்றார்.

புராணங்கள் மற்றும் இதிஹாசங்களிலிருந்து மில்லியன் கணக்கான கதைகள் நாட்டில் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். மேலும் இந்தியாவில் பல மொழிகள் இருப்பதாகவும், ஒவ்வொன்றும் நூற்றுக்கணக்கான ஆண்டுகால வரலாற்றைக் கொண்டவை என்றும் சுட்டிக்காட்டினார். கதைசொல்லல் இந்தியாவின் டிஎன்ஏவின் ஒரு பகுதியாகும் என்றும் அவர் கூறினார்.

உலகில் வேறு எந்த நாடும் நமது இந்திய நாட்டைப் போல வளமான மற்றும் துடிப்பான கதைசொல்லல் கலாச்சாரத்துடன் ஒப்பிட்டு பார்க்க முடியாது என்று இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி கூறினார். இருப்பினும், சர்வதேச அரங்கில் இந்தியா இன்னும் மற்ற நாடுகளுக்கு இணையாக இல்லை என்று அவர் வருத்தம் தெரிவித்தார். ஆனால் இந்தியாவின் திறனில் இயக்குனர் ராஜமௌலி முழு நம்பிக்கையை வைத்திருப்பதாகவு தெரிவித்தார்.

எஸ்.எஸ். ராஜமௌலி நமது நாட்டில் பல மொழிகள் உள்ளன என்று தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மொழிக்கும் நூற்றுக்கணக்கான ஆண்டுகளின் வரலாறு உள்ளது. நமது வரலாறுகளிலிருந்து மில்லியன் கணக்கான கதைகள் உள்ளன, மேலும் எண்ணற்ற கலை வடிவங்கள் நம்மிடம் உள்ளன. மேலும் நூறு முதல் பில்லியன் கணக்காக நமது கதைகள் எண்ணிக்கையற்றதாக உள்ளது.

தொடர்ந்து பேசிய இயக்குனர் ராஜமௌலி இந்த வளமான, துடிப்பான கதை சொல்லும் கலாச்சாரத்தைப் பொறுத்தவரை உலகில் எந்த நாடும் இந்தியாவை நெருங்கக்கூட இல்லை என்றும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.