Thug Life : கமல் – சிம்புவின் தக் லைப் படத்தின் புதிய அப்டேட்.. என்ன தெரியுமா?

Thug Life Movie Update : தமிழில் முன்னணி நடிகர்களாக இருந்து வருபவர்கள் கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசன். இவர்கள் இருவரின் கூட்டணியில் மிகவும் மாறுபட்ட கதைக்களத்துடன் உருவாகியுள்ள படம் தக் லைப். இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படமானது ரிலீசிற்கு தயாராகி வருகிறது.இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவைப் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அதைப் பற்றி முழுமையாகப் பார்க்கலாம்.

Thug Life : கமல் - சிம்புவின் தக் லைப் படத்தின் புதிய அப்டேட்.. என்ன தெரியுமா?

கமல் மற்றும் சிம்பு

Published: 

02 May 2025 16:28 PM

இயக்குநர் மணிரத்னம் (Mani Ratnam)  என்றால் நமது நினைவிற்கு வருவது அவரின் காதல் மற்றும் பிரம்மாண்ட கதைக்களம் கொண்ட திரைப்படங்கள்தான். இந்நிலையில், பொன்னியின் செல்வன் பாகம் 2 (Ponniyin Selvan Part 2) திரைப்படத்தைத் தொடர்ந்து அவர் இயக்கி வந்த படம் தக் லைப் (Thug Life). இந்த படத்தின் கதையை மணிரத்னத்துடன் இணைந்து கமல்ஹாசனும் எழுதியுள்ளார். இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் முன்னணி நாயகனாக நடிக்க அவருக்கு இணையான ரோலில் நடிகர் சிலம்பரசன் (Silambarasan)  நடித்துள்ளார். இவர்கள் இருவரின் காமினேஷனில் ஆக்ஷ்ன் படமாக இந்த தக் லைப் படமானது உருவாகி வருகிறது. இந்த படத்தில் நடிகர் சிலம்பரசனுடன் த்ரிஷா கிருஷ்ணனும் (Trisha Krishnan)  இந்த படத்தில் நடித்துள்ளார். இவர்கள் இருவரின் காம்போவில் சுமார் 15 வருடங்களுக்குப் பிறகு உருவாகியுள்ள படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆக்ஷ்ன், குடும்பம் மற்றும் காதல் என அனைத்து அம்சங்களும் கலந்த படமாக இது உருவாகியுள்ளது.

இந்த படத்திற்காக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இவரின் இசையமைப்பில், தக் லைப் படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இதைத் தொடர்ந்து இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கவுள்ளது. இந்த விழாவானது வரும் 2025, மே 16ம் தேதியில் சென்னை நேரு அரங்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக நடக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகவுள்ளது.

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் இசை என்றாலே அந்த படமானது நிச்சயம் நல்ல வரவேற்பை பெரும் என்பது தெரிந்ததே. மேலும் இந்த படமானது மிகவும் பிரம்மாண்ட கூட்டணியில் அமைந்துள்ளது. நிச்சயமாக மக்களிடையே வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தக் லைப் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு :

இயக்குநர் மணிரத்னத்தின் இந்த படத்தில் நடிகர்கள் கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா கிருஷ்ணன், அபிராமி, சான்யா மல்ஹோத்ரா, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், நாசர், லப்பர் பந்து நடிகை சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மற்றும் பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படமானது நடிகர் கமல்ஹாசனின் 234வது திரைப்படம் என்று கடந்த 2023ம் ஆண்டிலே அறிவிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து கடந்த 1 வருடத்திற்கும் மேலாக இந்த படமானது தீவிரமாக எடுக்கப்பட்டு வந்தது. இந்த படத்தில் கமிட்டாகியிருந்த நிலையில், சிலம்பரசனின் நடிப்பில் கடந்த 2024ம் ஆண்டு எந்த படமும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதைத் தொடர்ந்து சிம்பு STR 49,50, மற்றும் 51 என அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகியுள்ளார்.

நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசனின் இந்த தக் லைப் படமானது வரும் 2025, ஜூன் 5ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில், தற்போது இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பல்வேறு இடங்களில் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தொடங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து இந்த படத்தின் இசை வெளியிட்டு விழாவும் வரும் 2025, மே 16ம் தேதியில் சென்னை நேரு அரங்கத்தில் நடக்கவுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.