2025ல் வரிச்சலுகை அளிக்கக்கூடிய சிறந்த 10 மியூச்சுவல் பண்டுகள்!
Mutual Fund: சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் 14% சரிந்துள்ளன. இந்த வீழ்ச்சியால், பல்வேறு காலக்கெடுகளில் (1 மாதம், 3 மாதம், 6 மாதம்) மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் குறைந்த வருவாய் மட்டுமே வழங்குகின்றன. சரியான மியூச்சுவல் பண்ட் திட்டங்களை தேர்வு செய்வது முன்பை காட்டிலும் கடினமாகியிருக்கிறது. இந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் சிறந்த வருவாய் வழங்கிய 10 சிறந்த ELSS மியூச்சுவல் நிதிகளை இங்கு பார்ப்போம்

சிறந்த மியூச்சுவல் பண்ட் திட்டங்கள்
நிதியாண்டு விரைவில் முடிவடையவுள்ள நிலையில், பழைய வரி முறையின் கீழ் வரிச்சலுகை பெற உதவும் ஒரு சிறந்த முதலீட்டு வாய்ப்பை பெறவும், அதே நேரத்தில் வரி சுமையை தவிர்க்க விரும்பினால், பங்கு சார்ந்த சேமிப்புத் திட்டம் (ELSS – Equity Linked Savings Scheme) சிறந்த தேர்வாக இருக்கும். கடந்த 6 மாதங்களில் பங்கு சந்தை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால், கொரோனா காலத்திற்குப் பிறகு மியூச்சுவல் பண்ட் திட்டங்கள் முன்பு போல் இல்லை. செப்டம்பரில் உச்ச நிலையை அடைந்த நிலையில், தற்போது சென்செக்ஸ்(Sensex) மற்றும் நிஃப்டி குறியீடுகள் 14% சரிந்துள்ளன. இந்த வீழ்ச்சியால், பல்வேறு காலக்கெடுகளில் (1 மாதம், 3 மாதம், 6 மாதம்) மியூச்சுவல் பண்ட் (Mutual Fund) திட்டங்கள் குறைந்த வருவாய் மட்டுமே வழங்குகின்றன.
இதனால், சரியான மியூச்சுவல் பண்ட் திட்டங்களை தேர்வு செய்வது முன்பை காட்டிலும் கடினமாகியிருக்கிறது. இந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் சிறந்த வருவாய் வழங்கிய 10 சிறந்த ELSS மியூச்சுவல் நிதிகளை இங்கு பார்ப்போம்.
குவாண்ட் இஎல்எஸ்எஸ் டாக்ஸ் சேவர் பண்ட் (Quant ELSS Tax Saver Fund)
இந்த திட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 32.51% வருமானத்தை வழங்கியுள்ளது. இது 2013 ஜனவரி 1ஆம் தேதி தொடங்கப்பட்டு, மிக அதிக அபாயம் உள்ளதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு இது ஒரு நல்ல தேர்வாக இருக்கலாம்.
எஸ்பிஐ லாங் டெர்ம் இக்விட்டி பண்ட் (SBI Long Term Equity Fund)
இந்த திட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 26.08% வருமானம் வழங்கியுள்ளது. கடந்த 2013 ஜனவரி 1ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிதி, மிக அதிக அபாயம் உள்ளதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. நீண்ட கால வரிச்சலுகை முதலீட்டிற்காக இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம்.
பராக் பரிக் இஎல்எஸ்எஸ் டாக்ஸ் சேவர் பண்ட் (Parag Parikh ELSS Tax Saver Fund)
இந்த திட்டமானது கடந்த 5 ஆண்டுகளில் 24.93% வருமானம் வழங்கியுள்ளது. கடந்த 2019 ஜூலை 24ஆம் தேதி அறிமுகமான இந்த பண்ட், மிக அதிக அபாயம் உள்ளதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. நீண்ட கால வளர்ச்சி மற்றும் வரிச்சலுகைக்கு இது ஒரு நல்ல முதலீட்டு வாய்ப்பாக இருக்கும்.
எச்டிஎப்சி இஎல்எஸ்எஸ் டாக்ஸ் சேவர் பண்ட் ( HDFC ELSS Tax Saver Fund )
இந்த திட்டமானது கடந்த 5 ஆண்டுகளில் 24.20% வருமானம் வழங்கியுள்ளது. கடந்த 2013 ஜனவரி 1ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த பண்ட், மிக அதிக அபாயத்துடன் செயல்படுவதாக கணிக்கப்பட்டுள்ளது. நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு வரிச்சலுகை மற்றும் நல்ல வருவாய் கிடைக்க இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
பந்தன் இஎல்எஸ்எஸ் டாக்ஸ் சேவர் பண்ட் ( Bandhan ELSS Tax Saver Fund )
இந்த திட்டமானது கடந்த 5 ஆண்டுகளில் 23.88% வருமானம் வழங்கியுள்ளது. கடந்த 2013 ஜனவரி 1ஆம் தேதி அறிமுகமான இந்த பண்ட், மிக அதிக அபாயத்துடன் செயல்படுகிறது. நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு வரிச்சலுகை அனுகூலங்களை வழங்குவதோடு, நல்ல வளர்ச்சி கிடைக்கும் வாய்ப்பையும் இது வழங்குகிறது.
டிஎஸ்பி இஎல்எஸ்எஸ் (DSP ELSS Tax Saver Fund)
இந்த திட்டமானது கடந்த 5 ஆண்டுகளில் 23.04% வருமானம் வழங்கியுள்ளது. கடந்த 2013 ஜனவரி 1ஆம் தேதி தொடங்கிய இந்த பண்ட், மிக அதிக அபாய அளவைக் கொண்டுள்ளது. நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு வரிச்சலுகை மற்றும் உயர் தரமான வளர்ச்சி வாய்ப்புகளை வழங்கும் இந்த நிதி, சந்தையின் நிலைமைகளுக்கு ஏற்ப மாறுபடும் தன்மை கொண்டது.
பாங்க் ஆப் இந்தியா இஎல்எஸ்எஸ் டாக்ஸ் சேவர் பண்ட் (Bank of India ELSS Tax Saver Fund)
இந்த திட்டமானது கடந்த 5 ஆண்டுகளில் 22.16% வருமானத்தை வழங்கியுள்ளது. கடந்த 2013 ஜனவரி 1ஆம் தேதி அறிமுகமான இந்த பண்ட், மிக அதிக அபாய அளவைக் கொண்டதாகும். நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கக்கூடும், ஏனெனில் இது வரிச்சலுகையை வழங்குவதோடு, சந்தை சார்ந்த உயர்ந்த வருமானத்தையும் ஏற்படுத்தும் வாய்ப்பு கொண்டுள்ளது.
பிராங்க்ளின் இந்தியா இஎல்எஸ்எஸ் டாக்ஸ் சேவர் பண்ட் (Franklin India ELSS Tax Saver Fun)
இந்த திட்டமானது கடந்த 5 ஆண்டுகளில் 22.07% வருமானத்தை வழங்கியுள்ளது. கடந்த 2013 ஜனவரி 1ஆம் தேதி அறிமுகமான இந்த பண்ட், மிக அதிக அபாய நிலை கொண்டதாக கண்டறியப்பட்டுள்ளது. நீண்ட கால முதலீட்டாளர்களுக்கு இது வரிச்சலுகையுடன் சந்தை சார்ந்த மேம்பட்ட வருமானத்தையும் வழங்கக்கூடியதாகும்.
மிரே அசெட் இஎல்எஸ்எஸ் டாக்ஸ் சேவர் பண்ட் (Mirae Asset ELSS Tax Saver Fund)
இந்த திட்டமானது கடந்த 5 ஆண்டுகளில் 21.78% வருமானத்தை வழங்கியுள்ளது. கடந்த 2015 டிசம்பர் 28ஆம் தேதி அறிமுகமான இந்த பண்ட், மிக அதிக அபாய நிலை கொண்டதாக கருதப்படுகிறது. நீண்ட கால முதலீட்டுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம்.
குவாண்டம் இஎல்எஸ்எஸ் டாக்ஸ் சேவர் பண்ட் (Quantum ELSS Tax Saver Fund)
இந்த திட்டமானது கடந்த 5 ஆண்டுகளில் 21.40% வருமானத்தை வழங்கியுள்ளது. 2008 டிசம்பர் 23ஆம் தேதி அறிமுகமான இந்த நிதி, மிக அதிக அபாய நிலை கொண்டதாக கூறப்படுகிறது. நீண்ட கால முதலீட்டுக்காக இது ஒரு நல்ல விருப்பமாக இருக்கும்.