உங்க பிஎஃப் பாஸ்வேர்டை மறந்துட்டீங்களா? இப்படி ஈஸியா மாற்றலாம்!
Reset your EPF password : இனிமேல் உங்கள் பிஎஃப் பாஸ்வேர்டை மறந்தால் கவலைப்பட தேவையில்லை. EPFO பாஸ்வேர்டை மாற்றும் செயல்முறையை மிகவும் எளிமையாக மாற்றியுள்ளது. உங்கள் UAN எண்ணும், பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணும் இருந்தாலே போதும். இதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

மாதிரி புகைப்படம்
பணியாளர் வைப்பு நிதி (EPFO) கணக்கை ஆன்லைனில் பராமரிக்க யுஏஎன்(UAN) மற்றும் அதன் பாஸ்வேர்டானது மிக முக்கியமானது. பிஎஃப் கணக்கை எப்பொழுதாவது தான் பார்ப்போம் என்பதால் சில நேரங்களில் நாம் அந்த கடவுச்சொல்லை மறந்துவிடும் வாய்ப்பு இருக்கிறது. இதனால், பிஎஃப் பாஸ்புக், அக்கவுண்ட் விவரங்கள் மற்றும் பரிவர்த்தனைகள் குறித்து பார்வையிட முடியாமல் தவிக்க நேரிடும். பாஸ்வேர்டை (Password) மாற்றியமைப்பது முன்பு மிகவும் சவாலான பணியாக இருக்கும். ஆனால் தற்போது EPFO பாஸ்வேர்டை மீட்டமைக்கும் செயல்முறையை மிகவும் எளிமையாக மாற்றியுள்ளது. சில எளிய முறைகளில் உங்கள் பாஸ்வேர்டை மீட்டமைத்து, மீண்டும் உங்கள் பிஎஃப் விவரங்களை பார்க்கலாம். இந்த கட்டுரையில் அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நீங்கள் பிஎஃப் கணக்கின் பாஸ்வேர்டை மறந்துவிட்டால், இனி கவலைப்படத் தேவையில்லை. பாஸ்வேர்டை மீட்டமைக்கும் செயல்முறையை இபிஎஃப்ஓ எளிதாக்கியுள்ளது. சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் பாஸ்வேர்டை மீட்டமைத்து, உங்கள் பிஎஃப் கணக்கில் எவ்வளவு இருக்கிறது மற்றும் பரிவர்த்தனைகளை மீண்டும் சரிபார்க்கலாம். இதற்கு நீங்கள் அதிக வேலைகள் செய்ய வேண்டியதில்லை. கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்முறையை நீங்கள் பின்பற்றினால் உங்கள் வேலை எளிதாக முடிந்து விடும்.
பிஎஃப் பாஸ்வேர்டை எவ்வாறு மீட்பது ?
- இபிஎஃப் பாஸ்வேர்டை மீட்க, முதலில் நீங்கள் அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://unifiedportal-mem.epfindia.gov.in க்குச் செல்ல வேண்டும்.
- இங்கே முகப்புப் பக்கத்தில் நீங்கள் Forgot Password என்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்யவும்.
- இதற்குப் பிறகு, உங்கள் UAN எண்ணை அங்கே பதிவிட்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள கேப்ட்சா குறியீட்டை கவனமாக நிரப்பவும்.
- இதைச் செய்த பிறகு, உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு OTP வரும். அந்த ஒடிபி பெட்டியில் கவனமாக பதிவிட வேண்டும். அதன் பிறகு புதிய பாஸ்வேர்டு அமைப்பதற்கான ஆப்சனை நீங்கள் காண்பீர்கள்.
- புதிய பாஸ்வேர்டு பதிவிட்டு அதன் பிறகு மீண்டும் புதிய பாஸ்வேர்டை சரியாக டைப் செய்வதன் மூலம் அதை உறுதிப்படுத்தவும். பாஸ்வேர்டு வலுவாகவும் தனித்துவமாகவும் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.
- இதைச் செய்த பிறகு, சப்மிட் என்ற ஆப்சனை தேர்ந்தெடுக்க வேண்டும். இப்போது உங்கள் பாஸ்வேர்டு எளிதாக மாற்றப்படும்ய
உங்கள் பாஸ்வேர்டை மாற்றும்போது சில விஷயங்களை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும். உங்கள் மொபைல் எண் UAN-இல் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். மொபைல் எண் மாறியிருந்தால், முதலில் அதை புதுப்பிக்க வேண்டும். பாஸ்வேர்டு குறைந்தது 8 எழுத்துகள் இருக்க வேண்டும். மேலும் எண்கள், எழுத்துக்கள் மற்றும் ஒரு சிறப்பு எழுத்து ஆகியவற்றைக் கொண்டிருக்க வேண்டும். இந்த செயல்முறையை முடித்த பிறகு உங்கள் கடவுச்சொல் எளிதாக மாற்றப்பட்டிருக்கும். இப்போது உங்கள் புதிய கடவுச்சொல்லைப் பயன்படுத்தி EPF பாஸ்புக்கில் உள்நுழையலாம்.