குழந்தைகளின் எதிர்காலத்துக்காக சேமிக்க விரும்புகிறீர்களா? 5 சிறந்த முதலீட்டு திட்டங்கள்!

Smart planning for parents : குழந்தையின் எதிர்கால நிதி பாதுகாப்புக்கு பெற்றோர் இப்போது முதலீடு செய்யத் தொடங்க வேண்டும். வரிவிலக்குடன் கூடிய நீண்டகால முதலீட்டு திட்டங்கள் பாதுகாப்பும் வளர்ச்சியும் தரும்.வரிவிலக்குடன் கூடிய 5 சிறந்த சேமிப்பு திட்டங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

குழந்தைகளின் எதிர்காலத்துக்காக சேமிக்க விரும்புகிறீர்களா? 5 சிறந்த முதலீட்டு திட்டங்கள்!

மாதிரி புகைப்படம்

Published: 

03 May 2025 19:51 PM

இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளை (Children) வளர்ப்பது மிகச் செலவான விஷயமாகி விட்டது. பள்ளிக் கட்டணங்கள் (School), மருத்துவ செலவுகள், உயர்கல்விக்கான திட்டங்கள் என தொடர்ச்சியாக பணத் தேவைகளை சமாளிக்க வேண்டியிருக்கிறது. குறிப்பாக கல்வி கட்டணங்கள் தற்போது முன்பைக் காட்டிலும் பல மடங்கு அதிகரித்திருக்கின்றன. குழந்தைகளுக்கு சிறந்த கல்வி வழங்க அவர்களுக்கு அதிகப்படியான பணம் செலவழிக்க வேண்டிய தேவை இருக்கிறது. இதற்காக, பெற்றோர்கள் ஏற்கனவே திட்டமிடத் தொடங்கினால், குழந்தையின் எதிர்காலம் பாதுகாப்பானதாக அமையும் அதற்கு சில முதலீடு (Investment) திட்டங்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம். கூடுதலாக இந்த திட்டங்களில்  வரிவிலக்குகளும் கிடைக்கக்கூடியது என்பது கூடுதல் நன்மையாக பார்க்கப்படுகிறது.

முதலீடு என்பது குறுகிய கால திட்டமில்லை. சிறுவயதிலேயே சரியான திட்டங்களைத் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யத் தொடங்கினால், காலப்போக்கில் கூடிய வட்டி மற்றும் வரிவிலக்குகளால் பெரிய தொகையை உருவாக்க முடியும். அதோடு, உங்கள் பிள்ளையிடமிருந்தே நிதி ஒழுங்கு, சேமிப்பு முக்கியத்துவம் ஆகியவை வளர்ந்திடும்.

பப்ளிக் பிராவிடென்ட் ஃபண்ட் (PPF)

இது அரசு ஆதரவுள்ள பாதுகாப்பான சேமிப்பு திட்டங்களில் ஒன்று. இதில் 15 ஆண்டுகள் சேமிப்பு காலம்.  இந்த திட்டத்தில் பெற்றோர் தங்களது குழந்தைகளின் பெயரில் கணக்கு தொடங்கலாம். வருடத்திற்கு ரூ.1.5 லட்சம் வரையிலான தொகையை செலுத்தலாம். இதில் கிடைக்கும் வட்டிக்கு வரிவிலக்கு உண்டு.

சுகன்யா சம்ருத்தி யோஜனா (Sukanya Samriddhi Yojana)

இது பெண் குழந்தைகளின் நலனுக்காக உருவாக்கப்பட்ட அரசு திட்டம்.  மேலும் 10 வயதிற்குட்பட்ட சிறுமிகளுக்காக இந்த திட்டத்தில் இணைந்து சேமிக்கலாம். குறைந்தது ரூ.250 செலுத்தி இந்த திட்டத்தில் இணையலாம். வருடத்துக்கு அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் செலுத்தலாம். 8 சதவிகிதம் முதல் 9 சதவிகிதம் வரை வட்டி கிடைக்கும். மேலும் வரிவிலக்கு நன்மைகளும் உண்டு. 21 ஆண்டுகளுக்குப் பிறகு கணக்கு முடியும். மேலும் 18வது வயதில் குறிப்பிட்ட தொகையைத் திரும்ப பெறலாம்.

ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் (Equity Mutual Funds)

இந்த திட்டத்தில் சில அபாயங்கள் இருந்தாலும் அதிக லாபம் அளிக்கக் கூடியது.  10 முதல் 15 ஆண்டுகள் வரை முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம். குழந்தையின் உயர்கல்வி செலவுகளுக்கு இந்த திட்டம் உதவிகரமானதாக இருக்கும். குறிப்பாக, பிரிவு 80சின் கீழ் வரிவிலக்கு பெற உதவும்.

டெர்ம் இன்சூரன்ஸ் (Term Insurance)

இவை நிதி பாதுகாப்புக்கும், முதலீட்டுக்கும் ஒரே நேரத்தில் பயன்படக்கூடியது. இந்த திட்டத்தில் குறைந்த செலவில் அதிக கவரேஜ் வழங்கும். பிரிவு 80சி கீழ் வரிவிலக்கு கிடைக்கும்.

யூனிட் லிங்க்டு இன்சூரன்ஸ் பிளான்கள் (Unit Linked Insurance Plans)

இந்த திட்டம் முதலீடும், காப்பீடும் ஒரே சேவையில் இணைந்திருக்கும் திட்டம். பெற்றோர் தங்களது எவ்வளவு ரிஸ்க் எடுக்க முடியும் என்பதற்கு ஏற்ப Equity அல்லது Debt பங்குகளை தேர்வு செய்யலாம். இவை பங்குச் சந்தை தாக்கத்திற்கு உட்பட்டவையெனினும், நீண்ட காலத்தில் முதலீடு அதிகரிக்கும். மேலும் வரிவிலக்குகளும் கிடைக்கும்.

சரியான காலத்தில் செய்யப்படும் முதலீடுகள், உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை உறுதியாக்கும் மட்டுமல்லாது, உங்களுக்கே வரிவிலக்குகள் போன்ற நன்மைகளையும் தரும். இன்று ஒரு சிறிய முயற்சியாகத் தொடங்கினாலும், நாளை அது  பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு பெரிதும் கைகொடுக்கும்.