Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

EPFO : பிஎஃப் பேலன்ஸ் செக் செய்வது எப்படி?.. சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ!

EPF Balance Check | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் கீழ் ஊழியர்களின் பெயர்களில் கணக்கு தொடங்கப்பட்டு அந்த கணக்கில் அவர்களது மாத ஊதியத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு வரவு வைக்கப்படும். இந்த நிலையில், பிஎஃப் இருப்பை தொகையை தெரிந்துக்கொள்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

EPFO : பிஎஃப் பேலன்ஸ் செக் செய்வது எப்படி?.. சிம்பிள் ஸ்டெப்ஸ் இதோ!
மாதிரி புகைப்படம்
vinalin-sweety
Vinalin Sweety | Updated On: 10 Apr 2025 18:10 PM

இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் அங்கீகாரம் பெற்ற தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் பெயர்களில், EPFO (Employee Provident Fund Organization) ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் கீழ் கணக்கு தொடங்கப்பட்டு, அந்த கணக்கில் ஊழியர்களின் மாத ஊதியத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு வரவு வைக்கப்படும். அவ்வாறு மாதம் மாதம் வரவு வைக்கப்படும் தொகைக்கு இபிஎஃப்ஓ வட்டியையும் வழங்கி வரும். ஊழியர்கள் தங்களது பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்கவே இல்லை என்றால் அவர்களுக்கு வட்டியுடன் கூடிய அதிக பிஎஃப் தொகை கிடைக்கும்.

இபிஎஃப் இருப்பை இணையதளம் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் மாதம் மாதம் வரவு வைக்கப்படும் தொகையை ஊழியர்கள் தங்களது தேவைகளுக்காக எப்போது வேண்டுமானாலும் பணம் எடுத்துக்கொள்ளலாம். ஆனால், பெரும்பாலான ஊழியர்கள் இபிஎஃப்ஓவில் எவ்வாறு இருப்பை தெரிந்துக்கொள்வது என தெரியாமல் உள்ளனர். இந்த நிலையில், எளிய முறையில் இணையதளம் மூலம் பிஎஃப் இருப்பு தொகையை தெரிந்துக்கொள்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இபிஎஃப் இருப்பை இணையதள மூலம் தெரிந்துக்கொள்வது எப்படி?

  1. அதற்கு முதலில் இபிஎஃப்ஓ-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு EPFO செல்ல வேண்டும்.
  2. அதில் பணியாளர் பிரிவை கிளிக் செய்ய வேண்டும்.
  3. அதனை தொடர்ந்து அங்கு கொடுக்கப்பட்டுள்ள உறுப்பினர் பாஸ்புக் (Passbook) அம்சத்தை கிளிக் செய்ய வேண்டும்.
  4. இபிஎஃப் சந்தாதாரர்கள் (EPF Subscribers) தங்களது UAN (Universal Account Number) மற்றும் கடவுச்சொல்லை (Password) உள்ளிட்டு பிஎஃப் பாஸ்புக்கை அனுகலாம்.
  5. அந்த பாஸ்புக் மூலம் ஊழியர்கள் தங்களத்ய் ஊழியர் வருங்கால வைப்பு நிதி இருப்பை தெரிந்துக்கொள்ளலாம்.

மேற்குறிப்பிட்ட இந்த நடைமுறையை பின்பற்றி ஊழியர்கள் தங்களது பிஎஃப் தொகையின் இருப்பை சுலபமாக தெரிந்துக்கொள்ளலாம். அதுமட்டுமன்றி, நிறுவனத்தின் சார்பில் இருந்து எவ்வளவு பணம் வரவு வைக்கப்படுகிறது, மாதம் மாதம் முறையாக பணம் வரவு வைக்கப்படுகிறதா, அதற்காக வட்டி வரவு வைக்கப்படுகிறதா என்பது குறித்தும் தெரிந்துக்கொள்ளலாம்.

குறுஞ்செய்தி மூலம் பிஎஃப் இருப்பை தெரிந்துக்கொள்வது எப்படி?

இபிஎஃப்ஓ உறுப்பினர்கள் 7738299899 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பியும் சுலபமாக பிஎஃப் இருப்பை தெரிந்துக்கொள்ளலாம். உறுப்பினர்கள் தங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து இந்த எண்ணுக்கு AN EPFOHO ENG என டைப் செய்து குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். ENG என்பது ஆங்கிலத்தில் தரவுகளை கோர பயன்படுத்தப்படுவது. உங்களுக்கு தமிழில் தரவுகளை தெரிந்துக்கொள்ள வேண்டும் என்றால் AN EPFOHO TAM என குறுஞ்செய்தி அனுப்பலாம். இந்த குறுஞ்செய்தியை அனுப்பிய ஒருசில நிமிடங்களில் உங்களது மொபைல் எண்ணுக்கு உங்கள் பிஎஃப் இருப்பு குறித்த தகவல்கள் வந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிக்கன் பிரியாணி செய்தால் சொதப்பலா? இந்த 5 தவறுகளை தவிருங்கள்!
சிக்கன் பிரியாணி செய்தால் சொதப்பலா? இந்த 5 தவறுகளை தவிருங்கள்!...
த்ரிஷாவின் பிறந்த நாளிற்கு வாழ்த்து சொன்ன தக் லைஃப் படக்குழு
த்ரிஷாவின் பிறந்த நாளிற்கு வாழ்த்து சொன்ன தக் லைஃப் படக்குழு...
வெங்கட்பிரபு படத்தில் சிவகார்த்திகேயன்?.. ரசிகர்கள் உற்சாகம்!
வெங்கட்பிரபு படத்தில் சிவகார்த்திகேயன்?.. ரசிகர்கள் உற்சாகம்!...
அதிமுக - பாஜக கூட்டணி மகிழ்ச்சியான கூட்டணி.. தமிழிசை பெருமிதம்!
அதிமுக - பாஜக கூட்டணி மகிழ்ச்சியான கூட்டணி.. தமிழிசை பெருமிதம்!...
ஒரு முறை முதலீடு செய்தால் மாதம் மாதம் வருமானம் - அசத்தல் திட்டம்!
ஒரு முறை முதலீடு செய்தால் மாதம் மாதம் வருமானம் - அசத்தல் திட்டம்!...
திரையில் ஓடாத டைமர்.. தவறான முடிவால் அவுட்டான பிரெவிஸ்..!
திரையில் ஓடாத டைமர்.. தவறான முடிவால் அவுட்டான பிரெவிஸ்..!...
ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இருக்கவே இருக்கு கவா கவா மூலிகை...
ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இருக்கவே இருக்கு கவா கவா மூலிகை......
ஷூட்டிங் தொடங்கும் முன்பே ஓடிடியில் நல்ல விலை போன சூர்யா படம்
ஷூட்டிங் தொடங்கும் முன்பே ஓடிடியில் நல்ல விலை போன சூர்யா படம்...
வீட்டில் பாதுகாப்பாக வாழ முடியாத திராவிட மாடலா இது? சீமான் கேள்வி
வீட்டில் பாதுகாப்பாக வாழ முடியாத திராவிட மாடலா இது? சீமான் கேள்வி...
நன்மைகள் விளையும்.. குரு பெயர்ச்சிக்கான கடக ராசி பலன்கள்!
நன்மைகள் விளையும்.. குரு பெயர்ச்சிக்கான கடக ராசி பலன்கள்!...
திரையரங்குகளில் போட்டிப்போடும் காமெடி நடிகர்களின் படங்கள்
திரையரங்குகளில் போட்டிப்போடும் காமெடி நடிகர்களின் படங்கள்...