பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: உலக தலைவர்களின் கண்டனங்கள்

Kashmir Terror Attack: ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 28 பேர் பலியாகியதையடுத்து, உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள் தங்கள் ஆழ்ந்த இரங்கலையும், கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீசு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்டோர் தனது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: உலக தலைவர்களின் கண்டனங்கள்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் உலக தலைவர்கள் இரங்கல்

Published: 

23 Apr 2025 15:02 PM

ஜம்மு – காஷ்மீர் (Jammu and Kashmir) மாநிலத்தின் பஹல்காம் (Pahalgam) மாவட்டத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணுவ சீருடை அணிந்த பயங்கரவாதிகள் சுற்றுலா தலத்தில் திடீரென தாக்குதல் நடத்தியதில், 28 பேர் உயிரிழந்தனர். இவர்களில் இருவர் வெளிநாட்டவர்கள் எனவும் தகவல் வெளியானது. இந்த தாக்குதலுக்குத் தொடர்ந்து உலகின் முக்கியமான நாடுகள் மற்றும் தலைவர்கள் கடும் கண்டனம் (Kashmir attack: Foreign leaders condemn) தெரிவித்துள்ளனர்.

ஹல்காம் பயங்கரவாத தாக்குதல்: உலக தலைவர்கள் இரங்கல்

இந்த கொடூரத் தாக்குதலுக்குப் பிறகு, ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீசு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோன், ஜெர்மனி சான்ஸலர் ஒலாஃப் சோல்ஸ், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், இத்தாலி பிரதமர் ஜோர்ஜியா மெலோனி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்டோர் தனது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய யூனியனின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், ஐரோப்பிய கமிஷனின் துணைத் தலைவர் காயா காலாஸ், மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சகம் போன்ற முக்கிய நிறுவனங்களும் தங்கள் கண்டனங்களை வெளியிட்டுள்ளன.

மேலும், பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர், நியூசிலாந்து வெளியுறவுத் துறை அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ், உக்கிரைனின் வெளியுறவுத்துறை அமைச்சர் அந்த்ரி சிபிஹா, ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வோங் உள்ளிட்ட பலர், தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்காக தங்கள் இரங்கலையும், புணர்நலம் வேண்டிய பிரார்த்தனையையும் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவிலுள்ள பல தூதரகங்கள், உட்பட ஐரோப்பிய ஒன்றியம், இஸ்ரேல், ரஷ்யா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் இந்திய தூதர்கள், பதற்றத்துடன் இந்தியாவுடன் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதலுக்கான பதிலடியாக, சர்வதேச சமூகம் இந்தியாவுடன் உள்ள ஒற்றுமையையும், பயங்கரவாதத்திற்கு எதிரான வலுவான எதிர்ப்பையும் வலியுறுத்தியுள்ளது. இது ஒற்றுமையை வெளிப்படுத்தும் ஒரு முக்கியக் கட்டமாக பார்க்கப்படுகிறது.

 

அமெரிக்க அதிபர் கண்டனம்

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் இரங்கல் செய்தி

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பிய செய்தியில், தாக்குதலால் ஏற்பட்ட இழப்புக்காக ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தார்.

“எனது அன்பு நண்பர் பிரதமர் மோடி, பஹல்காமில் நிகழ்ந்த இந்த காட்டுமிராண்டி தாக்குதலால் நான் மிகுந்த துயரமடைந்துள்ளேன். அப்பாவி மக்கள் மீது நடந்த இந்த செயல் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாதது. பாதிக்கப்பட்டவர்களும், அவர்களது குடும்பங்களும் எங்கள் எண்ணங்களிலும் பிரார்த்தனையிலும் உள்ளனர். பயங்கரவாதத்திற்கு எதிரான உங்கள் போராட்டத்தில் இஸ்ரேல் இந்தியாவுடன் உறுதியாக நிற்கிறது.”

ஆஸ்திரேலியாவின் பிரதமர் கண்டனம்

 

ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரசின் கண்டனம்

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரசும் இந்த தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளார். அவரது செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:

“பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் எந்த சூழ்நிலையிலும் நியாயப்படுத்த முடியாதவை. இந்த பயங்கரவாத தாக்குதலால் பலரும் உயிரிழந்தது மிகுந்த வருத்தத்திற்குரியது.”

இலங்கை அரசின் நெஞ்சார்ந்த இரங்கல்

இலங்கை அரசு தனது அறிக்கையில் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாதச் சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்துள்ளது.

“இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறோம். பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.