போப்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்? AI உருவாக்கிய படத்தை பகிர்ந்ததால் சர்ச்சை
Trump AI Pope Pic : போப் பிரான்சிஸ் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட சில நாட்களுக்கு பிறகு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், போப் போன்ற தோற்றத்தில் இருக்கும் ஏஐ படத்தை பகிர்ந்துள்ளார். இது சமூக வலைதளங்களில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. சிலர் இதனை நகைச்சுவையாக எடுத்துக்கொண்டாலும், சிலர் அவர் மதத்தை அவமதித்ததாக விமர்சித்துள்ளனர்.

டொனால்ட் டிரம்ப்
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (Pope Francis) கடந்த ஏப்ரல் 21, 2025 அன்று காலமானார். அவரது உடல் 5 நாட்கள் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட நிலையில் அவரது இறுதி சடங்கானது ஏப்ரல் 26, 2025 அன்று நடைபெற்றது. அவரது இறுதி சடங்கில் உலக தலைவர்கள் பலரும் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். வாடிகனில் நடைபெற்ற போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டதற்குப் பின், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) நான் அடுத்த போப்பாக ஆக விரும்புகிறேன் என தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, மே 3, 2025 அன்று, அவர் போப் போன்ற தோற்றத்தில் இருக்கும் ஏஐ (AI) மூலம் உருவாக்கப்பட்ட தனது படத்தை ட்ரூத் சோஷியல் என்ற தனது பக்கத்தில் பகிர்ந்தார்.
ஏஐ உருவாக்கிய போட்டோவை பகிர்ந்த டிரம்ப்
— The White House (@WhiteHouse) May 3, 2025
அந்தப் படம் தற்போது வைரலாக பரவி வருகிறது. அதில் ட்ரம்ப், போப் போன்று உடையணிந்து அவரைப் போல தோற்றமளிக்கும் ஏஐ உருவாக்கிய புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். அவரது இந்தப் பதிவை வெள்ளை மாளிகை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த படம் சமூக வலைதளங்களில் கலவையான எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. சிலர் இதை நகைச்சுவையாக எடுத்துக்கொண்டாலும், மற்றவர்கள் அதைப் பார்த்து அதிருப்தி தெரிவித்துள்ளனர். குறிப்பாக, சில நெட்டிசன்கள் இதை மதத்தை இழிவுபடுத்தும் செயல் என கண்டித்துள்ளனர்.
டிரம்ப்பின் செயலுக்கு வலுக்கும் எதிர்ப்பு
As President of the United States, posting a picture of himself as Pope a few days after the Pope’s death is neither funny, nor does it present statesmanship and respectful behavior.
Rather, it shows the boundless arrogance and childish behavior of a man who believes he is…
— Lepus (@LepusNox) May 3, 2025
இதுகுறித்து கமெண்ட் செய்துள்ள ஒருவர், “போப்பை வழிபடுபவர்களுக்கு இது கவலையை அளிக்கும். ஒரு நாட்டின் அதிபராக இருந்து கொண்டு அவர் இவ்வாறு செய்யக் கூடாது என தெரிவித்தார். மற்றொருவர், ‘போப்பின் மரணத்துக்கு சில நாட்களுக்குப் பிறகு, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இது போன்ற போட்டோவை பகிர்வது குழந்தைத்தனம் என்று குறிப்பிட்டார். அவர் தன்னை எல்லாவற்றிற்கும் மேலானவராக காட்டிக்கொள்கிறார் என பதிவிட்டுள்ளார்.
அடுத்த போப்பை தேர்வு செய்யும் நிகழ்வு விரைவில் தொடங்க இருக்கிறது, மேலும் தேர்வு செய்யப்பட்டதும் உடனடியாக வாட்டிகானில் அவர் அடுத்த போப்பாக முன்மொழியப்படுவார். இந்தச் சூழ்நிலையில் ட்ரம்ப் எடுத்த இந்தச் செயல்பாடு சர்வதேச அளவில் பெரும் விவாதங்களை உருவாக்கியுள்ளது.